முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளுநர் எனும் மக்களாட்சி விரோத கருத்தமைவு



Puducherry Chief Minister V Narayanasamy on Saturday continued his sit-in protest near Raj Nivas, demanding the Central government recall Lieutenant Governor Kiran Bedi.

# ஆளுநர் எனும் இந்த காலனியவாத கால நடைமுறையை ரத்து செய்வது அவசியம். அதற்குப் பதிலாக ஆளுநர் எனும் ஒருவர் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் பட்சத்திலும் அவர் அதே மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவாகவும், (ஆளும் அல்லது எதிர்க்கட்சியின்) குறைந்தது நாற்பது எம்.எல்.ஏக்களின் ஒப்புதல் பெற்றவராகவும், கூடுதலாக மத்திய மாநில அரசுகளின் ஒப்புதலையும் பெற்றவராக இருக்க வேண்டும் எனும் புதுச் சட்டத்தை இயற்ற வேண்டும்.

 ஒருவேளை இரண்டு தரப்பாலும் அப்படி ஒருவரை ஒத்திசைந்து நியமிக்க முடியவில்லை எனில் தற்காலிகமாக அப்பதவியை காலியாக வைக்கலாம். அதே நேரம், இங்கு மத்திய அரசுக்கு செக் வைக்கும் பொருட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆளுநர் நியமனம் செய்யப்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தலில் பங்கேற்கும் தகுதியை அந்த ஆளுநருடைய கட்சி இழக்கும் என கூடுதலாய் ஒரு சாத்தியத்தை கொண்டு வரலாம். இது மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசை அனுசரித்து செல்லவும், மாநில அரசின் அல்லது மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற கட்சி ஒன்றின் மக்கள் பிரதிநியை மட்டுமே ஆளுநராய் நியமிக்கவும், நியமிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் போல பெண்களுடன் கூத்தடிப்பவராகவோ, கிரண் பேடி போல இடையூறு செய்பவராகவோ இல்லாமல் இருக்க உதவும். ஆளுநர் என்பவர் ஆட்சியை எப்போது வேண்டுமெனிலும் கவிழ்ப்போம் என அச்சுறுத்தும் கருவியாக இருப்பதையும் முடிவுக்கு கொண்டு வரும். 

மேலும் மக்கள் தேர்ந்தெடுக்கப்படாதவர் மக்களை ஆளும் தகுதி ஒரு நெருக்கடி நிலையில் அடைவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மறைமுகமாக கட்டுப்படுத்தும் சூத்திரதாரியாக மாறுவது மக்களாட்சிக்கு விரோதமானது அல்லவா!

ஆளுநர் எனும் சிருஷ்டியை ஒரு நிழலுலக மாபியா தலைவரைப் போல பயன்படுத்தும் போக்கு காங்கிரசிடமிருந்தே ஆரம்பித்தது, பாஜக அதை வெளிப்படையாக செய்கிறது என்பதே வித்தியாசம்.

கருத்துகள்