முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவதாராளவாதத்தின் எதிரிகள்


 

முன்பு இடதுசாரிகள் தாராளமயமாக்கலுக்கு, சந்தைப் பொருளாதாரத்துக்கு, உலகமயமாக்கலுக்கு எதிரானவர்கள் என்று நவபொருளாதார ஆதரவாளர்கள் கூறுவார்கள். இடதுசாரி சிந்தனையே சந்தையைக் கட்டுப்படுத்தும் முற்றதிகாரப் போக்கு கொண்டது என்பார்கள். ஆனால் இன்று நாம் என்ன பார்க்கிறோம் என்றால் இந்தியாவில் மோடியும், அமெரிக்காவில் டிரம்பும் முழுக்க உலகமயமாக்கலுக்கும், தராளமயமாக்கலுக்கும் எதிரான protectonist பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தீவிர வலதுசாரிகள், முதலீட்டியத்தின் செல்லப்பிள்ளைகள் என வெளிப்படையாக அறிவித்துக் கொள்பவர்கள். டிரம்பே ஒரு முதலாளிதான். மோடி அனேகமாக எல்லா அரசு கட்டமைப்புப் பணிகளையும் தன் நண்பர் அதானிக்கு கொடுப்பதுடன் அவரை அமெரிக்காவில் உள்ள வழக்குகளில் இருந்து பாதுகாக்கப் போராடுகிறவர். அதானி அவருக்கு வலது கண் என்றால் அம்பானி இடது கண்.

