Skip to main content

Posts

Showing posts from December, 2009

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பா: குழந்தைமையின் வெடிப்புகளும் வளர்ந்தவர்களின் பாசாங்கும்

( கூடு இணைய இதழில் வெளியாகி உள்ள கட்டுரை ) ஒரு நுட்பமான காட்சிபூர்வ கலைஞனால் எளிய திரைக்கதையை கூட கிளர்ச்சியூட்டும்/ஆழமான அனுபவமாக உருவாக்க முடியும். குவிண்டின் டொரண்டினோவின் Kill Bill ஒரு நல்ல உதாரணம். தமிழில் பாலா கதையை விட மைய பாத்திரத்தின் ஆன்மீக பயணத்தை சாகசமாக காட்டியே வெற்றி பெற்று வந்துள்ளார். ஆனால் சீனி கம் மற்றும் பா ஆகிய இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ள பால்கி எனும் நம்மூர் பால்கிருஷ்ணன் நாடகீயமான கருத்து-உணர்வு மோதல்களை நம்பி படமெடுப்பவர். இவரது படங்களில் பி.சியின் படக்கருவி நுட்பமும் எதார்த்தமும் கூடிய காட்சிகளை உருவாக்கினாலும் அவை படத்தை முன்னெடுத்து செல்வதில்லை. பறவையின் கால்களைப் போன்று இளைப்பாற மட்டுமே பயன்படுகின்றன. பால்கியின் முதற்படம் ”சீனி கம்” பலத்த வரவேற்பை பெற்றது. ஒரு 34 வயதுப் பெண் எப்படி 64 வயது முதியவரை மணக்கிறாள் என்பதே கதை. இந்த எளிய கதையின் வெற்றிக்கு அது தன் வகைமையை தெளிவாக அடையாளம் கண்டிருந்தது (காமிடி) காரணம். ஏறத்தாழ தன் வகைமையின் விதிகளுக்கு உட்பட்டே இயங்கியது காமிடி நாடக அமைப்புக்கு ஒரு பிரச்சனை சிக்கலாக வேண்டும். அவிழ்க்க முடியாது என தோன்றும் வண்ணம...

ஊடகங்களால் விற்பனை செய்யப்படும் நம் பண்பாடு

வியாபார வெற்றியும் தரமும் இன்று ஒரு குழப்பமான பண்பாட்டு சூழலில் வாழ்கிறோம். தொழில்நுட்ப சிறப்பு கொண்ட எளிய மசாலா படங்களை உலகத்தரம் என்று கொண்டாடும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. ”சிவாஜியில்” இருந்து ”அவதார்” வரை நம் முதலாளித்துவ ஊடகங்களால் திட்டமிட்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது. ஊடக வளர்ச்சிக்கு முன் தீவிர மற்றும் வணிக சினிமாக்களுக்கு இருந்த இடைவெளி இன்று மங்கி விட்டது. குறிப்பாக மத்திய மற்றும் உயர்மத்திய வர்க்கத்துக்கு. தமிழில் துல்லியமான பண்பாட்டு சித்தரிப்புகளுடன் வரும் மசாலா படங்கள் வெற்றி பெற்றால் டி.வி மீடியா உடனே அதை விழுங்கி விடுகிறது. பிறகு “தரமான சினிமா” அல்லது “வித்தியாசமான படம்” என்று ஏப்பம் விடுகிறது. இது கொட்டாவி போல் பரவி ஆளாளுக்கு “தரம்” “தரம்“ என்று பஜனை கோஷ்டி கிளம்புகிறது. அடுத்து இத்தகைய சினிமாக்களின் நாயகர்கள் அமீர், சசிகுமார் போன்றவர்கள் தீவிர இலக்கிய கூட்டங்களில் தரிசனம் தந்து நூல் வெளியிட்டு தாடி வருடி “எனக்கு புத்தகம்னாலே அலர்ஜிப்பா” என்று வேறு பேசுகிறார்கள். வெகுஜனவாதிகளுக்கு தீவிர படைப்புலகம் தீட்டு என்பதல்ல என் வாதம். இருவருக்குமான எல்லைக் கோட்டை எச்சில் தொட்ட...

