இந்த மாநில தேர்தல் முடிவுகளின் மிகப்பெரிய மகிழ்ச்சி திமுக கூட்டணியின் வெற்றி அல்ல, மேற்கு வங்கத்தில் தீதியின் பெருவெற்றி தான். ஏனென்றால் திமுக வெற்றியானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸை ஒழித்துக் கட்டி விட்டோம் என பாஜக சார்பு ஊடகங்கள் கொக்கரித்தன. மோடி "தீதி ஓ தீதி" என விடலைத்தனமாக பரப்புரையில் கூவினார். "எவ்வளவு லட்சம் பேர் என்னைப் பார்க்க வந்திருக்காங்க" என அகமகிழ்ந்து பேசினார். ஆனால் வங்காள வாக்காளர்கள் பாஜகவை "நீ அதே இடத்தில நின்னுக்கோ" என உட்கார வைத்து விட்டார்கள்.
மாறாக ஒருவேளை பாஜக வென்றிருந்தாலோ நிலைமை தலைகீழாகி இருக்கும் - குடியுரிமை திருத்தச் சட்டத்தை அங்கே உடனடியாக நடைமுறைப்படுத்தி அதற்கு மக்கள் பெருவாரியான ஆதரவைத் தந்து விட்டார்கள் என அவர்களே அறிவித்து, அடுத்து நாடு முழுக்க கொண்டு வந்திருப்பார்கள். நாடு முழுக்க பாஜக மற்றமை என கருதும் மக்கள் முகாம்களுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பார்கள். பல மாநிலங்கள் பாதி திறந்தவெளி சிறைச்சாலைகள் ஆகியிருக்கும். நம் சிறுபான்மை சொந்தங்களை கண்முன்னே அடிப்படை உரிமைகளை பறித்து விலங்குகளுக்கும் கீழாக நடத்தி இருப்பார்கள். மற்றொரு முள்ளிவாய்க்காலை இங்கு நிகழ்த்தி இருப்பார்கள். பாஜகவின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புக்கு மே.வ வாக்காளர்கள் சாணி அடித்திருக்கிறார்கள்! நாட்டை காப்பாற்றி இருக்கிறார்கள்! இதற்காகவே வங்காளிகளை போற்றுவோம்! வாழ்த்துவோம்!
இரு கோரிக்கைகள்!
1) இந்த இரண்டாம் அலை முடிந்த பிறகு பினராயி விஜயன், மமதா ஆகியோரை அழைத்து காங்கிரஸ், இடதுசாரிகள், தலித், சிறுபான்மை அமைப்புகளுடன் இணைந்து திமுக தமிழகத்தில் ஒரு பிரம்மாண்ட கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய அளவில் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கான அறிவிப்பாக, முற்போக்கு சக்திகளின் எழுச்சியாக இதை சித்தரிக்க வேண்டும்.
2) மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பாஜகவின் பின்னின்று வேலை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பழைய வரலாற்றை மறந்து தீதியுடன் நல்லுறவை பேண வேண்டும். பாஜகவை வெல்ல வைத்தால் இடதுசாரிகள் அங்கு ஒரேயடியாக மறைந்து போகும் எனும் எளிய உண்மையை இனிமேலாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக எதிர்ப்பு புள்ளியில் அவர்கள் இணைந்தால் மட்டுமே இனி மறுமலர்ச்சி அடைய முடியும்!

கருத்துகள்