முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

CM Cell: ஆக்கிரமிப்பும் அதன் சிக்கல்களும்




எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து சதா அமர்ந்திருப்பார். எவ்வளவு கூறியும் போக மாட்டார். எங்களையே மிரட்டுவார். அப்பார்ட்மெண்ட் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து கட்டபஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். அவருடைய குடிகார நண்பர்கள் சதா பத்து பேர் வேறு அவரை பார்க்க வந்து போய் கொண்டிருப்பார்கள். பக்கத்து கோயிலில் விழா நடந்தால் எங்கள் அப்பார்ட்மெண்டை தண்ணீர், சமையல் என அனைத்துக்கும் பயன்படுத்தி கலீஜாக்குவார்கள். அது போக விழா முடிந்த்தும் இவர்களுக்கிடையே அடிதடி எங்கள் அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே நடக்கும்.
இந்த ஆளுக்கு எதிராக cm cellஇல் (http://cmcell.tn.gov.in/) புகார் செய்தோம். எனக்கு நம்பிக்கை  இருக்கவில்லை. ஏதோ முதல்வன் பட ஸ்டைல் ஸ்டண்ட் என நினைத்தேன். ஆனால் ஒரு மாதம் கழித்து இன்று ஒரு போலீஸ்காரர் போன் செய்து உங்கள் புகார் வந்தது, நாங்கள் வந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். வியப்பாகி விட்டது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு வாட்ச்மேனை குடும்பமாக குடியிருத்தினோம். அதில் இருந்து கட்டபஞ்சாயத்துகாரர் அவ்வளவாய் வருவதில்லை. ஆனால் வாட்ச்மேன் குடும்பத்தை எப்படி வெளியே அனுப்புவது என புது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. வாட்ச்மேன் வேலையே செய்யாமல் இடத்தை மட்டும் ஆக்கிரமித்து வருகிறார். அதனால் போலீஸ்காரரிடம் நடவடிக்கை ஏதும் இப்போதைக்கு தேவையில்லை என்று கூறி விட்டோம். புதுபிரச்சனையில் தான் எங்கள் கவனம்.
ஒன்று, இந்த இணைய புகார் மையம் வேலை செய்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது பாராட்டுக்குரியதும் கூட. ஒரு புகார் அளிக்க காவல்நிலையம் வரை போக வேண்டியதில்லை என்பதும், இணையவழி புகார் நன்றாக வேலை செய்கிறது என்பதும் நல்ல விசயம். 
இரண்டு, இதில் நகைமுரண் என்னவென்றால் இந்த அத்துமீறீ ஆக்கிரமித்து கட்டபஞ்சாயத்து பண்ணுகிறவர் ஒரு அதிமுக ஆள். தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த முறை அதிமுகவின் (ஆதம்பாக்கம்) கவுன்சிலர் வந்த போது இவரைப்பற்றி புகார் சொன்னோம். தேர்தல் முடிகிற வரை ஒன்றும் பண்ண முடியாது என்று விட்டார். அதிமுகவுக்குள் உள்ள ரௌடிகளைப் பற்றி புகார் சொல்ல ஒரு தனி CM cell பிரிவு வேண்டும் போல. அதற்கு ADMK CM cell என்று பெயர் வைக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...