காஷ்மீர் படகு வீடுகள் புகழ்பெற்றவை. அவற்றின் தோற்றம் பற்றி The Many Faces of kashmiri Nationalism நூலில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு வருகிறது.
முன்பு காஷ்மீரில் பட்டாம்பூச்சிகள் பற்றி ஆய்வு செய்ய சில ஆங்கிலேயர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தங்கி ஆய்வு செய்ய சொந்தமாய் வீடுகள் வேண்டும். ஆனால் ஆங்கிலேயர் காஷ்மீரில் வீடு வாங்க சட்டம் அனுமதிக்காது. அதனால் யூசுப் சாப்ரி எனும் ஒரு படகோடியின் முன்னோர்கள் சட்டத்தை மீறாமலே வீடு வாங்க ஒரு வழிமுறை கண்டறிகிறார்கள்: படகு வீடுகள்.
எனக்கு இதைப் படித்ததும் நினைவுக்கு வந்தவை சைவ உணவுக்காரர்களுக்கு மட்டும் வாடகை வீடு அறிவுப்புகள், தன் ஆட்சியை காப்பாற்றும் நோக்கில் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்ஸி, தமிழில் பெயர் வைத்தால் படங்களுக்கு வரி விலக்கு சட்டம், பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்து விட்டு இரண்டு நாட்களில் நான்கு ரூபாயாக விலையேற்றும் மத்திய அரசின் தந்திரம் ஆகியவை. டிப்பிக்கல் இந்திய மூளை.
கருத்துகள்