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 9

நான் அவள் சுட்டு விரலின் திசையை தொடர்ந்து போய் அந்த நிலையத்தைக் கண்டேன்: உரிந்து விழும் மரம் , சாய்-தகரக் கூரை , நீண்ட மொட்டை மாடி மற்றும் முன்னால் இருநூறு மக்களுக்கு மேல் நிற்கமுடியாத சிறு வறண்ட சதுக்கமும் கொண்ட ஒரு கட்டிடம். இங்குதான் , அம்மா அன்று சொன்னாள் , 1928- இல் ராணுவம் கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் வாழைத்தோட்ட தொழிலாளர்களை கொன்று குவித்தது.

இந்திய அணித்தேர்வின் பின்னுள்ள காரணிகள்

வங்கதேசத்தில் நடைபெறப் போகும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வில் இம்முறையும் தமாஷ் உள்ளது. இந்த பதிவு அக்குளறுபடிகள் பற்றியது. முதலில் ரோஹித் சர்மாவின் சேர்க்கை. அவர் பொறுப்பில்லாமல் ஆடியதனாலே கழற்றி விடப்பட்டார். பிறகு ஆடிய உள்ளூர் ஆட்டங்களிலும் ரோஹித் பொறுப்பு காட்டவில்லை. மும்பை அணிக்காக குறைந்த ஸ்கோர்களுக்கு பிறகு ஒரு முன்னூறு அடித்து விட்டு டக் அவுட் ஆனார். ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைத்து விட்டது. இங்கு நாம் ”பொறுப்பு” என்கிற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஒவ்வொரு இளைய வீரரும் அணியிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவர் மீது ஒரு பழிச்சொல் முத்திரை குத்தப்படும். அது பெரும்பாலும் கூடவே தங்கி விடும். உதாரணமாக சடகோபன் ரமேஷுக்கு கால்கள் நகராது என்றார்கள். சிறப்பான சராசரி இருந்தும் அவர் இந்த ஒரு குற்றச்சாட்டு காரணமாகவே எளிதில் நீக்கப்பட்டார். பொதுவாழ்வில் கூட நாம் அடிக்கடி எதிரிகளை வீழ்த்த பயன்படுத்தும் ஒரு அசட்டுத் தந்திரமே இது. ரோஹித்தின் பிரச்சனை பொறுப்பின்மை அல்ல. அவருக்கு தனக்கே உரித்தான ஆட்டமுறைமை இன்னும் உருவாகவில்லை. ஒரு நாள், டெஸ்டு ஆட்டம் என்று எளிய தகவமைப்பு ம...

பாதி வானம்

மனைவியுடன் மனஸ்தாபம் இடையே ஜன்னலில் பூனை அதற்கு வெளியே நிறைந்த வானம் அதற்கு வெளியே தாவ உத்தேசித்து வாலைப் பற்றி தடுக்கிறேன் பேசிக் கொண்டே போகிறேன் பாதி வானில் முகம் புதைத்த மேகங்கள் லேசான இருள் பேசிக் கொண்டே ...

