முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்னஞ்சலில் வந்தது

மே மாதம் வெளியாகியுள்ள உயிர்மை மாத இதழில் கட்டுரையாளர் ஆர் அபிலாஷ் அவர்கள் எழுதியுள்ள எதேச்சதிகாரம் பின்னிய வெறுப்பின் லவ் ஜிஹாதும் மக்கள் பின்னிய அன்பின் லஹ் ஜிஹாதும்

மிக அற்புதமான மற்றும் அவசியமான கருத்துச்செறிவு மிக்க கட்டுரையாக வெளிவந்துள்ளது. 

அரசியல்வாதிகள் பின்னிய வலையில் பொதுமக்கள் மிக எளிமையாக சிக்கித் தவிப்பதை அன்றாட நிகழ்வுகளின் ஊடாக நாம் கவனிக்க முடிகிறது.

அவ்வாறு வகுப்புவாதிகளாலும், பாசிசவாதிகளாலும் மிகக் குறிப்பாக நிகழ்காலத்தில் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளாலும் பின்னப்பட்ட ஒரு கொடூரமான வலைப்பின்னல் தான் லவ் ஜிஹாத். 

அப்படிப்பட்ட நெருடிய வார்த்தை பிரயோகங்களைக் கொண்ட இந்த சொல்லாடலை மிக லாவகமாகவும், சிக்கல்களை அவிழ்க்கக்கூடிய நுண்ணிய கருத்தாடலாகவும் இந்தக் கட்டுரையை அமைந்தது மிகச் சிறப்பு. 

குறிப்பாக இந்தக் கட்டுரை கீழ்க்கண்ட மிகச் சிறப்பான வாதங்களை நம் முன் வைக்கின்றது.

1. லவ் ஜிஹாத்  என்ற வார்த்தையை மரபணு ஆய்வு என்ற கனத்த சுத்தியின் மூலமாக அடித்து உடைத்துள்ளார் கட்டுரையாளர். 

2. பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்பதின் அடிப்படை இயலை இப்படித்தான் - இவ்வாறுதான் என்ற வரையறைக்குள் கொடுத்தது சிறப்பு. 

3. ஐரோப்பிய பாசிச சித்தாந்தத்தையும் இந்திய பாஜக சித்தாந்தத்தையும் ஒப்புமைப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட சொல்லாடல்களும் கருத்தாடல்களும் மிகவும் அருமை. 

4. போலி கதையாடல்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனையும் அது எவ்வாறு பொதுமக்களின் மனதில் புகுத்தப்படுகின்றன என்பதனையும் மேலும் வலதுசாரி சிந்தனைகள் எவ்வாறு மக்கள் மனதில் ஒட்டப்பட்டு பின்பு வெட்டப்படுகின்றன என்பதனையும் மிக அழகாக படம் பிடித்து காட்டுகிறது இந்தக் கட்டுரை. 

5. நியூரெம்பெர்க் சட்டங்களைப் பற்றி அறிய முடிவதுடன் எந்த அளவிற்கு நாஜி கட்சி உருவாக்கிய இனவாத வெறுப்பு அரசியலின் நீட்சியை இன்று பாசிசவாதிகள்  பிடித்து தொங்குகின்றனர் என்பதனையும் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. 

6. புரளி என்பது உண்மைக்கு மாற்றமானது அது பொய்மையை மறுதலிக்க கூடியது அல்லது வெறுப்பை மறுதலிக்க கூடியது.... என்ற பதத்தினை மிகத் தெளிவாக லவ் ஜிஹாத்தின் வழியாக ஏற்றிச் சொல்லி, நிகழ்கால புரளிகளுக்கு நாம் எவ்வாறு செவிசாய்க்க வேண்டும் என்பதையும் இந்த கட்டுரை விளக்குகிறது.

7. பொய்மையின் பிறப்பிடம் சூன்யமே என்ற என்ற வாதம் மிகச் சிறப்பாக எடுத்தாளப் பட்டுள்ளது. மிகக்குறிப்பாக லவ்ஜிஹாதும் அவ்வகைமைதான் என்பதனையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

8. கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் நடந்த உண்மைச் சம்பவத்தை எவ்வாறு அப்பகுதி மக்கள் லாவகமாக கையாண்டனர் என்பதனையும் அதற்கு 'அன்பின் பொருள்' எவ்வளவு அவசியப்பட்டது என்பதனையும், அங்கு நடந்த காட்சிகளின் வழியாக கட்டுரையாளர் தெளிவுபடுத்துகிறார். இந்த தெளிவு லவ் ஜிகாத் என்ற பதத்தின் உண்மை தன்மையை (நாம் அறிந்த தகவல்களுக்கு அப்பால் மேலும்) அறிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 

9. இந்துக்களை  தோளோடு தோள் சேர்த்து வெறுப்பின் வேர்களை எவ்வாறு இஸ்லாமியர்கள் களைந்துள்ளனர் என்பதை பற்றிய கட்டுரையின் இறுதி பத்தியில்  ஒட்டுமொத்தமாக மிகச் சரியானதொரு தீர்வையும் பார்வை மற்றும் பாதையையும் கட்டுரையாளர் கொடுத்துள்ளார். 

10. இன்மையை அடையாளம் கண்டு அதை எவ்வாறு முறியடிக்க வேண்டும் என்ற வகையில் இக்கட்டுரை பேசியுள்ள கருத்துக்கள் சமகாலத்தில் படிப்பினைகளாகவும், இரு சாரார்களுக்கும் தீர்வாகவும் அமைந்துள்ளதை பூங்கொத்துக் கொடுத்து நிச்சயமாக வரவேற்கலாம்.

கட்டுரை எழுதிய அபிலாஷ் அவர்களுக்கும் அச்சிட்ட உயிர்மெய் மாத இதழுக்கும் நன்றிகளும் அன்புகளும். 

ஷா.காதர் கனி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...