Skip to main content

Posts

Showing posts from May, 2014

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

படித்ததில் பிடித்தது

இந்த காணொளியில் தல்ஸ்தாயின் “போரும் அமைதியும்”, ஹெமிங்வேயின் The Sun also Rises, முராகாமியின் Kafka on the Shore, நகுலன் கவிதைகள் ஆகியன பற்றி பேசுகிறேன். என் சில பேச்சுகளில் சிறந்த ஒன்று...

நகரத்து காதல் தேவதை - கென்னத் பியரிங்

ஹேரி மிர்ட்டிலை காதலிக்கிறான் –- அவனுக்கு வலுவான கைகள், சேமிப்புக்கிடங்கில் வேலை செய்கிறான், ஞாயிற்றுக்கிழமையானால் பஸ் பிடித்து எமெரல்டு மெடொவ்ஸ் பூங்காவுக்கு போகும் போது அவன் “கொஞ்ச நாளில் உன் தசைகள் தளர்ந்து போனால் உன் கன்னிமை என்னவாகும்?” எனக் கேட்க மாட்டான். இல்லை ஞாயிறன்று அவர்கள் எமரல்டு மெடொவ்ஸில் சுற்றுலா போகும் போது ஞாயிறு தினசரியை பார்ப்பார்கள்: “ஏமாற்ற பார்த்த வங்கி ஊழியர் காதலனை பெண் கொன்றாள்” அவர்கள் அதை புல்லில் விரிப்பார்கள் “ஜெர்ஸியில் குளியல் தொட்டி விவகாரம் பெரும் சர்ச்சையாய் வெடித்தது” அவர்கள் பிறகு அதில் வசதியாய் அமர்வார்கள் ஹேரி “தளர்ந்த தசைக்காக ஸிக்கின் களிம்பு, ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்களின் மரு, உண்ணி, சிவபேறிய நரம்புகள், தளர்ந்து தொங்கும் தொண்டை தசை, உச்சந்தலை, மயிர் வியாதிகளை குணப்படுத்தும் மலிவு விலை, முழு உத்தரவாதம்” எனக் கூற மாட்டான். இல்லை, ஹேரி ஒன்றுமே சொல்ல மாட்டான், புன்னகைப்பான், ஞாயிறு தினசரி மீது அவர்கள் எமரால்டு மெடோவ்ஸில் முத்தமிடுவார்கள்.

அந்தியின் பாடல் - கென்னத் பியரிங்

தூங்கு மக்கேட் பகலை மடித்து வை. அது ஒரு பளீரென்ற ஸ்கார்ப் அல்லவா. தூக்கிப் போடு அதை. உன்னை சீட்டு கோபுரம் போல் தனித்தனியாய் கழற்றி வை. ஒரு உயர்ந்த கட்டிட்த்தில் சாம்பல் நிற எலி ஆகிட நேரம் வந்து விட்டது. அங்கே செல். செல் இப்போது. பெரும் ஆணிகளைப் பார். குழாய்களுக்கு பின்னால் ஓடு. சுவர்களில் குடுகுடுவென ஓடு. உன்னை அழைக்கிற அப்பெண்ணிடம் ஊர்ந்து போ, அவள் முலைகள் வெதுவெதுப்பானவை. ஆனால் இங்கே ஒரு பிரேதம். கொலைகாரன் யார்? உன் துப்பாக்கியால் அவனைக் கொல். அவனைக் கடந்து ஊர்ந்து அப்பெண்ணிடம் போ. உறங்கு மக்கேட். ஒரு கையை படுக்கையில் பக்கவாட்டில் போடு. கைக்கடிகாரத்தை முடுக்கு. நீ ஒரு கனவான் அல்லவா, முக்கியமானவனும் கூட. கொட்டாவி விடு. போ தூங்கு.

