முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகத்தான சல்லிப்பயல்


ஒரு எழுத்தாளனின் சுயம் என்பது அவர் எழுத்தில் உள்ளது மட்டும் அல்ல. அவர் எழுத்தில் உள்ள அக்கறைகளும் வாதைகளும் கட்டமைப்பவையாக கூட இருக்கலாம். போலியாக என்று சொல்லவில்லை. ஆனால் மொழிக்குள் மட்டும் செல்லுபடியாகும் உண்மைகளாய் அவை இருக்கலாம்.

பிரமிள் சு.ராவிடம் பணம் வாங்கி விட்டு பின் ஊரெல்லாம் தன்னிடம் சு.ரா கடன் வாங்கி விட்டு தர மறுக்கிறார் என் புகார் கூறித் திரிகிறார். இதை சு.ரா பிரமிள் பற்றின நூலில் எழுதி இருக்கிறார். ஆனால் பிரமிளின் கவிதைகளில் எங்காவது பணம் பற்றின கவலைகள் தெரியுமா? இல்லை. சதா பணம் பற்றின புலம்பல்களை விக்கிரமாதித்யனின் கவிதைகளில் காணலாம். ஆனால் அவரிடம் நேரடியான பழக்கத்தில் இந்த ஆவலாதிகள் வெளிப்படாது. இதில் எந்த அக்கறை உண்மையானது? இரண்டுமே தான்.

பிரமிள் ஒரே சமயம் வானில் பறப்பவராகவும் மண்ணில் ஊர்பவராகவும் இருந்திருக்கிறார். அவருடைய மனப்பிரச்சனை பணம் சார்ந்த complexஇல் இருந்து வருகிறது என சு.ராவோ நாமோ நினைக்கலாம். அது உண்மையாகவோ பாதி உண்மையாகவோ இருக்கலாம். ஆனால் பிரமிளை் கவிதைகள் மூலம் மட்டும் அறிந்தவர்களுக்கு அக்கூற்று ஏற்க முடியாததாய் இருக்கும்.

ஆத்மாநாமின் மனச்சிக்கல் புகழாசையினால் விளைந்தது என அழகிய சிங்கர் கூறியதையும் அதனால் ஆத்மாநாம் வாசகர்கள் காயப்பட்டு எதிர்வினையாற்றுவதையும் நான் இப்படித் தான் புரிந்து கொள்கிறேன். ஆத்மாநாமை கவிதை வழியாக மட்டுமே அறிந்த எனக்கும் கூடத் தான். என் மனதில் உள்ள சித்திரம் ஆத்மாநாம் இருத்தலிய சிக்கல்களினால் வாழ்வைத் தொலைத்தவர் என்பது. ஆனால் அது ஒரு பிம்பம் மட்டுமே தானே. கவிதைக்கு வெளியே அது உண்மையா என எனக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை எழுத்துக்கு வெளியே மற்றொரு ஆத்மாநாம் இருக்கலாமே.

ஒரு கவிதையையோ கூடப் பழகின மனிதரையோ தன் விருப்பப்படி அர்த்தப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஏன ஆத்மாநாமின்் கண்ணாடிக் கவிதையை கருத்துவாதம் பற்றின கவிதையாக நான் புரிந்து கொள்ளும் போது அதை புகழ் எனும் கண்ணாடி பற்றினதாக ஏன் அழகியசிங்கர் விளங்கிக் கொள்ளக் கூடாது? அவர் கவிதையை வைத்து கவிஞனை புரிந்து கொள்ளலாம் அல்லது கவிஞனை வைத்து கவிதையை புரிந்து கொள்ளலாம். அது அவர் விருப்பம்.

தஸ்தாவஸ்கிக்கு தன் தந்தையை கொல்ல வேண்டும் எனும் இச்சை இருந்தது. அது குறித்த குழப்பங்களும் சிக்கல்களுமே அவரை கரமசோவ் சகோதரர்கள் நாவலை எழுத தூண்டியது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஒன்றும் இல்லை. வெறும் ஊகம். ஆனால் அந்த ஊகம் தான் இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக்குகிறது.

ஆத்மாநாம் அற்ப விசயங்களுக்காகவும் அலைந்திருக்கக் கூடும் என்பதை ஏன் பரிசீலிக்கக் கூடாது? அவர் நம்மைப் போன்ற ஒருவர் தானே?
முன்பு அழகியசிங்கர் பிரமளின் ஒரு வெகுளித்தனமான அபத்தமான பரிமாணம் பற்றி இதே போல் எழுதினார். அதை ரசித்தேன். அவர் இது போல் முன்னாள் நட்சத்திரங்களை தொடர்ந்து எளிய நடைமுறைத் தளத்தில் வைத்து பார்க்க முயல்வது எனக்கு பிடித்திருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...