
புற்றுநோய்க்கான அலோபதி சிகிச்சை குறித்துச் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு மின்னம்பலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். புற்றுநோயைக் குணப்படுத்த இயலாது எனத் தெரிந்தும் அலோபதி மருத்துவம் சிகிச்சைக்காக லட்சங்களில் நம்மைச் செலவு செய்ய வைக்கிறது என்பதை விளக்கியிருந்தேன். இந்தப் பின்னணியில் அலோபதியையும் மாற்று மருத்துவ முறைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
அலோபதிக்கும் பிற மருத்துவ முறைகளுக்குமான வேறுபாடுகளும் முரண்களும் அதிகம். அலோபதி மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் மாற்று மருத்துவ முறைகளை ஏற்பதில்லை. மாற்று மருத்துவத்தின் மீது அலோபதியினர் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகளைச் சற்று ஆராய்வோம்.
குற்றச்சாட்டு 1: மாற்று மருத்துவம் முறைமை இல்லாதது.
ஆம், அதனால்தான் அது மாற்று மருத்துவம். முறைசாரா வாழ்க்கை இயக்கங்கள் அனைத்தையும் எதிர்ப்பது சரியா? தர்க்க ரீதியான தீர்வுகள் மட்டுமே நலன் பயக்கும் எனும் எண்ணம் ஐரோப்பிய அறிவொளிக் காலத்தில் எச்சம் மட்டுமே. நாம் இன்று மிகையாக தர்க்கத்தை / பகுத்தறிவை நம்பி இருப்பதை ஏற்பதில்லை.
குற்றச்சாட்டு 2: மாற்று மருத்துவம் தன்னை நிரூபிக்கவில்லை; போதுமான ஆதாரங்களை அது அளிப்பதில்லை.
அலோபதியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கைப் பார்வையை, சிந்தனை முறையைக் கொண்டது மாற்று மருத்துவம். அதன் நிரூபண முறை என்பது நம்பிக்கை சார்ந்தது; அன்றாட வாழ்வில் கிடைக்கும் நுணுக்கமான மேம்பாடுகளைக் கவனிப்பதால் கிடைப்பது; வாழ்வை அமைதி மற்றும் ஆழமான திருப்தியை நோக்கி நகர்த்துவது; பரிபூரணமான அகம், புறம் இரண்டுக்குமான முன்னேற்றமே மாற்று மருத்துவத்தின் நோக்கம். அதை நிரூபிக்கச் சொல்வது ஓர் ஆன்மிகவாதியிடம் “ஆன்மாவை நிரூபி” என கோருவதைப் போல. ஒரு காதலனிடம் “உன் அன்பும் ஆசையும் வெறும் ஹார்மோன்களின் குழப்படி” எனச் சொல்வதைப் போல.
சுருக்கமாய் சொல்வதானால், மாற்று சிகிச்சை முறை நம் மொத்த வாழ்க்கை முறையையும் சீரமைக்க உத்தேசிக்கிறது. அலோபதி உடலை ஓர் எந்திரமாகவும், உடலின் கோளாறுகளைத் தனித்தனியாகவும் பார்க்கிறது. இதயக்கோளாறை அது இதயத் தசைகள் மற்றும் தமனிகளின் கோளாறாய் மட்டும் பார்க்கிறது. ஆனால், மாற்று மருத்துவம் அப்படித் தனித்தனியாய் காண்பதில்லை.
மேலும் படிக்க...
https://www.minnambalam.com/k/2018/11/28/4?fbclid=IwAR3XHS7fnGdlLSJE3bLJPDioPLv-CWT9KyuA8YCoZCaAjJDC0j0ZhV22ExI
கருத்துகள்