முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவுச்சிக்கல்கள் பாலியல் குற்றமாகும் தருணம் – சுபாய் கய் – கேட் ஷர்மா விவகாரம் (1)


Image result for subhash ghai kate sharmaImage result for subhash ghai kate sharma
கேட் ஷர்மா எனும் டிவி நடிகை மற்றும் மாடல் இப்போது சற்றே விசித்திரமான கொஞ்சம் குழப்பமான ஒரு பாலியல் வழக்கை இந்திப்பட இயக்குநர் சுபாஷ் கய் மீது தொடுத்துள்ளார்.
இந்த நடிகை சுபாய் கய்யை நன்றாகத் தெரிந்தவர். பார்ட்டிகள் அவர் சுபாய் கய்யுடன் கலந்து கொண்டு எடுத்த போட்டோக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஒரு மாலையில் அவர் சுபாய் கய்யின் இல்லத்தில் இருக்கிறார். கூட ஐந்து நண்பர்களும் உண்டு. நண்பர்கள் முன்னிலையில் அவர் நடிகையை தனக்கு மசாஜ் பண்ண கேட்கிறார். நடிகையும் அதை செய்கிறார். இதன் பிறகு சுபாய் கய் தன்னை அறைக்கு வரச் சொல்லி அங்கே தன்னை அரவணைத்து முத்தமிட முயன்றதாய், தான் உடன்பட மறுத்த போது தன் படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை என மிரட்டியதாகவும் அவர் கூறுகிறார். இதை அடுத்து இருவரிடையே சாட்டில் உரையாடல் தொடர்கிறது. சாட்டிலும் அவர் தன்னை மிரட்டியதாய் நடிகை கூறுகிறார்.

இந்த குற்றச்சாட்டை அவர் நேரடியாய் காவல் துறைக்கு புகாராய் அளித்துள்ளார்; அவர் மீடியாவுக்கு அளித்துள்ள அந்த குற்ற விவரணையிலும் மசாஜ் தகவல் சொருகப்பட்டுள்ள விதத்தை கவனிக்க வேண்டும்.
ஒரு பெண் தன்னை ஒரு ஆண் வன்புணர்வு செய்த்தாய் புகார் அளிக்க 1) அவர் தன்னை உடல்ரீதியாய் அத்துமீறியதற்கான ஆதாரங்கள் (காயங்கள்) மற்றும் 2) தன்னுடன் வற்புறுத்த உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் (விந்து, வியர்வை இன்னபிற) வேண்டும்.
ஆக, இவ்வழக்கு பலாத்காரம் ஆகாது, பாலியல் தொந்தரவு வழக்காகும்.
மஹிமா குக்ரெஜா என்பவர் தன் டிவிட்டெரில் சுபாஷ் கய் ஒரு பெண்ணுக்கு மதுவில் போதை மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாய் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வழக்குத் தொடுக்கவோ தன் பெயரை வெளிப்படுத்தவோ இல்லை.
இந்த வழக்கு வலுவானது. அவர் அடுத்த நாள் வழக்கு தொடுத்திருந்தால் சுபாஷ் கய் உள்ளே போயிருப்பார். சமீபத்தைய சட்ட திருத்தங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் தான் விருப்பமின்றி உறவு கொள்ளப்பட்டதாய் நிரூபிக்க தேவையில்லை. அதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்ட ஆளுக்கானது. ஆனால் உறவு நடந்ததற்கான நிரூபணம் வேண்டும்.
டி.என்.ஏ சோதனை இதற்கு உதவும். குற்றம் நடந்த பின் விசாரணை அதிகாரிகள் ஒரு மருத்துவரின் துணையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் உள்ள வியர்வை, எச்சில், ரத்தம், விந்து உள்ளிட்ட வஸ்துக்களை சேகரித்து அதில் உள்ள டி.என்.ஏ மூலம் குற்றம் செய்தவரை உறுதிப்படுத்த முடியும்.
ஆனால் குற்றம் நடந்து ஒரு நாளுக்குள் தடயங்கள் அழியுமுன் இந்த சோதனை செய்யப்பட வேண்டும்.
ஆனால் மேற்சொன்ன குற்றச்சாட்டில் அதற்கான காலம் கடந்து விட்டது.
அப்பெண் தான் அவருடன் வீட்டில் இருந்த போது அவர் தன் தொடையை வருடினதாகவும், அதன் பின்னர் தன் நிலையை கூறி அழுது புலம்பியதாகவும், அழுத நிலையில் அப்பெண்ணின் தோளில் சாய்ந்ததாகவும், இதன் பின் முத்தமிட்டதாகவும் கூறுகிறார். அப்பெண் இதன் பின் வீட்டுக்கு சென்ற பின் நடந்ததைக் குறித்து வருந்துகிறார். ஆனால் தொடர்ந்து சுபாய் கய்யுடன் வேலை செய்கிறார். அப்போது தான் மேற்சொன்ன வன்புணர்வு நடக்கிறது. சுபாய் கய் அவரை காரில் அழைத்து செல்கிறார். அவர் அளித்த பார்ட்டி டிரக் கலந்த மதுவை அப்பெண் குடித்த பின் மயங்கின நிலைக்கு செல்கிறார். அதன் பின் கய் தன்னை ஒரு நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாய் அப்பெண் கூறுகிறார்.