இன்றிரவு நிலவின் கீழ் (ஹைக்கூ தொகுப்பு): வா.மணிகண்டனின் தேர்ந்த விமர்சனம்

இது கவிஞரும், கட்டுரையாளருமான வா.மணிகண்டன் என் தொகுப்புக்கு எழுதியுள்ள ஒரு தேர்ந்த விமர்சனம். அவரது வலைப்பூவில் பிரசுரமாகி உள்ளது. அவரது மொழி நடையின் பாய்ச்சல், சுவாரசியம் மற்றும் விமர்சனத்தின் சவரக்கத்தி கூர்மைக்காகவே இங்கு மறுபிரசுரம் செய்கிறேன். நல்ல வாசிப்பு இந்த நள்ளிரவில், மார்கழிக் குளிரின் சில்லிடுதலில், குரைத்துத் திரியும் நாய்களின் இரைச்சலால் ஆர்.அபிலாஷ் தொகுத்திருக்கும் "இன்றிரவு நிலவின் கீழ்" என்ற ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பை மேலோட்டமாகவே புரட்ட முடிகிறது. கவிதைகள்(ஹைக்கூ) பேய்களைப் போலிருக்கின்றன. மனம் உற்சாமடையும் போதெல்லாம் ஒரு ஹைக்கூவை படிக்கிறேன். பின்னர் கொஞ்ச நேரம் ஆயாசமாக அமர வேண்டியிருக்கிறது. மீண்டும் ஒரு ஹைக்கூ. மீண்டும் அமைதி. ஒவ்வொரு கவிதையை வாசிக்கும் போதும் ஹைக்கூ என்பதன் வரையறையை இணையத்தில் தேட வேண்டும் என்று நினைத்தாலும் அப்படிச் செய்ய முடிவதில்லை. இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் "இதுதான் ஹைக்கூ" என்பதற்கான வரையறையை செய்வது கொள்வதற்கான அனைத்து சாத்தியங்களையும் வாசகனுக்கு கொடுக்கின்றன. ஆனால் மனம் இந்த வரையறை உருவாக்குதலில் லயிப்பதில்லை...

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 8

நாங்கள் ரயில்நிலையத்துக்கு ஒற்றைக்குதிரை விக்டோரியா வண்டியில் -- உலகின் ஏனைய பகுதிகளில் அருகி விட்ட புகழ்வாழ்ந்த மரபு ஒன்றின் இறுதிக் கண்ணியாக இருக்கலாம் -- சென்றோம். துறைமுகத்தின் சேற்றுக்குழியிலிருந்து தொடங்கி தொடுவானில் சென்று இணையும், நைட்ரேட்டால் நீறாகும் வறண்ட நிலத்தை பார்த்தவாறே அம்மா சிந்தனை வயப்பட்டிருந்தாள்.

அவர்களின் விசித்திர கற்பனைகள்

கடந்த ஆறு மாதங்களில் மூன்று தடவைகள் விழுந்தேன். ஒரே இடத்தில் (கால் பாதம்)அடி. வெவ்வேறு விளைவுகள். வெறும் சுளுக்கு, சுண்டு விரலில் எலும்பு முறிவு மற்றும் மேல்பாத எலும்பு முறிவு. கூடுதலாக இம்முறை நான் அணியும் காலிப்பர் (வாதத்தால் கால் பலவீனமானவர்கள் அணியும் குழல் போன்ற கருவி) நெளிந்து கோணியது. இப்பதிவின் தலைப்பில் உள்ள விசயங்கள் எனக்கு உருவாக இல்லை. ஜோசியரை பார்க்கவோ, வழிபாடு செய்யவொ விதியை நோகவோ இல்லை. மிகச்சிறு வயதில் இருந்தே விழுகை எனக்கு பழகி விட்ட ஒன்று. அதாவது அப்போது எல்லாம் காலிப்பர் அணியாததனால் விழுவேன். ஒரு தடவை இதனால் முட்டி எலும்பு முறிந்திட காலிப்பர் கட்டாயமாய் அணிவது என்று தீர்மானித்தேன். மேலே குறிப்பிட்ட மூன்று முறைகள் காலிப்பர் அணிந்ததனால் ஏற்பட்டன. என் காரண-காரிய போக்கு சற்று இடறி விட்டது. கடந்த 8 வருடங்களாக Rainbow Orthopedics எனும் நிறுவனத்திடன் இருந்து தான் காலிப்பர் வாங்கி வருகிறேன். தேனாம்பேட்டையில் ராஜ் டி.வி அலுவலகம் தாண்டி வந்தால் ஒருகடை முன்பாக கயிற்றில் பத்திரிகைகள் தொங்க போட்டு, மாலையானால் ஒரு வெள்ளை வேட்டி கும்பல் பெஞ்சுகளில் அமர்ந்து தெனாவட்டாக தண்ணி அடிக்கு...

