50 ஓவர் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி வீரர்கள்:
- இயன் மோர்கன் (தலைவர்)
- ஜோஸ் பட்லர்(கீப்பர்)
- மோயின் அலி
- ஜோப்ரா ஆர்ச்சர்
- ஜானி பேர்ஸ்டோவ்
- டாம் குர்ரன்
- இயம் டாவ்ஸன்
- லியம் பிளங்கட்
- அடில் ரஷீத்
- ஜோ ரூட்
- ஜேஸன் ராய்
- பென் ஸ்டோக்ஸ்
- ஜேம்ஸ் வின்ஸ்
- கிறிஸ் வோக்ஸ்
- மார்க் வுட்
கிட்டத்தட்ட கச்சிதமான, எதிர்காலத்துக்கான அணி என எல்லா விமர்சகர்களாலும் கொண்டாடப்படும் அணியாக இங்கிலாந்து கடந்த சில ஆண்டுகளாய் இருந்து வருகிறது. இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியும் அப்பழுக்கற்றதாகவே தோன்றுகிறது.
இதன் பொருள், இங்கிலாந்து உலகெங்கும் போய் எல்லா ஆட்டத் தொடர்களையும் வென்று கோப்பைகளை மூட்டை மூட்டையாய் சுமந்து வருகிறது என்றல்ல. மாறாக இங்கிலாந்தின் ஆட்டமுறை சமீபமாக ஒரு புரட்சிகரமான குறுக்கீட்டை கிரிக்கெட்டில் ஏற்படுத்தி உள்ளது. உ.தா., பவர்பிளே என்பது 50 ஓவர் ஆட்டங்களில் கொண்டு வரப்பட்டதும் 30-40 ஓவர்களுக்குள் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்கத் தொடங்கினர். இது பேட்டிங்கை பரபரப்பாக்கும், சுவாரஸ்யமாக்கும் என முதலில் ஐசிசி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால் மாறாக முதல் 20 ஓவர்கள் மந்தமாகி, 20-40 வரையிலான ஓவர்களில் மட்டும் அதிக ரன்கள் அடித்தார்கள். 50 ஓவர்களின் இறுதியில் சராசரி இலக்கு 300இல் இருந்து 320-30க்கு நகர்ந்தது. ஐ.சி.சி எதிர்பார்த்த பரபரப்பான திகைப்பான ஆட்டத்தை இங்கிலாந்து மட்டுமே ஆடியது.
முதல் ஓவர் முதல் கடைசி ஓவர் வரை இங்கிலாந்து பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கியது. ஒற்றை, இரட்டை ரன்கள் ஓடுவதை இரண்டாம் பட்சமாக்கியது. இதற்குத் தோதாக எண் 10 வரை ஆக்ரோசமாய் மட்டையாடும் பேட்ஸ்மேன்களையும் ஆல்ரவுண்டர்களையும் இங்கிலாந்து அணி பயன்படுத்தியது; அவுட் ஆகும் பயமின்றி அடித்தாடுமாறு வீரர்களையும் ஊக்கப்படுத்தியது.

இந்த ஸ்டைலினால் இங்கிலாந்தால் ஒவ்வொரு ஆட்டத்திலும் 400 ரன்களை அடிக்க முடிந்தது. 350 போன்ற இலக்குகளை சுலபத்தில் விரட்டிச் சென்று அடைய முடிந்தது. தட்டையான ஆடுதளங்களில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடுவது மிக ஆபத்தான ஒன்றாக மாறியது. ரிஸ்க் எடுக்காமல் ரன்களை ஓடிச் சேமித்து இறுதியில் மட்டுமே பயமின்றி அடித்தாடும் பாணியை பின்பற்றும் இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் இங்கிலாந்துக்கு எதிராய் ஆடும்போது முயலுடன் ஆமை ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டது போல் உணர்ந்தன; முயல் ஆர்வமிழந்து தூங்கினால் மட்டுமே ஆமைகளால் இனி ஜெயிக்க முடியும் எனும் நிலை ஏற்பட்டது.
இதனாலே இங்கிலாந்தில் நடக்க இருக்கும் இந்த உலகக்கோப்பையில் ஒவ்வோர் அணியும் முறியடிக்க வேண்டிய சாதனை அணியாக இங்கிலாந்து இருக்கும் என மக்கள் பரவலாக பேசி வருகிறார்கள்.
சமீபத்தில் முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கிளைவ் லாயிட் பேசும்போது தரமான ஆல்ரவுண்டர்கள் அதிகமாய் உள்ள அணி இந்த உலகக்கோப்பையில் ஜொலிக்கும் எனச் சொன்னார். இங்கிலாந்து அணியில் ஏகப்பட்ட ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். வேக வீச்சென்றால் பென் ஸ்டோக்ஸ், டாம் குர்ரன், வோக்ஸ், மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர்; ஸ்பின் என்றால் மோயின் அலி, அடில் ரஷீத் மற்றும் லியம் டாஸன். மொத்தம் ஆறில் இருந்து ஏழு ஆல்ரவுண்டர்கள். ஆல்ரவுண்டர்கள் அல்லாத பவுலர்களை மட்டும் பார்ப்போம். லியம் பிளங்கட். இவர் மட்டையாட்டத்தை பொறுத்தமட்டில் இதுவரை 82 ஆட்டங்களில் ஒரு அரைசதம் அடித்துள்ளார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் இவர் 22 அரைசதங்களும் 3 சதங்களும் அடித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணியில் உள்ளதிலேயே மட்டமான பேட்ஸ்மேன் என்றால் மார்க்வுட். இவர் கூட டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் அடித்திருக்கிறார். இதன்பொருள் இங்கிலாந்து அணியை நீங்கள் 30 ஓவர்களில் 200க்கு ஐந்து விக்கெட்டுகள் என சாய்த்தாலும் அவர்களால் மீண்டும் வந்து சுலபத்தில் 330-40 ரன்களைஅவர்களால்அடிக்க முடியும் என்பது.
ஆல்ரவுண்டர்கள் விசயத்தில் மட்டுமல்ல ஸ்பின் பந்து வீச்சிலும் இங்கிலாந்து வலுவாக உள்ளது. அடில் ரஷீத் மற்றும் மொயின் அலி இருவருமே கடந்த சில மாதங்களாய் நன்றாய் பந்து வீசி சரியான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்கள்.
ரஷீத் சற்று காயமபட்டு பின்னடைந்துள்ளார் என்றாலும் இந்த உலகக்கோப்பையின் இரண்டாம் பருவத்தில் ஆடுதளங்கள் மெத்தனமாகும் என எதிர்பார்க்கப்படுவது போல நடந்தால் இங்கிலாந்தின் ஸ்பின்னர்கள் கண்கொத்திப் பாம்புகளாய் தயாராக இருப்பார்கள்.
மேலும் படிக்க: https://tamil.asiavillenews.com/article/world-cup-england-team-analysis-6390
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்