முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம். எஸ். தோனி விடைபெறுகிறார்…

Image result for ms dhoni
எம்.எஸ் தோனி தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். உலகின் சிறந்த அணித்தலைவர்களில் ஒருவர், ஒரு தலைமுறைக்கே நவீன பேட்டிங்கை கற்றுத் தந்தவர், எப்போதும் முக்கியமான தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு சொதப்பும் இந்திய அணியினருக்கு முடிவை பற்றி அஞ்சாது ஆடினால் வெற்றி எவ்வளவு சுலபமாய் கிடைக்கும் என புரிய வைத்தவர். தோற்கும் வேளையிலும் அதை அலட்டாமல் கடந்து போக கற்றுத் தந்தவர். இந்திய மக்களின் சாராம்சமான ஒட்டாத, விட்டேந்தி மனநிலையை கிரிக்கெட்டின் வெற்றி சூத்திரமாக மாற்றியவர். இந்திய கிரிக்கெட்டின் மீது சச்சினை விட, கங்குலியை விட மிகப்பெரும் தாக்கத்தை செலுத்தியவர். எம்.எஸ் தோனி கிரிக்கெட்டில் மட்டும் அல்ல வெளியேயும் நமக்கு ஒரு ஊக்கவிசை தான். ரொம்ப நெருக்கடி ஏற்படும் போது கராறாய், தர்க்க ரீதியாய், கொஞ்சம் எந்திரத்தனமாய், எதிலும் பட்டுக்கொள்ளாமல் இயங்குவது ஒரு அற்புதமான வழிமுறை. எவ்வளவு பெரும் பிரச்சனைகள் வந்தாலும் போனாலும் நாம் கடைசியில் இருப்போம். நம் உழைப்புக்கு ஒரு பிரதிபலன் உண்டு. மலையை நகர்த்த முடியாவிட்டாலும் நம்மளவில் ஒரு கல்லை நகர்த்தி வைப்போம். இது தான் தோனியின் தத்துவம்.



எனக்கு தோனி இரண்டு விசயங்களை நினைவுபடுத்துவார். எல்லாரும் பதற்றமாய் இருக்கும் போது எங்கள் ஊரில் இந்த பழமொழியை யாராவது போகிற போக்கில் சொல்வார்கள்: “யானை வந்தால் ஆளைக் கொல்லும்; மயிரையா புடுங்கும்?” எனக்கு இதைக் கேட்கும் போதெல்லாம் ஒரு புன்னகை வரும். இந்தியா தோல்வியில் ஒரு மலரை போல் உதிரத் துவங்கும் போதெல்லாம் தோனி இந்த மனநிலையுடன் தான் பேட்டிங் ஆட வருவார். யானை மிதிக்கும் அந்த கடைசி த்ருணம் வரை அவர் கவலைப்பட மாட்டார். அந்த நொடி ஒரு நொடி தானே? ஒரு நொடியை ஏன் நிமிடங்களாய் நீடிக்க வேண்டும்? தோனி நமக்கு தோல்வியையும் வெற்றியையும் சமமாக பாவிக்க சொல்லித் தந்தவர். வாழ்க்கை இரண்டையும் கடந்தது என புரிய வைத்தவர்.


இப்போது இந்த முக்கிய விடைபெறும் தருணத்திலும் தோனி நமக்கு அதையே சொல்வார். ஓய்வு என்பெல்லாம் வெறும் சொல் தானே. நம் வேலைகள் தொடரும்! ஒரு மலையை நகர்த்த வேண்டி இருக்கிறது!


கருத்துகள்

https://antonyfrancisomd.blogspot.com/ இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் பிடித்தமான ஒரு நபர் தோனி. அவரைப் பற்றி எனது மனதில் அவ்வப்போது வந்து போகும் எண்ணங்களை அப்படியே மொழிபெயர்த்தது போல் உள்ளது உங்களது கட்டுரை. நன்றி
”தளிர் சுரேஷ்” இவ்வாறு கூறியுள்ளார்…
தோனி இந்திய கிரிக்கெட்டை வெற்றிப் பாதைக்கு திருப்பியவர் என்பதில் மிகையில்லை! டெஸ்டில் இருந்து விலகிய போதும் இப்போது ஒருநாள் டி 20 அரங்கில் இருந்து விலகும் போது தன்னுடைய விலகலை கூட மிக சாதாரணமாக அறிவித்து அசத்திவிட்டார். தனியாக பிரிவுபசார போட்டிகள் என்று வைக்க அவகாசம் தராமல் முடிவை மிக சரியான தருணத்தில் எடுத்துள்ளார். நல்லதொரு கட்டுரை! பாராட்டுக்கள்!
சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்…
சான்சே இல்ல சார்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...