Skip to main content

Posts

Showing posts from February, 2026

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

செட்டில்மெண்டுக்குப் பிறகு ஆண்களின், பெண்களின் நிலை: ஒரு ஆய்வு

  2025இல் வெளிவந்த ஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது: 42% ஆண்கள் விவாகரத்தின்போது ஒன் டைம் செட்டில்மெண்டைப் பண்ணுவதற்காக வங்கியின் தனிப்பட்ட கடனை வாங்கியிருக்கிறார்கள் (எகனானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இதைக் குறித்த கட்டுரை வந்துள்ளது). இப்படி கடன் வாங்குகிறார்களா? இது முடியுமா? எனக்குத் தெரிந்தே சிலர் வாங்கி செட்டில் பண்ணியிருக்கிறார்கள். அதாவது சம்பள ஆவணங்களைக் கொடுத்தோ சொத்தை அடமானம் வைத்தோ வாங்குவார்கள். சிலர் சொத்துக்களை விற்றிருக்கிறார்கள். ஆனால் அவமானம் கருதி வெளியே சொல்ல மாட்டார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? விவாகரத்துக்காக அலைவது, அது தரும் கடும் மனவதையை அனுபவிப்பது, மாதாமாதம் வாழ்நாள் முழுக்க ஜீவனாம்சம் கொடுக்க நேரிடும் என்பதை நினைத்து அஞ்சுவது, குழந்தையைப் பணம் கொடுத்துப் பெறுவதற்கு எனப் பல காரணங்கள். முக்கியமாக, இதையொட்டி வேலையில் வரும் நெருக்கடிகள். ஒரு ஆண் விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் போவது கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதற்கு சமம்தான். தப்பிக்க வேண்டுமெனில் ஜட்டி வரை கழற்றிக் கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெண்ணுக்கு இத்தகைய இழப்புகள் விவாகரத்தின்போது வராது. சட்டங்களை அவ...

பாக்தாத் திருடர்கள்

  திருமணத்தை மீறிய உறவைக் காரணம் காட்டி விவாகரத்து வாங்கலாம் எனும் நிபந்தனை பெண்களுக்கு மட்டுமே உண்மையில் சாதகமானது, ஆண்களுக்கு அல்ல - பிறழ்வைக் காரணம் காட்டி கணவர் தன் மனைவியை விவாகரத்துச் செய்தாலும் அப்பெண் புதிய திருமணத்திற்குள் போகும்வரைக்கும் ஜீவனாம்சம் வாங்க முடியும். ஒன் டைம் செட்டில்மெண்ட் வாங்க முடியும். இதைக் கொண்டு அவனைப் பழிவாங்க முடியும். ஆனால் ஆண் அதே தவறைச் செய்தால் அவன் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து வக்கீலுக்கும் செலவு செய்து அழிய வேண்டும். கூடுதலாகத் தன் குழந்தையை அவன் அவளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அவள் தன் காதலனை மணந்து கொண்டு தன் பிள்ளை அவனை அப்பா என்று அழைப்பதை அவன் வேடிக்கைப் பார்க்க வேண்டும். அவனால் அவளைப் பழிவாங்க முடியாது. எல்லாவற்றையும் இழக்க மட்டுமே முடியும். ஆகையால் முடிந்தவரைக்கும் அவன் மனைவியிடம் கெஞ்சித்தான் பார்க்கிறான். அவர்கள் உடன்படாதபோதே விவாகரத்துக்கு முன்வருகிறான். அப்போதும் அவனுக்கு இந்த நீதிமன்ற அமைப்பு தன் அண்டிராயரை உருவப் போகிற விசயம் தெரிந்திருக்காது; ஆனால் அவனது மனைவி படித்தவராகவும் தந்திரமானவராகவும் இருந்தால் இதையெல்லாம் ஏற்கனவ...

குடும்பத்தை நிர்வகிப்பது எனும் மிகப்பெரிய நவீனத் தொன்மம்

  விவாகரத்து, ஜீவனாம்சம் என வந்துவிட்டால் சில பெண்ணியவாதிகளும், போலி முற்போக்காளர்களும் சொல்லும் வாதம் "அப்பெண் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டதால்தான் உங்களால் இத்தனைக் காலமும் வேலை பார்த்துச் சம்பாதிக்க முடிந்தது, அதனால் உன் சம்பளத்தில், சேமிப்பில் பாதி அவளுக்கு உரியதே." இது நம் காலத்தின் மிகப்பெரிய தொன்மம். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்: சமையலும் வீட்டுப் பணிகளும்: இன்று நகரங்களில் வாழும் பெரும்பாலான மத்திய வர்க்க, மேல்மத்திய வர்க்க, மேல்வர்க்க மக்கள் வீட்டில் சாப்பிடுவதில்லை. ஓட்டல் உணவுதான். ஆணும் பெண்ணும் வேலை பார்க்கும்பட்சத்தில் அவர்கள் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் கூடத்தான் வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். இதற்கும் அப்பால் உள்ள வீட்டு வேலைகளை அவர்கள் செய்வதில் நியாயம் உண்டு - வீட்டுக்கான வாடகை, கார் இ.எம்.ஐ, வீட்டுச் செலவுகள் அத்தனைக்கும் கணவன் தனியாக உழைக்கிறான். இந்த சௌகர்யங்களை அனுபவிக்கும் பெண் தன் பங்குக்கு சில வேலைகளைச் செய்வது எப்படிக் குற்றமாகும்? தான் வேலைக்குப் போக மாட்டேன், வீட்டில் சும்மா எந்த வேலையும் செய்யாமல் கணவனாக ...