இங்கு அப்பெண் ஏன் முதலில் கய்யை தன் உடலைத் தொட அனுமதித்தார், ஏன் தொடர்ந்து அவருடன் பணி செய்தார், ஏன் காரில் சென்றார், ஏன் மதுவருந்தினார் போன்ற கேள்விகளுக்கு சட்டத்தில் பிரசித்தம் இல்லை. இன்று சட்டம் வெகுவாக மாறி விட்டது. மேற்சொன்ன பெண்ணின் நடத்தை தவறானது என முன்னர் வழக்காடு மன்றத்தில் வாதாடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது.
AIR 1979 SC வழக்கின் பின், உறவின் போது பெண்ணின் இணக்கம் என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர் தனக்கு சாதகமாக்க முடியாது என நீதிமன்றம் கருத துவங்கி விட்டது.
ஆக, அப்பெண் ஏன் அவரை இந்தளவுக்கு எல்லை மீற அனுமதித்தார் எனும் கேள்விகளுக்கு இனி சட்டத்தில் பிரசித்தம் இல்லை.
ஆனால் நடைமுறையில் இது சற்று குழப்பமான சங்கதி. ஒரு ஆண் தன்னை சில நொடிகள் பார்க்கிற விதத்தை வைத்தே பெண்கள் அவரை நெருங்கலாமா என முடிவெடுப்பார்கள். ஆனாலும் சில நேரங்களில் சில அதிகாரமிக்க, ஆதிக்கமான ஆண்களுடன் – முழு விருப்பமின்றி - பழக வேண்டிய தேவை பெண்களுக்கு ஏற்படுகிறது. வேலையிடங்களில் இது நடப்பதுண்டு. இந்த நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் அத்துமீறலாய் மாறும் என பெண்கள் அறிவார்கள். ஆனால் பணம், வாய்ப்பு, தனிப்பட்ட தேவைகள் ஆகிய காரணங்களுக்காக பெண்கள் அந்த ஆபத்தான கட்டம் வரை போய்ப் பாய்க்கலாம், பிரச்சனை வந்தால் அப்போது தற்காத்துக் கொள்ளலாம் என நினைப்பார்கள். அதாவது தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறார்கள்.
 இது ஒரு குழப்பமான நிலை, ஒரு grey area. ஒரு பெண் தன்னை ஓரளவுக்கு இத்தகைய சூழலுக்கு உட்படுத்தின பின் ஆணுக்கு தவறான சில நம்பிக்கைகள் கிடைக்கும். ஒரு பெண் தொடையை வருட அனுமதிக்கிறார்கள் என்றால அடுத்த கட்டத்துக்கு போகலாம் என நினைப்பார்கள். ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில் எந்த எல்லை வரை ஆணை அனுமதிக்கலாம் என்பதில் பெண்ணுக்கு ஒரு உறுதிப்பாடு இருக்கும். இதை ஆண் அறிய மாட்டான். அந்த எல்லையை அவன் தாண்டும் போது இது பலாத்காரம் ஆகிறது. பலாத்காரம் என்பது ஒரு பெண்ணை பின் தொடர்ந்து போய் கடத்தியோ உடல் பலத்தை பிரயோகித்தோ வன்புணர்வது மட்டுமல்ல. இது போன்ற இணங்கியும் இணங்காத பல உறவுகளும் வன்புணர்வுகளே என்கிறது நமது சட்டம்.
இங்கே பெண்ணின் தரப்புக்கு மதிப்பளிப்பதற்கு ஒரு காரணம் அவள் பலவீனமானவளாய் இருக்கிறாள் என்பது.
சுபாய் கய் போன்றவர்கள் செய்யும் குற்றம் தொடர்ந்து மறைமுக அழுத்தத்தை செலுத்தி பெண்களை இந்த எல்லைக்கு தள்ளுவது. உ.தா., ஒரு வீட்டுக்கு வேலைக்காரி பெண்ணை முதலாளி போகிற போக்கில் உரசுகிறார், அவர் விரல்களை எதையோ வாங்கும் சாக்கில் தொடுகிறார், அப்போது அப்பெண் எதிர்க்கவில்லை என்றால், அதற்கு அவர் தரப்பில் நியாயம் இருக்கலாம். ஆனால் அதற்காய் ஆண் அப்பெண்ணிடம் அத்துமீறத் துணிந்தால் அது அவள் அனுமதியுடன் அல்ல.
இதையெல்லாம் உணர்ந்து தான் சட்டம் தற்போது குற்றம் சாட்டும் பெண்ணுக்கு ஆதரவாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...