முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#metooவின் தத்துவார்த்த பிரச்சனை



என்னுடைய மாணவர் ஒருவர் நேற்று #metoo குறித்த சில அடிப்படையான வினாக்களை எழுப்பினார்:
1)   காலங்காலமாய் பெண்கள் ஆண்-வழி அதிகாரத்தால் (patriarchy) ஒடுக்கப்படுகிறார்கள். ஆணை நம் சமூகம் இத்தகைய அதிகாரம் படைத்தவனாகவே வளர்க்கிறது, அவன் இத்தகைய அதிகாரத்தை வெளிப்படுத்த, பிரயோகிக்க தூண்டுகிறது, அவன் அவ்வாறு செய்யும் போது அவனை போற்றுகிறது. ஆகையால் அவன் தனக்கு ஒரு வாய்ப்பு அமையும் போது பெண் மீது பாலியல் அத்துமீறல் செய்து அவளை அடக்கவும் ஒடுக்கவும் நினைப்பதுதானே சாத்தியம். ஆகையால் நாம் metooவின் போது ஒரு பெண்ணை ஆதரிப்பது தானே நியாயம். இல்லையா?

2)   Metoo இயக்கம் ஒரு மிலிடெண்ட் பெண்ணியம், அது பிழையானது, அநீதியானது என ஏன் சொல்கிறீர்கள்?
இனி metooவின் தத்துவார்த்த பிரச்சனை:

1)   ஆண்-வழி அதிகாரம் என்பது ஒரு சமூக அரசியல் கட்டமைப்பு. அதிகாரம் எப்போதும் ஓரிடத்தில் உறைவதல்ல. ஒருவரது பால்நிலையும் இன்று அப்படியே பார்க்கப்படுகிறது. இது குறித்து சமகால கருத்தியல்பின்நவீன பெண்ணியமும் சேர்த்து என்ன சொல்கிறது? ஒருவர் ஆணாய் பிறப்பதனால் மட்டுமே அவரிடம் ஆண்-வழி அதிகாரம் வெளிப்படவோ உறையவோ அவசியமில்லை. ஒரு பெண்ணிடமும் ஆண்-வழி அதிகாரம் செயல்படலாம். இன்றைய ஓரின பால்நிலை இயக்கங்கள் இந்த அடிப்படையில் ஆனவை. ஆண்-வழி அதிகாரம் ஆணுக்கானது எனும் போது, ஆண் உடலால் ஆனவன் என அர்த்தம் வருகிறது. ஆண் தன் உடலால் தீர்மானிக்கப்பட்டவன் என்றால் அவன் பெண்ணை நோக்கி மட்டுமே ஈர்க்கப்பட முடியும். பெண்ணும் இவ்வாறு ஆணை நோக்கி மட்டுமே ஈர்க்கப்பட முடியும். ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணோடும் இணைந்து வாழ முடிகிற காலம் எதிர்காலம் அல்ல, சட்டம் அதை இன்று அதிகாரபூர்வமாக்கி விட்டது. ஆனால் metoo இயக்கம் மீண்டும் ஆண் என்பவன் உடலால் மட்டுமே ஆண், அவன் ஆணாக பிறந்தாலே பெண்ணை ஒடுக்கும் அதிகாரமும் விழைவும் கொண்டன் எனக் கோருகிறது. சமூகத்தில் ஆணாதிக்கம் நிலவுகிறது. இவன் ஒரு ஆண். ஆகையால் ஆணாதிக்கத்தை இயல்பாகவே மேலெடுக்கிறான் என metoo ஆதரவாளர்கள் சிந்திக்கிறார்கள். இச்சிந்தனை உறுதிப்படப் பட, ஓரின உறவு அரசியலை பேசுகிறவர்களுக்கு ஊறு விளைவிக்கும்.
சுருக்கமாய் சொல்வதானால், ஒரு ஆண் மீது குற்றச்சாட்டு எழுந்ததும், “நீ ஒரு ஆண், ஆகையால் நிச்சயம் குற்றம் புரிந்திருப்பாய்என தீர்ப்பெழுதுகிறோம். இதை நாம் ஏற்கும் பட்சத்தில், ஒரு ஓரினச் சேர்க்கையாளனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு லெஸ்பியனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆணாய் பிறந்து ஓரின விழைவுகளால் ஆண்-வழி அதிகாரத்துக்கு பலியாகும் ஒரு ஆணின் அடையாளமும் இத்தகைய ஆண்-பெண் இருமையால் சிதைகிறது.
நான் ஏதோ சம்மந்தமின்றி தலையையும் வாலையும் முடிச்சிடுகிறேனோ என உடனடி ஐயம் தோன்றலாம். ஆனால் நுணுகி யோசித்தால் இதிலுள்ள உண்மை உங்களுக்கு விளங்கும்.
வலதுசாரி சிந்தனை (இந்துத்துவா, வஹாபியம் உள்ளிட்டவை) ஆண்-பெண் இருமையை அடிப்படையாய் கொண்டது. இந்துத்துவர்களின் நோக்கமே மேற்கத்திய சிந்தனைகளால் பலவீனப்பட்ட இந்திய ஆணை தேசியவாதியாக்கி வலுவாக்குவது தான். ஆண்-வழி அதிகாரத்தை ஆணாக கற்பித்து இந்த ஆணை இந்து சமூகமாய் இவர்கள் சித்தரிக்கிறார்கள். ஆணென்றால் ஆணதிகாரம் என metoo இயக்கத்தினர் இப்போது கூவுவது வலதுசாரி சிந்தனையுடன் கைகோர்க்கும் ஒன்றாகும் (மறைமுகமாக).
இன்றைய, மையநீரோட்ட அரசியல் எப்படி வலதுசாரித்தனத்தை ஊக்குவிக்கிறது என்பதற்கு metoo இயக்கம் ஒரு சான்று.
இனி நடைமுறை பிரச்சனை:
2)   உங்கள் முன் ஒரு கோடி ரூபாய் பணம் இருக்கிறது. அதன் உரிமையாளர் அதை எடுத்து எண்ணும் போது பணம் குறைகிறது. நீங்கள் அதன் முன் இருந்த்தால் மட்டுமே, உங்களுக்குப் பணத் தேவை உண்டென்பதாலே நீங்கள் திருடனாகி விடுவீர்களா? விசாரணையே இன்றி ஊரே உங்களை திருடனென்றால் அது நீதியா? metooவில் சாட்டப்படும் குற்றங்கள் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் நம் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறையும் பாலியல் குற்றங்களும் (திருட்டைப் போல) நிகழ்கிறது என்பதற்காய் குற்றம் சாட்டப்படுவரை கேள்வியே இன்றி குற்றவாளி ஆக்கலாமா? நான் பாதிக்கப்பட்டவரிடம் சான்றை கேட்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரை கூட்டமாய் மொத்துவதில் நாம் காட்டும் இந்த ஆவேசமே என்னை கவலைப்பட வைக்கிறது. சமீபத்தில் குஜராத்தின் ஹிம்மத்நகரில் ஒரு பலாத்காரம் நடந்த போது அதற்குக் காரணம் ஒரு குஜராத்தி, வேற்று மாநிலத்தவர், ஆகையால் வேற்று மாநிலத்தவர்வர்களே இக்குற்றங்களுக்குக் காரணம் என ஒரு பீதியும் வெறியும் குஜராத்திகளிடையே கிளம்ப, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அப்பாவிகள் அனைவரும் ரேப்பிஸ்டுகள் எனும் பிம்பம் உடனே கட்டமைக்கப்பட்டு தாக்கப்பட்டார்கள். அத்தகைய வன்முறையில் பெண்ணியவாதிகள் ஈடுபடுவதில்லை என்றாலும், இதே மூர்க்கம், முன்முடிவாலான ஆவேசம் அவர்களிடம் இன்று காணப்படுகிறது. “ஆணென்றாலே அப்படித்தானேஎனும் தொனி இல்லாத ஒரு metoo ஆதரவு பதிவைக் கூட நான் படிக்கவில்லை. metooவில் பல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்புண்டு, அதில் அவர்களுக்கு ஆதரவும் குரலும் உண்டு. நான் மறுக்கவில்லை. ஆனால் ஆதாரமாய் இந்த இயக்கத்தின் பாதை தவறானது, கும்பல் வன்முறைக்கு இணையானது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...