மீண்டும் ஒரு அட்டகாச ஐ.பி.எல் திரில்லர்

நேற்றைய மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் ஐ.பி.எல் வரலாற்றின் ஆக திரில்லிங்கான ஒன்று. ஐ.பி.எல்லில் சரவெடி போல் நான்கும் ஆறும் பறப்பதால் முன்பு போல் அது நம் இதயத்துடிப்பை எகிற வைப்பதில்லை. நேற்றைய ஆட்டத்தில் நெட் ரன்ரேட்டை உயர்த்துவதற்காக மும்பையினர் 190 இலக்கை 14.3 ஓவர்களில் அடிக்க வேண்டி வந்தது. அப்போது தான் அவர்கள் அரை இறுதிக்குள் போக முடியும். அசாத்தியம் என நாம் நினைத்த இலக்கை அடைய முயன்றதனால் தான் இதுவரை இல்லாத சாகச உணர்வை நேற்றைய ஆட்டம் அளித்தது. எனக்கு முன்னர் வங்கதேச டாக்காவில் இந்தியா பாக் இறுதிப் போட்டியில் இந்திய முண்ணூறுக்கு மேல் விரட்டி சென்று, இறுதி ஓவரில் ஸ்ரீனாத் கேட்சை எதிரணியினர் டென்ஷனில் தவறவிட்டு, இறுதி சக்லைன் பந்தில் கனிஷ்கர் நான்கு அடித்தது நினைவு வந்தது. அன்று நான் கொண்டாடியது போல் பின்னெப்போதும் செய்ததில்லை. பின்னர் 300 என்ன 400ஐ விரட்டுவது கூட கொசு அடிப்பது போல் ஆகி விட்டது. இது போன்ற அசாத்தியங்கள் தான் இப்போது நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

மைக் விழுங்கி கூட்டங்கள்

இலக்கிய கூட்டங்களை பற்றி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். “இப்போதுள்ள புது எழுத்தாளர்களுக்கு ஈகோ அதிகமாகி விட்டது. அவர்கள் கூட்டங்களுக்கு வருவதும் இல்லை; வந்தால் அதைப் பற்றி மூச்சு விடுவதும் இல்லை” என்றார். அவர் அதை விளக்கவும் செய்தார்.

இரு உரையாடல்கள்

அரசி: “என்ன இன்னிக்கு தொண்டர்கள் கூட்டம் ரொம்ப ஓவரா இருக்கே” விதூஷகன்: “இவர்களெல்லாம் கடந்த மூன்று வருடங்களில் நீங்கள் டிஸ்மிஸ் செய்த மந்திரிகள், நிர்வாகிகள் அரசி. பிழைக்க வழியில்லாமல் மீண்டும் உங்களை நாடி வந்திருக்கிறார்கள். பாவம் எதிர்க்கட்சியில கூட சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க” அரசி: “எதிர்க்கட்சியா? அப்பிடி ஒரு கட்சியே கிடையாதே” விதூஷகன்: “ஆமாம் அரசி. அதனால் தான் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.” அரசி: ”ம்ம்ம் பாவமாத் தான் இருக்கு. என்ன பண்ணலாம்” விதூஷகன்: “அரசி, நம் யானைகள் காப்பகத்தில் சோற்று உருளைகளை உருட்டுகள் வேலைகள் காலியாக உள்ளன. இவர்களை அதற்கு நியமிக்கலாமா? இல்லாட்டி அம்மா காண்டீன்ல அரிசியில கல்லு பொறுக்க அனுப்பலாம்.” அரசி: “இவனுங்களுக்கு ஒழுங்கா ஒரு சேலை மடிக்க தெரியாது. துரத்து எல்லாரையும். ஒருத்தனும் எம்முன்னே நிக்கக் கூடாது”

CM Cell: ஆக்கிரமிப்பும் அதன் சிக்கல்களும்

எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து சதா அமர்ந்திருப்பார். எவ்வளவு கூறியும் போக மாட்டார். எங்களையே மிரட்டுவார். அப்பார்ட்மெண்ட் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து கட்டபஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். அவருடைய குடிகார நண்பர்கள் சதா பத்து பேர் வேறு அவரை பார்க்க வந்து போய் கொண்டிருப்பார்கள். பக்கத்து கோயிலில் விழா நடந்தால் எங்கள் அப்பார்ட்மெண்டை தண்ணீர், சமையல் என அனைத்துக்கும் பயன்படுத்தி கலீஜாக்குவார்கள். அது போக விழா முடிந்த்தும் இவர்களுக்கிடையே அடிதடி எங்கள் அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே நடக்கும். இந்த ஆளுக்கு எதிராக cm cell இல் ( http://cmcell.tn.gov.in/) புகார் செய்தோம். எனக்கு நம்பிக்கை   இருக்கவில்லை. ஏதோ முதல்வன் பட ஸ்டைல் ஸ்டண்ட் என நினைத்தேன். ஆனால் ஒரு மாதம் கழித்து இன்று ஒரு போலீஸ்காரர் போன் செய்து உங்கள் புகார் வந்தது, நாங்கள் வந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். வியப்பாகி விட்டது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு வாட்ச்மேனை குடும்பமாக குடியிருத்தினோம். அதில் இருந்து கட்டபஞ்சாயத்துகாரர் அவ்வளவாய் வருவதில்லை. ஆனால் வாட்ச்மேன் குடும்பத்தை எப்படி வெளி...

