முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா முழுக்க நாம் காணும் விசித்திரம்

தமிழக அபிராணர்களுக்கு பணமில்லை, பஞ்சம், அதனால் இசை உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் செலுத்தவில்லை, வாய்ப்பில்லாமையாலே அன்றாட வாழ்வில் சினிமாவுக்கு அப்பால் கலாவாசனையே இன்றி மூடுண்டு கிடக்கிறார்கள் என்பது மட்டமான வாதம். ஏனென்று சொல்கிறேன் - இதே அபிராமணர்களான கிறித்துவர்கள் கிட்டார், கீபோர்ட், சேர்ந்திசை போன்ற இசைக்கருவிகள், வடிவங்களில் குழந்தைப் பருவம் முதலே ஆர்வம் காட்டுவதை, பயிற்சி பெறுவதைப் பார்க்கிறோம். இப்போதும் கூட ஒரு தெருவில் ஒரு குழந்தை இம்மாதிரி இசைக்கருவிகளை பயன்படுத்துகிறது எனில் அதன் பின்னால் தேவாலய செயல்பாடுகள் இருக்கும். அவர்களுக்கு படிக்கத் தேவையிருக்கவில்லையா? ஏழ்மையும் பிரச்சினைகளும் இல்லையா? தொழிலில் ஈடுபடும் நெருக்கடி இல்லையா? இருந்தும் எப்படி கலை ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்? (தஞ்சை அபிரகாம் பண்டிதர் கூட கிறித்துவர் தான்.)
பூர்வ பௌத்தர்களான தலித்துகளிடம் எப்படி கானா இசை தழைத்தது? அவர்களுக்கு வறுமையில்லையா? (அவர்களிடம் இருந்துதானே இளையராஜாவே வருகிறார். மேலும் அவர் கிறித்துவராகப் பிறந்தவர்.) வடகிழக்கு மாநில பழங்குடி மக்களிடமும் அதிகமான கலை ஆர்வங்களை, இசைத்திறனைப் பார்க்கிறோம். 

 ஆக, இது பழங்குடிகள், தலித்துகள், கிறித்துவர்கள் அல்லாத அபிராமண இந்துக்களின் கலை சார்ந்த வீழ்ச்சி மட்டுமே. இதை ஒட்டுமொத்தமான தமிழர்களின் பொருளாதார எழுச்சி சார்ந்த பிரச்சினையாக காணக் கூடாது என நினைக்கிறேன்! 
கலையில் மட்டுமல்ல இந்துக்களாக இருந்தாலும் இந்து மதத்தின் தத்துவங்கள், ஆன்மீக நூல்களைப் பயில்வதிலும் இவர்களுக்கு ஆர்வமில்லை. சடங்குகள், நம்பிக்கைகளின் பூர்வீகம் தெரியாது. அத்வைதிகளாக இருப்பர், ஆனால் அத்வைதத்தின் பொருள் தெரியாது. நாட்டார் மதங்களிலும் ஆர்வம் குறைவு. சாதிய சடங்குகளுக்குள் நின்றபடி மட்டுமே மதத்தை அணுகுவார்கள். தீவிர மதவாதிகளாக கூட இருப்பர், ஆனால் தம் மதத்தின் அடிப்படைகள் பற்றி ஒன்றுமே தெரியாது. நீங்கள் ஒரு கிறித்துவரோ பௌத்தரோ இப்படி இருந்து பார்க்க முடியுமா? முடியாது. வேதங்களையோ உபநிடங்களையோ கல்லாதவர்களே 99.99% இந்துக்கள். "இவர்கள் தம் வேதங்களைக் கல்லாதவர்களாக இருப்பதாலே அதிலுள்ள கீழ்மை குறித்த போதமின்றி அடிமைகளாக இருக்கிறார்கள்" என்று அம்பேத்கர் சொல்வதை கவனிக்க வேண்டும்.

இவர்கள் பெரும்பாலும் மத்திய, உயர்மத்திய அபிராமண சாதியினர். ஆக, மதம், தத்துவம், இசை, இலக்கியம், ஓவியம் உள்ளிட்ட கலை வடிவங்களில் ஆர்வமே காட்டாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இந்து மதத்தின் பொருளையே இந்துத்துவா வந்து தலைகீழாக மாற்றுவதற்கும் இவர்கள் தம் வேர்களில் ஆர்வமற்றவர்களாக இருப்பதற்கும் தொடர்புண்டோ என்றும் தோன்றுகிறது. பெரும்பாலான இந்துத்துவ செயல்பாட்டாளர்களுக்கும் தம் மதம் குறித்த அறிவு இல்லை, கலைகளிலும் ஈடுபாடு இல்லை. மனு ஸ்மிருதியை தீவிரமாக ஆதரிப்போருடன் விவாதிக்கும் போதெல்லாம் நான் ஒன்றை கவனிக்கிறேன் - அவர்கள் மனுவைப் படித்ததில்லை. உபநிடங்களை விட கீதையை கூட முழுமையாக படித்ததில்லை. இப்படியான சோம்பேறிகளை நீங்கள் வேறெந்த மதத்திலும் பார்க்க முடியாது. இவர்களை மிக சுலபத்தில் ஏமாற்ற முடியும்.

எனக்கு இதைக் குறித்துள்ள கேள்வி ஒரு காலத்தில் விவசாய குடிகளாகவும் நிலவுரிமையாளர்களாகவும் இந்த அபிராமணர்கள் இருந்து பின்னர் நகரமயமாக்கல் தோன்ற அதற்கு தம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்காமல் அரைகுறையாக நவீன கல்விக்கும் மாற்றத்திற்கும் மரபுக்கும் இடையில் மாட்டிக்கொண்டதற்கும் அவர்களுடைய கலை, அறிவுத் துறைகள் மீதான அலட்சியத்துக்கு எதாவது தொடர்புண்டா என்பதே. 

எனக்கு விடை நிச்சயமாகத் தெரியவில்லை. இது தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுக்க நாம் காணும் விசித்திரமே!
- ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...