முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேள்வி-பதில் 3

 கேள்வி: ஹாய் அபிலாஷ். இந்த பின்நவீனத்துவம் என்றால் என்ன? சாதாரண எழுத்தாளர்களால் பின்நவீன கதைகள் எழுத முடியுமா?

பதில்: பின்நவீனம் என்பதை அ-நவீனம் எனப் புரிந்து கொள்ளலாம். உளவியல் வழியாகப் புரிந்து கொள்வதென்றால் இந்த வாழ்வில் நாம் ஒரு நோக்கத்துக்காக வாழ்கிறோம். இலக்கை நோக்கி ஓடுவதும், அதை அடைவதுமே வாழ்க்கை. இவ்வாறு புரிந்துகொள்ளும் போதே காலம், வெளி சார்ந்த ஒழுங்கு அவசியமாகிறது. அப்போதே வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தேவையாகிறது. இந்த அர்த்தமே நாம் காணும் பொருட்களின், செயல்களின் சாராம்சம், சாராம்சமே கடவுள், அரசன், சாதி, பாலின பேதம் ஆகியவற்றின் அடிப்படை. பின்நவீனம் இவற்றில் காணும் சாராம்சத்தை காலி பண்ணுகிறது. அது ஒரு புள்ளியில் நிரந்தரமாக நில்லாமல் நழுவிக்கொண்டே போவதைக் காட்டுகிறது. நவீனத்துவ இலக்கியத்தின் எதார்த்தத்தில் உள்ள தீவிரத்தை பகடி பண்ணுகிறது. மொழியை, கதை வடிவத்தை, லட்சியங்களை போலச் செய்து அந்த பிரக்ஞையுடனே தான் அதை செய்வதாக, தான் கதை சொல்லவில்லை, தான் கதையை செய்வதாக பிரகடனம் செய்கிறது. இந்த தீவிரத்துடன் விளையாடும் அதன் போக்கு பின்நவீன இலக்கியத்திற்கு ஒரு சுதந்திரத்தை, அக-விடுதலையை அளிக்கிறது. இதுவே பின்நவீன எழுத்தின் வெகுளிச் சிரிப்பு, அதன் ஆன்மீகம். இந்த ஆன்மீகத்தை நீங்கள் நவீனத்துவ எதார்த்த எழுத்தில் பார்க்க முடியாது. இதை நீங்கள் உங்கள் கதைகளில் எப்படி கொண்டு வந்தாலும் அது பின்நவீன எழுத்தாகி விடும். அது ஒரு மனநிலை, ஒரு வாழ்க்கை நிலை, ஒரு தத்துவம், ஒரு உணர்வு, ஒரு மொழி. பின்நவீனம் என்றால் என்னவென்றே தெரியாத சாமான்யர்களிடம் அது வெளிப்படுவதை காண்கிறோம். எப்படி காதலிக்க தனித்தகுதி தேவையில்லையோ பின்நவீன மனநிலை வெளிப்படவும் தேவையில்லை. ஆனால் நம் எழுத்தில் வெளிப்படுவது அதுதான் எனத் தெரிந்தால் அதை மேலும் செறிவுபடுத்த முடியும். அதுதான் பின்நவீன பிரக்ஞையின், புரிதலின் பயன்.
மேலும் பல கேள்விகளை வகுப்பில் எழுப்பி விடைகளைப் பெற்று உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள இணையுங்கள் நாவல் வகுப்பில். தொடர்புக்கு இன்பாக்ஸுக்கு வரவும். அல்லது 9790929153க்கு வாட்ஸாப் பண்ணவும்.



கருத்துகள்