முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணம் ஒரு அழகிய உருவகம்

தற்கொலை எண்ணம் தீவிரமான போது என்ன செய்தேன் என ஒரு இளம் எழுத்தாளர் ஒரு பதிவிட்டிருந்தார். அவருக்கு நான் எழுதிக் கொண்டது:


"ஒரு நாவல் எழுத முயற்சி பண்ணுங்க. தினமும் 15 நிமிடங்கள் குறைந்தது அதில் செலவிடுங்க. சரியாயிடும். எழுத்தாளனுக்கு மருந்து எழுத்து மட்டுமே. வேறெதிலும் தேடாதீங்க.


 காசு, சொத்து, செக்ஸ் எல்லாம் வேஸ்ட். அதெல்லாம் சாமான்யர்களுக்கானது. "வாழ்க்கை என்றால் போராடித்தான் வெல்ல வேண்டும்' என அறிவுரைப்பவர்களை புறக்கணியுங்கள். ஏனென்றால் அதெல்லாம் முட்டாள்தனம். மரணம் குறித்து சிந்திப்பதில் எந்த தப்பும் எதிர்மறையும் இல்லை. 


மரணம் என்பது காலத்தைக் கடந்து செல்வதற்கான ஒரு உருவகம். அனந்தரத்தின் வாசல் அது. இலக்கியம் வாசிக்கும் போதும் எழுதும் போதும் நாம் மரணம் எனும் வாசலை நோக்கித் தான் நடையிடுகிறோம். மரணம் நம் நாவில் அதக்கிக் கொள்ளும் புளிப்பு மிட்டாய். என்றும் சுகந்தம் குறையாத அழகிய வாடாமலர் அது. நாம் காலமெல்லாம் மரணத்தைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கக் காரணம் அது ஒரு அழகான பயமூட்டும் இருட்டு என்பது. அது கடவுளுக்கு சமானமானது.


 நம் பண்பாட்டில் சிவன் அழிவின், சாவின் தெய்வம் அல்லவா. அவன் சுடுகாட்டில் வசிப்பவன் அல்லவா. ஏன்? அவனும் எழுத்தாளனைப் போன்றவனே. காலத்தின் விளிம்பில் குடியிருக்கிற எவனும் சிவனே. ஆகையால் இதை ஒரு மனப்பிரச்சனை என கருத வேண்டாம். மரணத்தைக் குறித்து சிந்திப்பது நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்ட யாரும் செய்வதே. மரணம் எனும் அந்த அழகிய தோரண வாயிலைத் தொட்டு விட வேண்டும் என நம்மில் ஒவ்வொருவரும் தவித்தபடியே இருக்கிறோம். உலகின் மிகப்பெரிய தவிப்பு அதுவே. அதை ஒருவன் எழுத்து போன்ற கலைநாட்டங்கள் வழி செய்யலாம், அல்லது செக்ஸ், காதல், வன்முறை மூலம் செய்யலாம். இரண்டில் முதலாவதே சிறந்தது என நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும். 

அதனால் கவலை வேண்டாம்.


தாராளமாக மரணத்தில் ஆழ்ந்து செல்லுங்கள். அப்போது மரணம் ஒரு அழகிய கற்பனை என உறைக்கும். அதன் திகைப்பும் கிளர்ச்சியும் வாழ்வை தீவிரமாக அனுபவிக்க உதவும். மரணம் இல்லாதிருந்தால் வாழ்வு அலுப்பாகும், அர்த்தமற்றதாகும். வாழ்த்துக்கள்!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...