முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தப்பிப் பறந்த சிட்டு




ஒரு வாசகர் அழைத்து ஆச்சரியமானதொரு செய்தியை சொன்னார் - அவர் மென்பொருள் துறையில் பணி செய்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி இருக்கிறது. பெண் பார்க்க செல்லும் போது “உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று இவர் கேட்டதற்கு அவள் “எனக்கு சொத்து, பணம் எல்லாம் முக்கியமில்ல, என்னை அன்பா வச்சிக்கிட்டா போதும்” என சொல்லிட இவர் “அடடா நமது வாழ்க்கைக்கு ஏற்ற பெண்கள் இவள் தான்” என மகிழ்ந்து ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையே அப்பெண்ணின் மற்றொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவர் ஊரில் உள்ள தன் குடும்ப வீட்டை மறுசீரமைத்துக் கட்ட நினைத்திருக்கிறார். அதற்கு பணம் போதாமல் போக தன் அம்மாவின் பணம் மற்றும் சிலரிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு வீட்டை செம்மையாக திருத்தி எழுப்பியிருக்கிறார். அப்போது இப்பெண் இவரை அழைத்து “ஏன் உங்களிடம் 25 லட்சம் கூட சேவிங்க்ஸாக இல்லையா? இப்படித்தான் நகையை விற்பீர்களா?” என்று பிரச்சினை பண்ணியிருக்கிறாள். இதே போல தொடர்ந்து பணம் குறித்து பல்வேறு விசாரணைகள், மிரட்டல்கள், எதையாவது மறுத்துப் பேசினால் அழுது ஒரே டார்ச்சர். இவரும் அவளுக்கு முதிர்ச்சியில்லை, வீட்டில் வளர்ப்பு சரியில்லை போல என பொறுத்திருக்கிறார். இவரது அம்மாவும் அவளை அழைத்து அறிவுரைத்திருக்கிறார். அவளோ தொடர்ந்து அதே போல மிரட்டல், கத்தல், அழுகை என நவரசங்களை காட்டி கலங்கடிதிருக்கிறார். கடைசியாக திருமணத்துக்கு முன்பு இவரது அம்மா, சகோதரி மற்றும் உறவினர்களுக்கு புது துணியெடுத்துக் கொடுத்ததற்கு “ஏன் இப்படி உன் பணத்தை வீணடிக்கிறாய்? இப்போதே இப்படியென்றால் கல்யாணத்துக்குப் பின்னால் எப்படி கட்டுப்பாடாக இருப்பாய்? உன்னைக் கட்டிக்கொண்டு நான் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?” எனக் கேட்டு தகராறு பண்ணியிருக்கிறார். இவரால் திருமணம் இவ்வளவு நெருங்கி வந்த பிறகு அதை ரத்து பண்ணவும் மனம் வரவில்லை. அது தவறு எனும் உறுத்தல். இன்னொரு பக்கம் அப்பெண்ணின் டார்ச்சரால் நிம்மதியே இல்லை. என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் தத்தளித்தபடி இருந்தவர் பேஸ்புக்கில் என் பதிவைப் படித்து மனம் தெளிந்திருக்கிறார். அப்பெண்ணை அழைத்து “முடியாது” என்று உறுதியாக சொல்லி திருமணத்தையும் ரத்து பண்ணியிருக்கிறார். 

இதை அவர் தன் நண்பர்களிடம் சொன்ன போது “நல்ல வேளை கல்யாணத்துக்கு முன்னாலே தப்பித்து விட்டாய்” என்று பாராட்டியிருக்கிறார்கள். நானும் “நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க” என்று சொன்னேன். “என் நண்பர்கள் பலரும் அவஸ்தைப்படுகிறார்கள். ஆனால் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள், தப்புக்க முடியாது” என்று சிரித்தார். “உங்களுக்கு நன்றி சொல்வதற்காகத் தான் அழைத்தேன்.” என்றார்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு சாகித்ய அகாடெமி யுவபுரஸ்கார் கிடைத்த போது நான் இந்தளவுக்கு மகிழ்ந்ததில்லை. என் படைப்புகள் பலமுறை பாராட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் எனக்கு கிடைத்த உச்சபட்ச பாராட்டு இது தான். என்னால் முதன்முதலாக இச்சமூகத்துக்கு ஒரு பயன் ஏற்பட்டிருக்கிறது. இது போதும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...