குழப்பமான தேர்தல் முடிவுகள்

மோடி எதிர்ப்பு ஓட்டு? நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு கூட அதிர்ச்சி தான் என சில அதிமுக நண்பர்களிடம் பேசுகையில் அறிந்தேன். திமுகவினரிடம் பேசும் போது இவ்வளவு பாரித்த தோல்வியை அவர்களும் எதிர்பார்க்கவில்லை என தெரிந்த்து. ஆனால் ஒருவிதத்தில் மத்தியில் மோடிக்கு தனி பெரும்பான்மை கிடைத்த நிலையில் தமிழக முடிவுகள் அதிமுகவுக்கு சர்க்கரை நோய் வந்தவர் கையில் பாயச கிண்ணம் கொடுத்தது போல் ஆகி விட்டது. 15 சீட்டுகளுக்கு மேல் வாங்கி இருந்து ஒரு கூட்டணி கட்சி அமைகிற நிலை திமுகவுக்கு உதவியிருக்கும். ஆனால் இப்போது எல்லா வியூகங்களும் கலைந்து விட்டன. இரு கழக கட்சிகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் குறைவாகவும் கூடுதலாகவும் ஏமாற்றம் அளித்திருக்கும். மத்தியில் மந்திரி பதவி வாங்க 38 சீட்கள் பெற்றால் கூட போதாது. அதிர்ஷ்டம் வேண்டும். அதிமுகவுக்கு இதுவரை அது இல்லை.

வெளிச்சம்

அன்று வெளிச்சம் கடுமையாக இருந்தது . இரவு முழுக்க ஒரு விநோதமான வெப்பம் அவரை தொந்தரவு செய்தது . மதிய வேளை தூக்கம் போல் அசுவஸ்தையாக புரண்டு புரண்டு படுத்தார் . உடல் முழுக்க சருமம் தீப்புண் பட்டது போல் எரிந்தது . தயக்கமாக ஒரு அந்நிய உரையாடலுக்குள் நுழைவது போல் மெல்ல மெல்ல தூங்க முயன்றார் . கோடை ரொம்ப சீக்கிரமாகவே வந்து விட்டிருந்தது . வானிலை மையம் மழை பெய்யும் என்று ஊகித்திருந்தது . வெறும் ஊகம் தான் . வானம் தகிடு போல் பளபளத்தது . மொட்டை மாடிக்கு சென்று சுவர் விளிம்பில் சாய்ந்து அமர்ந்தார் .

டாஸ்மாக்குக்கும் அம்மா உணவகத்துக்கும் இடையே...

தமிழகம் வேறு எந்த மாநிலங்களை விடவும் சிறப்பான பல இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக இலவச மருத்துவ காப்பீடு. போன ஆட்சியில் தி.மு.க இலவச டி.வி வழங்கியதை ஒரு பெருந்திரள்வாத ( populist ) அணுகுமுறையாக பார்த்தனர். மறைமுகமாக அது சன் அலைவரிசைகளுக்கு உதவினால் இன்னொரு புறம் சாதாரண மக்களுக்கு இடையே முன்கண்டிராத அளவு ஊடக தொடர்புவலையை தமிழகம் முழுக்க ஏற்படுத்தியது. மக்களின் முன் உலகின் வாசலை திறந்து வைத்தது. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இலவச மிக்ஸி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இலவசங்கள் வழங்குவது ஆட்சியாளர்களுக்கிடையே ஒரு போட்டியாகவே மாறியது. ஆனால் நாம் கவனிக்காத ஒரு நுணுக்கமான தளத்தில் ஜெயலலிதா உற்பத்தி துறை சார்ந்த சில திட்டங்களை கொண்டு வந்து இங்குள்ள அரசியலில் ஒரு புது திருப்பத்தை கொண்டு வந்தார். இதை அரசு-சார் கார்ப்பரேட்வாதமாக நாம் பார்க்கலாம். 2004இல் ஜெயலலிதா அரசு டாஸ்மாக் மூலம் ஒட்டுமொத்த மது விற்பனையை தன்வசம் எடுத்தது தான் முக்கிய திருப்புமுனை. வேறு எந்த துறையிலும் அரசு இது போல் தனியார் நிறுவனங்களை கையகப்படுத்தி தானே நடத்த முனைந்ததில்ல...

