முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஞானிகளும் கருணானந்த சாகரங்களும் தோன்றும் இடம்

ஒருவர் மானுடவாத கதைகளை எழுதினால் அந்த வடிவத்துக்கே உரிய கூறுகளை, உபகரணங்களை அவர் தவிர்க்க இயலாது. அதனால் அவர் மானுடவாதியோ, தன் கதைகளில் வரும் உயரிய விழுமியங்களின் பிரதிநிதியோ அதன் ஸ்போக் பெர்சனோ அல்ல. அவர் அவற்றைக் கையாள்கிற ஒரு கலைஞன். அவ்வளவே. இது கு. அழகிரிசாமி, பஷீர், தேவதேவன் ஆகியோருக்கும் பொருந்தும். இவர்கள் தம் கதைகள் வழி ஒரு தரிசனத்தை போதிப்பதாக நாம் மயக்கம் கொண்டால் அவர்களை சுலபத்தில் வாழும் தெய்வங்களாக, வள்ளலார்களாக மாற்றி விடுவோம். வண்ணதாசன் மலரினும் மெல்லியவராக இருப்பார். தேவதச்சன் ஜென் துறவியாகி விடுவார். மனுஷ்யபுத்திரன் நந்தவனத்துக் கிருஷ்ணனாகி விடுவார். தேடிப் போனால் இவர்கள் சாதாரண மனிதர்களே. இவர்கள் படைப்புகளை நிகழ்த்தியவர்கள், படைப்பு வழி எதையும் சொன்னவர்கள் அல்ல. இந்த வித்தியாசம் முக்கியம்.

கனிவு, கருணை போன்றவை மானுட நேயத்தின் பகுதியாக வருகின்றன. அவை அவர் உணர்த்தும் விழுமியங்கள் அல்ல ஒருவித கருவிகள், உருவகங்கள். டிராமாவை உருவாக்க பயன்படுத்தப்படுபவை. இந்த சட்டகத்துக்கு வெளியே அவற்றுக்கு மதிப்பில்லாத போது அவர் அவற்றைப் பற்றி  - அது பஷீரோ அழகிரிசாமியோ பிரபஞ்சனோ, வேறேதாவது ஒரு மானுடவாத படைப்பாளியோ - எழுதினார் என்பது தவறானது. ஏனென்றால் மனிதநேய, மானுடவாத எழுத்து வடிவை தேர்ந்தெடுத்துக் கொண்டால் இதையெல்லாம் நம்பாத நானும் கூட அப்படியே எழுதியாக வேண்டும்.
 ஒரு துப்பறியும் கதையை எழுதிய படைப்பாளியின் நோக்கம் துப்பறிவது என நாம் கூறுவது அல்ல தானே? Pauline  Raege எனும் ஆன் செசில் எழுதிய முக்கியமான படைப்பு The Story of O. அதைப் படித்து விட்டு அவர் பெண்கள் தாம் துன்புறுத்தப்படுவதை முன்வந்து ஏற்கிறார்க்ள், தம்மைக் கட்டி வைத்து பலாத்காரம் பண்ணுகிறவர்களை உள்ளூர காதலிக்கிறார்கள் எனச் சொன்னவர், சேடோமெசோக்கிசத்தை முன்வைத்தவர் எனும் முடிவுக்கு நாம் வரலாகாது. அப்படி பழிக்கு ஆளாகக் கூடும் என பயந்து தான் அவர் ரொம்ப காலம் தன் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்தார்.
ஒரு வடிவத்துக்குள் ஒரு படைப்பாளி இயங்குகிறான், அப்போது அவன் தனக்கான வேடங்களைப் பூண்டு கருவிகளை எடுத்துக் கொண்டு தன்னிடம் எதிர்பார்க்கப்படும் ஒன்றை நிகழ்த்துகிறான்.  அந்த கருவிகளோ சொல்லப்படும் விசயமோ அவனுடையது அல்ல. இப்படி பார்க்காத பட்சத்தில் நாம் படைப்பாளி ஒன்றை நம்பியதாக, கூறியதாக நம்பி அவரை மகத்துவப்படுத்தவோ இழிவுபடுத்தவோ செய்வோம். ஒன்று எழுத்தாளர்கள் சூபி ஞானிகள், கருணை தெய்வங்கள், ஒரு இலை விழுந்தால் கூட நடுங்கும் மென்னுணர்வாளர்கள், ரேப்பிஸ்ட்கள், கொடூரமானவர்கள் என பலதரப்பட்ட முடிவுகளை எட்டுவோம். இவை எல்லாம் சுத்த பேத்தல்கள். சுருக்கமாக சொல்வதானால் பிரதி வேறு, படைப்ப்பாளி வேறு. பொம்மலாட்டக் கலைஞன் வேறு, அவனுடையபொம்மை வேறு. 
இதை நான் முதன்முதலாகக் கூறவில்லை. உலகளவில் ஒரு நூறாண்டுக்கு மேலாகவும் தமிழில் அரை நூற்றாண்டாகவும் இது விரிவாக எழுதப்பட்டு விட்ட ஒன்றாகும். ஆனாலும்
தமிழ்ச் சூழலில் இதை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி வருகிறது என்பதை நினைத்தால் தான்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...