நம் சட்டம் ஏன் திருமணம் மீறிய உறவைக் குற்றமாகப் பாவிப்பதில்லை?

உலகம் முழுக்கவே மக்கள் எந்த விழுமியத்தையும் முழுமையாக நம்புவதோ கடைபிடிப்பதோ இல்லை. பாலியல் ஒழுக்கமும் அப்படியானது. பாதிக்கு மேல் திருமணங்களைக் காப்பாற்றுவதே திருமணத்தை மீறிய பாலுறவுகள்தாம். எதாவது ஒரு கட்டத்தில் மீறாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்று கேட்போம். மனிதன் மட்டுமல்ல எந்த விலங்கும் பாலியல் ஒழுக்கத்தைத் தம் இயல்பாகக் கொண்டவர்கள் அல்லர். அதாவது பாலியல் ஒழுக்கம் இயற்கை நியதி அல்ல. அது குடும்பத்தை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் - "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூலில் ஏங்கல்ஸ் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்ட உருவாக்கப்பட்டது என்கிறார். நிலம் என் உரிமை என்பதை நிலைநாட்ட அது நிரந்தரமாக எனதாக இருக்க வேண்டும், அதற்கு எனக்கு என்று ஒரு குழந்தை வேண்டும், அதற்கு என்னிடம் மட்டுமே பாலுறவு கொள்ளும் மனைவி வேண்டும் என இந்தத் தர்க்கம் போகிறது. விவசாயச் சமூகத்தில் இதற்கான தேவை இருந்தது (ஆனால் அன்றும் இந்த ஒப்பந்தத்தை எல்லாரும் மீறி இருப்பார்கள். அதனால் தான் தே.பையா எனும் வசைச்சொல் எல்லார் நாவிலும் உள்ளது. இது ஒரு நிலவுடைமைச் சமூகப் பதற்றம்தானே ஒழிய ஆணாதிக்க ம...

டி20 உலகக்கோப்பை 2026 - கம்பீரை வைத்துக் கொண்டு வெல்வது

  நேற்றைய போட்டியில் இந்தியாவை ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் கல்யாணம் முடிந்து பெண் வீட்டுக்கு வருகை தரும் மாப்பிள்ளையைப் போல நடத்தினார்கள். சஞ்சுவுக்கு பந்தை உள்ளே (middle to leg) போடாமல் நிறைய வைடாகப் போட்டார்கள். அபிஷேக்குக்கும் அவர்கள் வீசிய நீளமும் திசையும் தவறு. ஆடுதளமும் மட்டையாட்டத்துக்குச் சாதகமாக இருந்தது. ஆகையால் பந்தியில் அமர்ந்து ஆற அமர சாப்பிடுவதைப் போல மட்டையாடினார்கள். அப்போட்டியைப் பார்க்க எனக்கு நிஜத்திலேயே திருமண வைபவம் போலவே இருந்தது. ஆனால் சிறந்த அணிகள் இவர்களை அவ்வளவு சுலபத்தில் ரன் அடிக்க விட மாட்டார்கள். அபிஷேக் திரும்ப தம் பழைய ஆட்டநிலைக்கு வரவில்லை என்றாலும் கூட இந்த அரைசதம் அடித்த நிம்மதி அவருக்கு மே.இ தீவுகளுக்கு எதிராக ஆடும்போது உதவும். சென்னையைப் போன்ற ஆடுதளங்கள் கிடைத்தால் இந்தியாவால் தென்னாப்பிரிக்கா / இங்கிலாந்துக்கு எதிராகக் கூட 220-250 அடிக்க முடியும். இதுதான் இந்தியாவின் பேட்டை. அரை-இறுதியிலும் இறுதிப் போட்டியிலும் கள அமைப்பாளர்கள் மனநலம் பிறழ்ந்து அஹமதாபாத் பாணி ஆடுதளங்களை அமைத்தால் மீண்டும் 'வண்டியில மாமன் பொண்ணு' போல மட்டையாளர்கள் மாட்டு ...