ஏமி லவல் கவிதை மற்றும் வாழ்க்கை குறிப்பு

ஒரு புயலுக்குப் பின் நீ பனிக்கட்டி மரங்களுக்கு கீழ் நடக்கிறாய். நீ செல்வதை அலங்கரிக்க அவை தள்ளாடி, விரிசலிட்டு தங்களை அபாரமாய் வளைக்கின்றன. உனக்கு முன் அவற்றை வண்ணத்துக்குள் சுண்டுகிறான் வெண்சூரியன். அவை நீலம், மேலும் மங்கலான ஊதா மேலும் மரகதப் பச்சை. அவை மஞ்சள்-பழுப்பு, ஒளிர்பச்சை, மேலும் கோமேதகம். அவை வெள்ளியால் பின்னப்பட்டு சுடரும். திடுக்கிட்டதால் நிச்சலனமாகி, கொத்தாகி, சிம்புகளாகி, பன்னிறம் பெறும். நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய் பளீர்பனி நீ நடக்க கிறீச்சிடும். என் நாய்கள் உன் மேல் தாவி குதிக்கும், அவற்றின் குரைப்பு காற்றைத் தாக்கும் உலோகம் மேல் கூரிய சுத்தியல் அறைதல்களாய். நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய் ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய் எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட ஒன்றும் சத்தமாயில்லை. நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய் காலை பத்து மணிக்கு. ஏமி லவல் (1874-1925) சிறுகுறிப்பு ஏமி லவல் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அமெரிக்க படிமக் கவிஞர். எஸ்ரா பவுண்டுடன் இணைந்து ஒரு புரவலராகவும் எழுத்தாளராகவும் படிம இயக்கத்தை முன்னெடு...

ஜார்ஜ் சிர்ட்டெஷ் கவிதைகள்: 3

இறந்த குழந்தைகள் (கேனெட்டிக்கு பிறகு) அவர்களுக்கிடையே ஏறத்தாழ சுத்தமாக ஒன்றுமே இல்லை. மனிதக்குரங்கு தன் மரித்த குட்டியை பேணுகிறது ஏதோ உயிருடன் உள்ளது போல், அதன் அசைவற்ற மென்மயிர் உருவை மிருதுவாக கவனமாய் ஏந்துகிறது; கீழே விட மறுக்கிறது. உடனடிக் கடமை அதுவே; கட்டாயம் ஆற்ற வேண்டும். அது கண்கள், வாய், மூக்கு மற்றும் காதுகளை பரிசோதிக்கிறது, குட்டிக்கு முலை கொடுக்க முயல்கிறது. அதை பராமரிக்கிறது. கிள்ளி அகற்றி சுத்திகரிக்க பார்க்கிறது. ஒரு வாரம் போல் கழிய முலையூட்டுவதை நிறுத்தும் ஆனால் அதன் உடலில் வந்தமரும் பூச்சிகளை வீசி அடிக்கும் மேலும் அதன் சுகாதாரம் மீது ஆழமான ஆர்வம் காட்டும். முடிவில் அதை கீழே வைக்க ஆரம்பிக்கும், அதை விட்டு விட கற்கும். அது சுருங்கி காய ஆரம்பிக்கும் மேலும் பயங்கரமாக நாறத் துவங்கும். உறுப்புகள் ஒவ்வொன்றாய் உதிர்வது வரை அவ்வப்போது அது தோலில் கடிக்கும். சிறிதுசிறிதாக அது அழுகும். தோல் கூட சுருங்க ஆரம்பிக்கும். கடைசியில் தன் மனதின் பின்னணியில் அது புரிந்து கொள்ளும். அது மென்மயிர் பொருட்களுடன் விளையாடும். ஒரு நுட்பமான சுதாரிப்பு உள்ளது. மரித்தவரின் பாத்திரங்களை திருப்பு. கடந்த...

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 7

இது போன்று மற்றொரு இரவின் போது , நாங்கள் சியனாகா கிராண்டேவைக் கடக்கையில் பாப்பலேலோ என்னை சிற்றறையில் தூங்க வைத்து விட்டு , மதுபான விடுதிக்கு சென்றார்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கல்லூரி ஆசிரியர்களுக்கு அதிக பணி: எதிர்வினையும் பதிலும்

கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியத்துக்கு ஏற்ப அதிக பணி தர வேண்டும் என்ற என் பரிந்துரையை கண்டித்து ஐந்து வருடங்களுக்கு மேலாக விரிவுரையாளராக பணி புரிந்து வரும் சாமுவல் ஜான்சன் எதிர்வினை எழுதியுள்ளார். ஜான்சனின் ஆங்கில எதிர்வினையின் தேர்ந்தெடுத்த் பகுதிகளின் மொழியாக்கம்: வணக்கம் அபிலாஷ், இன்று ஒரு அரசு கால்நடை மருத்துவரை சந்திக்க நேர்ந்தது; அவளுக்கு ஒரு வருடத்துக்கு முன் வேலை கிடைத்தது; வேலை பிடித்துள்ளது என்றும், காலை எட்டில் இருந்து பன்னிரண்டு வரை வெறும் நாலு மணி நேரங்களே வேலை செய்வதாய் அவள் பெருமையுடன் அறிவித்தாள். அவள் ஊதியம் கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்துக்கு சமமானதே. அவர்களுடைய பல உதவித் தொகைகளும் சேர்த்தால் மொத்த சம்பளம் கல்லூரி ஆசிரியர்களின் உடையதை விட பத்தாயிரம் அதிகம். சில வாரங்களுக்கு முன் ... இளங்கலை பட்டம் முடித்த ஒரு வேளாண்மை அதிகாரியை சந்தித்தேன். அவரது ஊதியம் ஏறத்தாழ கல்லூரி ஆசியர்களின் உடையதைப் போன்றதே. ஆனால் பகட்டாய் ஆடையுடுத்தி ஆசனம் அலங்கரிப்பதன்றி வேறு வேலை இல்லை. அரிதாகவே மண் சோதனைக்கு வரும்; அவள் தன் உதவியாளர்களை பணித்து வேலை வாங்கி, தரவுகளை அனுப்பி விடுவாள். காவல் மற்ற...

நித்தியகன்னி

அந்த பகுதியில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. முகத்தில் அப்பின மண்ணும், உலோகமும் கலந்த துகள்களை அழுத்தித் துடைத்தான். கண்கள் எரிந்தன. இத்தனை பளிச்சென்ற பகல் இதற்கு முன் பார்த்ததில்லை. சாலை ஓரமாய் நெளிந்து சென்ற பெரிய கற்கள் பதித்த நடைபாதை மின்னியது. அவளை பின் தொடர்ந்து நடப்பதிலும் ஸ்பரிச இன்பம். சற்று காலகட்டி நடந்தாள். ஒவ்வொரு சுவடாக பதிந்தது. சொட்ட சொட்ட நடந்து கொண்டிருந்தாள். அவன் குனிந்து அந்த ஈர சுவடுகளை பார்த்தபடி அதில் தன் கால்கள் பதித்தான். செருப்பை உதறி விட்டு, அந்த சுவடுகளின் தடத்தை தொடந்தான், வாத்து போல கால்கள் அகட்டியபடி அவன் நடந்ததை தலையில் துண்டு கட்டி, சட்டை அணிந்திருந்த சிமிண்டை குழைக்கும் கட்டிட வேலைப் பெண்கள் விசித்திரமாய் பார்த்தனர். கறுத்த முகத்தில் வியர்வைக் கோடுகள். அவள் நைட்டி அணிந்து நூலகத்துக்கு வந்ததன் வியப்பு இன்னும் அடங்கவில்லை. அதை விட மற்றொரு அதிர்ச்சி இருந்தது. அதை அவன் ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. நூலகத்தில் சந்திப்பது அவள் திட்டம் தான். வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து இருவரும் பத்து நிமிடத்தில் அந்த பழைய இரும்பு சாமாங்கள் குவிந்து கிடக்க...

