கோவையில் யோகியாரின் எழுச்சி உரையைக் கேட்டேன். ஸ்டிரைக்கை ஸ்ஸ்ஸ்ஸ்டிரைக் என்கிறார். ஷ சுத்தமாக வரவில்லை. ஷ்ரி நரேந்திர மோடியை ஸ்ரி நரேந்திர மோடி என்கிறார். கொரிடாரை கோரிடோ....ர் என ஒரு கிலோமீட்டருக்கு கொண்டு செல்கிறார். சுரக்ஷாவை சுரக்ஸா என்கிறார். ரக்ஸா என்கிறார். மாத்ரி ஷக்தியை 'ஸக்தி' என முழங்குகிறார். காதெல்லாம் கூசுகிறது. இதற்கு மோடியே மேல் - தினமும் நாக்கு வழித்து இந்தியை சுத்தமாக பேசுவார். இவர் இந்தியாவின் அடுத்த பிரதமாரானால் நான் அனுதினமும் இதையெல்லாம் கேட்கணுமே என நினைத்து இப்பவே நெஞ்சு பதறுது. அதுவும் அவர் டொமில்நாடு எனும் போது எனக்கு டுமீல் டுமீல் எனக் கேட்கிறது. நம்மை இந்தி கற்றுக் கொள்ள சொல்லும் முன் இவங்க ஏன் கொஞ்சம் இந்தியை ஒழுங்கா கத்துக்கக் கூடாது?
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கருத்துகள்