"ரசிகன்" - விமர்சனம்: சுஜீஸ் குழந்தைசாமி

  இந்த புத்தகத்தை நான் சென்ற பொங்கல் அன்று வாங்கினேன் . 15 நாளில் இந்த 400 பக்க சிறு நாவலை நான் படித்து முடித்து இருந்தாலும், இதை நான் படிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவே கருதுகிறேன் ! ஏனென்றால், நான் ஒரு வருடத்திற்கு முன்னால் இதில் உள்ள இரண்டு மூன்று அத்தியாயங்களை படித்திருக்கிறேன், அதன் பிறகு என் கையில் இந்த புத்தகம் இல்லாமல் போனது. இதை வாங்குவதற்காக சில முயற்சிகளை எடுத்தேன், பிறகு விட்டு விட்டேன். பல வேலைகளினால் மறந்து போனேன். இந்த #சென்னை புத்தகக் காட்சி அதற்கு வழி வகுத்தது . மீண்டும் வாங்கினேன் முதலில் இருந்து படிக்க தொடங்கினேன் படித்தேன், முடித்தேன்! அதற்கு முக்கிய காரணம் என்னுடைய தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்யாதது தான் அது நான் படிப்பதற்கான அதிக நேரத்தை தந்தது ரீசார்ஜ் செய்யாத என் தொலைபேசிக்கு நன்றிகள்! இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆர். அபிலாஷ்! இந்த புத்தகத்தை படித்துவிட்ட எனக்கு ஒரே சந்தேகம் தான் ! அவர் எதை வெளிப்படையாக கூற தயங்குவார் என சிந்திக்க தோன்றுகின்றது ! கதை என்பது : 1970, 80-ல் இருந்த ஒருவன் சீரிய சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்த ஒரு பத்திரிக்கை ஆசிரியராக, ஒரு எழுத்...

மீ டூ: சில விமர்சனங்கள் - நூல் மதிப்புரை - மா. அண்ணாமலை

  நூல் : #me too சில விமர்சனங்கள் ஆசிரியர் : ஆர். அபிலாஷ் வெளியீடு : உயிர்மை பதிப்பகம் பக்கங்கள் : 96 வகை : கட்டுரை #me too என்பது சமூக வலைத்தளங்களில் பிரபலமான இயக்கம். இதன் பிரதான நோக்கம் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் தங்களின் மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது. இதன் மூலம் அக்குற்றங்களை செய்த ஆண்களை சமூகத்தின் முன் வெளிச்சம் போட்டு காட்டுவது. சரி, இதில் அபிலாஷிற்கு என்ன வேலை என்றால், மீ டு இயக்கம் எதற்காகத் தொடங்கப்பட்டது? என்னென்ன சிக்கல்களைப் பேசியது? எதைத் தவறவிட்டது? அவ்வியக்கத்தின் சந்தர்ப்பவாதங்கள், போலிகள், ஆணாதிக்கம், பெண்ணியம் என நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தர்க்கத்தோடு விளக்கியுள்ளார். பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகிறார்கள். உண்மைதான், ஆனால் பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா? ஆண்களின் குற்றச்சாட்டுகளை ஏன் அவ்வியக்கம் ஏற்பதில்லை? போலவே குற்றம் சாட்டப்பட்டதற்காகவே அவர் குற்றவாளி இல்லை. அவரின் தரப்பு விளக்கங்களை ஏன் மீ டு இயக்கம் செவிமடுக்கவில்லை? மேலும் ஒரு பாலின ஈர்ப்பாளர்களை அது ஏன் கணக்கில் கொ...

நாவல் எழுதுவது பற்றின குறிப்புகள் - 9

எழுதும் கலையும் ( உத்தி ) படைக்கும் கலையும் ( அகத்தூண்டுதல் ) வேறுவேறு . எழுதும் கலை புறவயமானது . புறவயமான உத்தி எந்தளவுக்கு நமக்கு உதவும் ? நேற்று என் நாவலில் வேலை செய்து முடித்துவிட்டுப் படுக்கையில் இக்கேள்வி எனக்குள் எழுந்தது .  இன்று காலையிலும் இது என்னை அலைகழிக்கிறது . உத்திக்கும் படைப்பூக்கத்துக்குமான எல்லைக் கோட்டை எங்கு தீர்மானிக்கிறோம் ? ஒருவேளை உத்தியும் ஒருவித படைப்பாக்கச் செயல்தானோ ? நாம்தான் தேவையில்லாமல் இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துப் பாவிக்கிறோமா ? இதைக் குறித்த என் சிந்தனைகள் கீழ்வருமாறு :  நான் ஒரு நாவலில் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது எனக்குள் இருந்து நினைவுகள் , உணர்வுகள் , நுண்தகவல்கள் புறப்பட்டு வருகின்றன . என் கற்பனை இவற்றை இணைத்து பூரணமான வடிவை அளிக்கிறது . என் தன்னிலை இச்செயலைச் செலுத்துகிறது . இத்தன்னிலை ஒரு எழுத்தாளராக என் தன்னிலை . இத்தன்னிலையும் அன்றாட உலகில் செயல்படும் தன்னிலையும் வேறுவேறானவை . எழுத்தாளத் தன்னிலையில் ஒருவித தூய்மை உள்ளது . பரிசுத்தமான , களங்கம...