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதைகள்: 2

அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காக ஏந்திச் செல்கிறார் அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காய் ஏந்திச் செல்கிறார். அது இரவு, மேலும் அங்கு பனி நிறைந்த பதுங்கு குழிகள் உள்ளன. கெட்டியான சேறு. இதுவரை என்னவென எனக்குத் தெரியாத ஒன்றிலிருந்து மறைந்து இருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம். பிறகு நான் நடக்கிறேன்; நம் நால்வரிடையே இடைவெளி உள்ளது. போக வேண்டிய இடத்துக்கு போகிறோம். நான் கனவில் இதையெல்லாம் கண்டேனா, இந்த பேய்க் காட்சியை, ஆந்தை சிமிட்டிய, கழுதை பேசிய நூறு ஏக்கர் காட்டை? படுக்கையில் நான் வசதியாக சுத்தமாக கிடக்க, கைகள் கோர்த்து நாம் நிலப்பரப்பின் மீதாக மிதக்கிறோமா? எனக்கு முன்னதாக அப்பா நகர்கிறார், ஒரு அந்நிய ஏறத்தாழ அருகின இனத்தைப் போன்று; பேரச்சத்தில் வயலுக்கு குறுக்காக எனதான முழுஅழிவை நோக்கி அவரைத் தொடர்கிறேன். வெடித்த நிலப்பகுதி மேலாக மிதக்கின்றன எங்கும் ஆவிகள். மழைப்பருவ குளிர்மை எங்களையும் அவற்றையும் வேறுபடுத்தவில்லை. அப்பா சுற்றிலும் நோக்குகிறார்; புன்னகைக்கிறார் பிறகு திரும்புகிறார். இந்த இடத்தில் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஓசையின்றி, தொடர்ந்து நகர்வதன்றி. வெற்றுப் பக்கம் ஒன்றை தமக்கு...

கதை சொல்ல வாழ்கிறேன்: மார்க்வெஸ் (அத்தியாயம் 6)

  நள்ளிரவுக்கு சற்று நேரத்துக்கு பின் கால்வாயில் வளரும் கடற்பஞ்சு கூட்டங்களால் கப்பலின் செயலுறுப்புகள் வேகம் இழந்திருந்தாலும் , மாங்குரு காட்டுக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டதாலும் மூன்று மணிநேரங்கள் தாமதமுற்றோம். வெக்கையும் , கொசுக்களும் தாங்க முடியாத வண்ணம் இருந்தன ; ஆனால் அம்மா , எங்கள் குடும்பத்தில் பிரபலமான , இடையிடையே ஆன குட்டித்தூக்கங்களால் இவற்றுக்கு பிடிகொடுக்காமல் தப்பித்தாள் ; இதனால் உரையாடலின் சரடை நழுவ விடாமல் ஓய்வு கொள்ளவும் அவளால் முடிந்தது. பயணத்தை நாங்கள் மீண்டும் துவக்கி , புதுமலர்ச்சி தரும் தென்றல் வீசவும் அவள் முழு விழிப்புடன் இருந்தாள்.

காலச்சுழலில் நின்றபடி வாசகர்களுக்கு ஒரு சலாம்

வாசக எதிர்வினைகள் தனிமை மற்றும் சோர்விலிருந்து என்னை மீண்டும் மீண்டும் மீட்டெடுப்பது பற்றின பதிவு இது. நேற்று போல் நான் என்றும் தன்மையை உணர்ந்தது இல்லை. எழுதின ஒரு கட்டுரைக்காக வசை பாடப்பட்டு சோர்ந்து போனேன். வசை எனக்கு புதிதல்ல. ஒருவித அதிர்சசி தான் சோர்வுக்கு காரணம். துதி பாடினவர் மிக அசட்டுத்தனமான தரப்புகளை முன்வைத்து பேசினார். நான் அறிவார்ந்தவராய் மதிக்கும், மிக்க பிரியம் கொண்ட நபர் அவர். அவரிடம் இருந்து வெளிப்பட்ட அசட்டுத்தனம் என்னை சற்று குழப்பி விட்டது. காரணம், அன்று அவர் தனிப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தார். பதற்றமும் கோபமும் என் மீது திரும்பியது. ஆனால் இந்த பதிவு அவரைப் பற்றியதல்ல. இந்த சம்பவத்துக்குப் பிறகு பன்மடங்கு அசட்டுத்தனத்துடன் நான் யோசித்தது பற்றி. எழுத்தின் தனிமை எழுத்துலகை ஒரு எதிரொலிக்கும் குகையுடன் ஒப்பிடுவோம். எழுத்தனுபவம் இப்படி விபரீதமாய் குகை சுவருடன் பேசுவதே. ஒரு அரூப வாசகன் கற்பனையில் இருந்தாலும் இது ஒரு செயற்கையான நிலைதான். வாசகர்கள் குகை வெளியே நின்று எதிரொலியை தங்களுக்கு ஏற்றபடி கேட்கிறார்கள். நான் இயல்பாகவே சற்று உள்ளொடுங்கியவன். இலக்கிய நண்...