அந்நிய நிலத்தில் அந்நியமாய் இருந்தேன் - ரீத்தா டோவ் (தமிழில் ஆர்.அபிலாஷ்)

வாழ்வின் வசியம் அதிஅற்புதமானது என்பதாலே அதை முறியடிக்க அனைத்தும் முயன்றபடி இருக்கின்றன – எமிலி டிக்கின்ஸன் அது பேருவகை அல்ல. சாதாரண வாழ்க்கையை தவிர்த்து எது தான் பேருவகை சொல்லுங்கள்? மெல்ல தட்டி ஓசைகள் எழுப்பியபடி மணிக்கணக்காய் செலவழிப்பாள், நாள் முழுதும் கழித்தாள் தொட்டும் நுகர்ந்தும் சுவைத்தும்... மகிழ்ச்சியில் சிறைவைக்கப்பட்ட ஒரு உலகில் அதி அற்புதமான வீட்டுவேலைகள் ஆனால் எப்போதும் அவை அநேகமாய் ஒன்று போலவே தோன்றின அந்த மகிழ்ச்சியும், இலக்கற்ற அங்கேயே இருத்தலும்.

முகமத் காயிப்: முழுமையடாத ஒரு அசார்

கேயிப்பை முதலில் பார்த்த போது எனக்கு அசருதீன் தான் நினைவு வந்தார். என் நண்பர்களும் அவர் கால்பக்கம் சொடுக்கும் ஷாட்டை பார்த்து அசரே தான் என்றார்கள். அசரைப் பொன்று ஒடிசலான ”போய் டீ வாங்க வரவா” என்கிற மாதிரியான துறுதுறுவென்ற தோற்றம். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் கங்குலியின் கீழ் கண்டறியப்பட்ட சேவாக், யுவ்ராஜ் போன்றோர்களுடன் காயிப்பும் முக்கியமான திறமையாகவே கணிக்கப்பட்டார். ஆனால் பின்னர் மத்திய வரிசை மட்டையாளர்களின் நெருக்கடியில் காணாமல் போனார். காயிப் பந்தை அடிக்கும் போது எனக்கு நொறுக்குத் தீனியை மெல்கிறாற் போன்ற மொறுக் எனும் உணர்வு தோன்றும். அப்படி ரொம்ப கூர்மையான மட்டையாளர். திராவிட் போல் நீண்ட நேரம் ஆடக் கூடியவர். அதேவேளை இன்னும் நளினமானவர்.

டிவில்லியர்ஸ்: என்னடா பண்றது உன்னை?

தோனி, கெய்ல், மேக்ஸ்வெல் போன்று பல ராட்சச மட்டையாளர்கள் இருந்தாலும் அவர்களின் வாணவேடிக்கை ஷாட்கள் ஒருவழி டிராபிக் தான். தோனிக்கு பந்து நேராகவோ காலிலோ விழ வேண்டும். கெய்லுக்குக்கும் கிட்டத்தட்ட அது தான் ஏரியா. மேக்ஸ்வெலுக்கும் கால்பக்கம் அடிக்க பிடிக்கும். அவருக்கு வாரியடிக்கும் விதம் பந்தை கொஞ்சம் வைடாக போட்டால் இன்னும் இஷ்டம். தூக்கி அடிக்கையில் மட்டையின் அந்த வளைவு அவருக்கு முக்கியம். இவர்களை பலவீனமான இடங்களில் பந்து வீசி தடுக்க முடியும். ஆனால் ஆப், நேரே, உயரப்பந்து, கால் திசை என எங்கும் சமநிலை இழக்காமல் சிக்ஸ் அடிக்கக் கூடியவர் எ.பி.டிவில்லியர்ஸ் தான். நேற்றைய ஐ.பி.எல் ஆட்டத்தை அவர் தன்னந்தனியாக வென்றளித்தார். மகாபாரதத்தில் அர்ஜுன்ன் அம்பு ஒன்று பத்தாகி, பத்து நூறாகி ஆயிரமாகி பொழிவது போல் இருக்கிறது ஏ.பி அடிக்கும் சிக்ஸர்கள். 360 கோணத்தில் அனாயசமாய் சிக்ஸர்கள் விளாசக் கூடியவர் இவர் மட்டும் தான். இது எப்படி சாத்தியமாகிறது? முக்கிய காரணம் தோனி, கெய்ல் போன்று டிவில்லியர்ஸுக்கு ஒரு நிலைத்த ஸ்டான்ஸ் இல்லை. ஒரு பனிச்சறுக்கு வீரரை போல் நிற்கிறார். கையில் மட்டையும் இளகலாக லேசாக ...