முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல்: பறிபோகும் மாநில உரிமைகள்



மேற்கு வங்கத்தில் நடந்துள்ள தேர்தலில் பல அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வைக்கிறார்கள். 13 வாக்குச்சாவடிகளை பாஜகவினர் கைப்பற்றியதாக சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல, பாஜக செயல்பாட்டாளர்கள் எனும் பெயரில் கணிசமான ரௌடிகளை உத்தரபிரதேசத்தில் இருந்தும், பீகாரில் இருந்தும் அவர்கள் களமிறக்கியிருக்கிறார்கள். இதை நேரில் கண்ட முதல்வர் மம்தாவை ஒரு வாக்குச்சாவடிக்குள் சிறை வைத்து பிரச்சனை பண்ணி இருக்கிறார்கள். CPRF மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தார்கள் எனக் கூறிய மம்தா ஆளுநருக்கு போன் செய்து உதவி கேட்ட பின்னரே வெளியேற முடிந்தது. இந்த நிகழ்வு எனக்கு அண்மையில் யோகியாரின் கோவை வருகையின் போது நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தியது - அந்த கூட்டத்தில் தென்பட்டவர்கள் கணிசமாக வடமாநிலத்தவர்களே, ஊர்வலத்தில் தென்பட்டவர்கள் உள்ளூர் குஜராத்திகளா அல்லது இறக்குமதியான உ.பி, பீகாரிகளா எனத் தெரியவில்லை. ஆனால் பிற மாநில தேர்தல் பணிகளின் போது உ.பி, பீகாரில் இருந்து பெருமளவில் ஆட்களை இறக்கி பிரச்சாரத்துக்கு, கலவரத்துக்கு, வாக்குச்சாவடி கைப்பற்றலுக்கு பயன்படுத்துகிற போக்கை பாஜக ஆரம்பித்துள்ளது அப்பட்டமாகி உள்ளது. இத்துடன் வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்களிக்கும் உரிமையை அளிப்போம் என அவர்கள் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் உ.பி பாஜகவினரை வைத்தே பிரச்சாரம், கலவரம், வாக்களிப்பு என இந்தியா முழுக்க தேர்தலை சமாளிக்கலாம் என நினைக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து உள்ளூர் வாக்காளர்களின் உரிமையையும் பறிக்க முடியாது எனினும் ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டி நெருக்கமாக செல்லும் தொகுதிகளில் உ.பி. பீகாரிய மக்களை வைத்து ஓட்டளிக்க செய்து பாஜக பக்கம் முடிவு சாய வைக்க முடியும். இதை பாஜக நாளை இந்தியா முழுக்க நிகழ்த்தினால் தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்ப்பதுடன் யாரும் குற்றச்சாட்டு எழுப்பாதபடி பார்த்துக் கொள்ளவும் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.

 தேர்தலின் போது மாநில உரிமைகள் இப்படி அப்பட்டமாக பறிக்கப்படும் நிலைமை இதுவரை வந்ததில்லை. இதுவரை தமிழகத்தில் உ.பிகாரர்கள், குஜராத்திகள் நூற்றுக்கணக்கான பைக்குளில் அச்சுறுத்தும் விதமாக ஊர்வலம் போவது நடந்ததுண்டா? உ.பியிலோ பீகாரில் தமிழர்கள் இப்படி கோஷமிட்டபடி ஊர்வலம் போக முடியுமா? அங்குள்ள கடைகள் மீது கல்லெறிந்து கலவரத்தை தூண்ட முயற்சியெடுக்க முடியுமா? ஒரு சில வடமாநிலங்கள் மட்டுமே முக்கியம், மிச்ச மாநிலத்தவர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனும் மனப்பான்மையுடன் பாஜக செயல்பட பிரதமர் மட்டும் அடிக்கடி திருக்குறளை தப்பும் தவறுமாக உச்சரித்து மேற்கோள் காட்டி கடுப்பேற்றுகிறார். மக்களாட்சி என்பது கேலிக்கூத்தாகி வருகிறது. இந்தித் திணிப்பு என்பது மேற்பூச்சு தான் - உ.பி, குஜராத்திய மாடலை அல்ல, அம்மாநிலங்களே இனி இந்தியா எனும் எண்ணத்துடன் திமிர்த்தனமாக இந்த நடுவண் அரசு நடந்து வருகிறது.


இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை. இப்போதைக்கு தேர்தலின் போது வெளிமாநில மக்கள் (மிக முக்கிய தேசிய தலைவர்களைத் தவிர) ஒரு மாநிலத்துக்குள் நுழைவதை தடை செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் போராட வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...