கருத்துக் கணிப்பு

நண்பர்களே இது ஒரு சிறு கருத்துக் கணிப்பு. எதைக் குறித்து? அதிகபட்சமாய் நாலு மணி நேரம் ஒப்பித்து விட்டு நம் கல்லூரி ஆசிரியர்கள் பலர் இன்று ஐம்பதாயிரத்துக்கு மேல் ஈட்டுகிறார்கள். நம் சமூகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் அளவுக்கு குறைந்த உழைப்பும் மிகுந்த சொகுசுமாக வாழும் மற்றொரு தொழில் வர்க்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது உண்மை என்று நம்புகிறீர்களா? நம்பும் பட்சத்தில் நம் வரிப்பணம் அல்லவா வீணாகிறது. கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரித்து அதன் மூலம் அதிக சமூக பங்களிப்பு செய்ய வைக்கலாமா? உங்கள் கருத்தை ஆம் அல்லது இல்லை என்று சுருக்கமாகவோ விரிவாகவோ எழுதலாம். இந்த கருத்துக் கணிப்பின் நோக்கம் என்ன? கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரிப்பது பற்றி ஒரு கட்டுரை எழுத உள்ளேன். உங்கள் கருத்துக்கள் ஒரு தூண்டுதலாகவும், வலு சேர்ப்பதாகவும் அமையும். உங்கள் அனுமதியுடன் அவற்றை என் கட்டுரையில் குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளேன். இந்த கருத்துக் கணிப்பின் பயன் என்ன? ஒரு சமூக அநீதிக்கு எதிரான அறிவார்ந்த சமூகத்தின் குரலாக அமையும். ஒரு மாற்றத்துக்கான துவக்கமாக, மௌனித்த குளத்தில் சிறு கல்லாக உங்கள் கருத்து அமை...

கோவை மாணவிகளின் செக்ஸும் குடியும்: கடந்து செல்ல வேண்டிய பாதை

கோயம்பத்தூர் கல்லூரி விடுதி மாணவிகள் குடித்து செக்ஸில் ஈடுபடுவதாக இந்த வார ஜூ.வியில் வந்துள்ள அறிக்கையில் அப்பெண்களுக்கு துளியும் குற்றவுணர்வு இல்லை என்று குறிப்பிட்ட கல்லூரியின் ஒரு விரிவுரையாளர் வியக்கும் இடம் வருகிறது. பெண்களின் விடுதி அறைகளில் இருந்து ஆணுறை மற்றும் மதுப்புட்டிகளை மீட்ட பின் மீந்த இந்த தன்னம்பிக்கையை தளர்த்த அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மனவியல் ஆலோசனை வழங்கி இருக்கிறது. முற்றும் முடிவுமாக குற்றசாட்டை மாணவிகள் இப்படி எதிர்கொள்கிறார்கள்: ”நாங்கள் நன்றாக படித்து கல்லூரிக்கு பேர் வாங்கித் தருகிறோம். நாங்கள் குடிப்பதால் உடலுறவு கொள்வதால் நிர்வாகத்துக்கு என்ன நட்டம்”. இந்த முரணை கவனியுங்கள்: ஒழுக்கசாலி பையன்கள் அரியர் வைத்து பேனெடுப்பதையும், ஒழுக்கமற்ற கேளிக்கைகாரர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த வேலைகளை அடைவதையும் கவனித்திருக்கிறேன். முனைப்பு தான் முக்கியம். இதே கட்டுரையில் மனவியலாளர் நாராயண ரெட்டி இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றையும் சோதித்து பார்க்கும் அவசரத்தில் இருப்பதே தவறு என்கிறார். ஒரு ஆணின் பாலியல் உச்சம் பதினைந்தில் இருந்து பதினெட்டுக்குள் நிகழ்கிறது. இதைப் ப...