கணினி, மின்னணு சாதனங்களுக்கான மைக்ரோ கண்டெக்டர் இறக்குமதியை மோடி அரசு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சாதகமாகத் தடை செய்ததை, அதனால் ஏற்பட்ட விலையேற்றத்தை, உள்ளூர் முதலாளிகளின் மொனோபோலியைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்பிரச்சினை இங்கிலாந்திலும் உள்ளது என்று சொல்லியிருக்கிறேன். டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்காவும் தன் எல்லைகளை உலகமயமாக்கலுக்கு எதிராக மூடிவிட்டது. அவர்களுடைய சந்தை கிட்டத்தட்ட சீன இறக்குமதிகளை நம்பியிருப்பது, அவர்களுடைய முக்கியமான பிராண்டுகள் சீனாவில் தயாரிக்கப்படுபவை. கடுமையாக வரியை உயர்த்தி அந்த சீன உற்பத்தி, தயாரிப்புப் பொருட்களை தன் நாட்டுக்குள் வரவிடாமல் தடுத்துவிட்டார். வேறு நாடுகளுக்கும் இத்தகைய வரிவிதிப்பை அவர் விகிக்க உலகம் முழுக்க அதிர்வுகள் பரவுகின்றன. உலகம் தழுவிய பொருளாதார மந்தநிலை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் பாதிக்கப்படுவதாக, டிரம்ப் வந்த பின்னர் அங்கு கிட்டத்தட்ட மூன்ற சதவீதம் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக, டிரம்பின் கொள்கைகள் பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்படுத்துவதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக, சில வாரங்களுக்கு முன்பு ஒருநாள் இந்தியாவில் இருந்து ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள ஐபோன்களை அவசரமாக ஆப்பிள் நிறுவனம் விமானங்களில் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பியது. ஏனென்றால் அன்றே வரிவிதிப்பு காலக்கெடுவுக்கு கடைசி நாள். ஆனால் அவர்கள் அனுப்பியவுடனே டிரம்ப் காலக்கெடுவை மேலும் சில நாட்கள் நீட்டிப்பதாக அறிவித்தார். அங்குள்ள பிரதான தனியார் நிறுவனங்களுக்கே தெரியாதவிதம் முடிவுகள் பெருங்குழப்பத்துக்குள் இருந்து மர்மமாக எடுக்கப்படுகின்றன. விளைவான நிறுவனங்கள் எந்த வணிக முடிவை எடுக்கவும் அஞ்சும் (நீங்கள் இதை நமது நள்ளிரவு பணமதிப்பிழப்பு ஸ்டிரைக்குடன் ஒப்பிடலாம்). டிரம்ப் பலகட்டமாக விவாதித்து முடிவெடுக்க விருப்பமில்லாதவர். ஒற்றை மைய ஆட்சியை உருவாக்கி சர்வாதிகாரம் நடத்துபவர். இது சர்வதேச வணிகத்துக்கு எவ்வளவு கேடானது, ஒரு சில முதலாளிகளை மட்டுமே மொனோபோலி செய்ய அனுமதித்து மற்றவர்களை நசுக்கக் கூடியது என்பதை முதலீட்டியம் உணர்ந்து வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதிகளை இந்தியா தடைசெய்வதாக வந்த செய்தியைப் பாருங்கள். 2019இல் இருந்தே இத்தடை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் இந்தியாவுக்கும் அனுப்பும் பொருட்களின் பொருளாதார மதிப்பு 1600 கோடிகள். அரசின் தடையால் இந்தியாவின் நேரடி இறக்குமதி கடந்த 5 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் இப்பொருட்களை வளைகுடா நாடுகள், இலங்கை வழியாக வேறு லேபிள் ஒட்டி பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. அதாவது 1600 கோடி வர்த்தகம் மறைமுகமாக நடந்துவந்தது. அதற்குத்தான் முடிவு கட்டியிருக்கிறார்கள் இப்போது. இதை நீங்கள் அயலுறவு, தேச இறையாண்மையின் பெயரில், பதிலடி எனும் பொருளில் நியாயப்படுத்தலாம். ஆனால் அடிப்படையில் இது நம் வணிகத்தையுமே பாதிக்கும். இறக்குமதி மட்டுமல்ல ஏற்றுமதியும் தான் கடந்த ஐந்தாண்டுகளில் ஒழிக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரி அரசுகள் அடுத்த பத்தாண்டுகளில் உலகம் முழுக்கத் தோன்றினால் ஒட்டுமொத்தமாக உலகமயமாக்கலுக்கு சங்கூதி விட்டு தமக்கு இணக்கமான ஒரு சில நாடுகளுடன் மட்டுமே வர்த்தகம் பண்ணுவார்கள். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் மென்பொருள் பொறியியலாளர்களின் வேலைகளைப் பறித்து வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் அதிகளவில் ஓட்டுநர்கள், சமையற்காரர்கள், மருத்துவர்களின் வேலைகள் காணாமல் போகும் என்கிறார்கள். எந்திரன்களின் உற்பத்தி மலிவானால் துப்புரவு, கட்டமைப்பு, செவிலியர் வேலைகளும் குறையும். தேசங்கள் பரஸ்பரம் சாந்திருக்கும் தேவை வெகுவாக இல்லாமல் ஆகும்.
இடதுசாரிகள் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு அவர்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு தடைவிதிப்பார்கள் என்பது. ரஷ்யா, சீனா என உதாரணம் சொல்வார்கள். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அரசுக்கு எதிராகப் போராடவும் சுதந்திரமாகக் கருத்து சொல்லவும் உரிமை உள்ளது என்பார்கள். ஆனால் இங்கு மோடி வந்தபிறகு அவருக்கு எதிராகப்பேச ஊடகங்கள் துணிவதில்லை. அறிவுஜீவிகள் ஊமையாகிவிட்டார்கள். டிரம்ப் அங்கு தனக்கு எதிராகப் போராடும் மாணவர்களின் அந்தரங்கத் தகவல்களைப் பெற்று அவர்கள் மீது அற்ப குற்றச்சாட்டுகளை வைத்து குடியுரிமையை ரத்துசெய்து விமானத்தில் ஏற்றி அனுப்புகிறார். இப்போது அவர் புதிதாக ஒரு குண்டைப் போட்டுள்ளார். ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் வரியில் இருந்து தப்பிக்க ஐயர்லாந்தின் டப்ளினிலும், கனடாவிலும் படமெடுத்து வந்தார்கள். இனி வெளிநாட்டில் படம்பிடிப்பவர்களுக்கு 200% வரிவிதிப்பதாக தற்போது அறிவித்திருக்கிறார். அவர் தன் அறிவிப்பில் சொல்லும் மற்றொரு சேதியும் முக்கியம் - ஹாலிவுட்டை தேசவிரோத கருத்தியல் கொண்டவர்கள் கைப்பற்றிவிட்டார்கள், அவர்களிடம் இருந்து சினிமாவைப் பாதுகாக்கவும்தான் வரிவிதிப்பு என்கிறார். அதாவது வரிவிதிப்புடன் அவர் நிற்கப் போவதில்லை. தன் கொள்கைக்கும், அரசுக்கும் சாதகமாகக் கதைசொல்லாதவர்களை மறைமுகமாக தடைசெய்யப் போவதாக, வரிபோட்டே விரட்டபோவதாக மிரட்டுகிறார்.
சர்வாதிகாரிகள், போர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என தாராளமய சந்தைக்கு, உலகமய முதலீட்டியத்திற்கு எதிரி முதலீட்டியத்திற்கு உள்ளிருந்தே தோன்றியிருக்கிறது.
இதைப் பற்றி உம்பர்த்தோ ஈக்கோ (“Ur-Fascism” (1995), ஜியோவன்னி ஆர்கி, தாமஸ் பிக்கெட்டி, எரிக் ஹாப்ஸ்வாம் போன்றோர் ஏற்கனவே எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியின் அரசியலே சர்வதேச வணிகத்துக்கு எதிரானதுதான். நமது ஆர்.எஸ்.எஸ்ஸும், ஜனசங்கமும் அத்தகைய கொள்கைகள் கொண்டதே. இவர்களுடைய பொருளாதார கொள்கைகள் 'சுதேசி பயங்கரவாதத்' தன்மை கொண்டவை என்பதால் சமயம் வரும்போது இவர்கள் உலகமயமாக்கலுக்கு, சமரசமான வணிக நடவடிக்கைகளுக்கு எதிராகவே முடிவெடுப்பார்கள். அதனாலே எப்போதும் தொடர்ச்சியும் தெளிவும் பொருளதார நிர்வாகத்தில் இருக்காது. சமூக உளவியலும் சர்வதேச முதலீட்டியத்தின் ஆதரவும் இதையும் மீறி இவர்களுக்கு இருப்பதே வினோதமானது. தற்காலிகமாக சிலரை விரோதியாக்கி பிளவுவாத அரசியல் செய்வது, ஒருசில முதலீட்டிய குழுமங்களுக்கு மிதஞ்சிய தற்காலிக அனுகூலங்களைத் தருவதன் வழியாக இதைச் சாதிக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் ஒட்டுமொத்தமாக இவர்களே உலகமயமாதலுக்கு சங்கூதப் போகிறார்கள். இது தொடர்ந்தால் தேசங்களின் எல்லைகள் மூடப்பட்டு பழைய யுகத்துக்கு மீள்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...