முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரசிகன்" - விமர்சனம்: சுஜீஸ் குழந்தைசாமி


 

இந்த புத்தகத்தை நான் சென்ற பொங்கல் அன்று வாங்கினேன் .

15 நாளில் இந்த 400 பக்க சிறு நாவலை நான் படித்து முடித்து இருந்தாலும்,
இதை நான் படிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவே கருதுகிறேன் !
ஏனென்றால்,
நான் ஒரு வருடத்திற்கு முன்னால் இதில் உள்ள இரண்டு மூன்று அத்தியாயங்களை படித்திருக்கிறேன்,
அதன் பிறகு என் கையில் இந்த புத்தகம் இல்லாமல் போனது.

இதை வாங்குவதற்காக சில முயற்சிகளை எடுத்தேன், பிறகு விட்டு விட்டேன்.
பல வேலைகளினால் மறந்து போனேன். இந்த #சென்னை புத்தகக் காட்சி அதற்கு வழி வகுத்தது .
மீண்டும் வாங்கினேன் முதலில் இருந்து படிக்க தொடங்கினேன் படித்தேன்,
முடித்தேன்!

அதற்கு முக்கிய காரணம் என்னுடைய தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்யாதது தான் அது நான் படிப்பதற்கான அதிக நேரத்தை தந்தது
ரீசார்ஜ் செய்யாத
என் தொலைபேசிக்கு நன்றிகள்!

இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆர். அபிலாஷ்!
இந்த புத்தகத்தை படித்துவிட்ட எனக்கு ஒரே சந்தேகம் தான் !
அவர் எதை வெளிப்படையாக கூற தயங்குவார் என சிந்திக்க தோன்றுகின்றது !

கதை என்பது :

1970, 80-ல் இருந்த ஒருவன் சீரிய சமுதாய மாற்றத்தை எதிர்பார்த்த ஒரு பத்திரிக்கை ஆசிரியராக, ஒரு எழுத்தாளராக ,
ஒரு மார்க்ஸ் சிந்தனையாளராக இருந்த ஒருவன், காலங்கள் மாறி அந்த சொல்லாடல்கள் எல்லாம் கரைந்து போய், அவனுடைய முயற்சிகள் எதுவுமே எடுபடாமல் போய் இறுதியாக, காலத்தின் வசத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அதன் மூலம் சித்திரவதை அனுபவித்து இறந்தவனின் கதையே இது !
இந்த கதை கேரளத்தை சுற்றி அதிகம் நகர்கின்றது!
நாகர்கோவிலை கொஞ்சம் சுற்றிக்கொண்டு பயணிக்கும் கதையாக உள்ளது!
இப்படியாக இந்த கதை முழுக்க அனேக கதாபாத்திரங்கள் நம்மோடு ஒன்றுகின்றன! புதுப்புது இடங்களில் நம்மையும் கூட அழைத்துக் கொண்டு போகிறது. இந்த கதையின் முடிவு , நாம் எதிர்பார்க்காக தொடக்கம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததோ அதற்கு நேர் எதிர் மாறாக முடிவு அமைகிறது!
அதுவே என்னை பெரும்துயரில் ஆழ்த்தியது!

இந்த பதிவை பார்க்கும் நீங்கள் யாரேனும் இதை வாசிக்க எத்தனித்தால், உயிர்மை பதிப்பகம் வழி வாங்கிக்கொள்ள கேட்கிறேன் !
அது மட்டுமின்றி இப்போது எல்லா மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடைபெறுகின்றது , பயன்பெறுங்கள்!


நூலை இணையத்தில் வாங்க https://uyirmmaibooks.com/product/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...