முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆட்டமா சூதாட்டமா?



பொதுவாக, ஐ.பி.எல்லில் சூதாட்டம் என்றால் நடுவர்கள் கூட ஆச்சரியப்பட மாட்டார்கள். அது ஒரு பட்டவர்த்தமான ரகசியம். ஐ.பி.எல் என்றால் கொண்டாட்டம் - ரசிகர்களுக்கு, வீரர்களுக்கு, சூதாட்ட வாடிக்கையாளர்களுக்கு, சூதாட்ட வியாபாரிகளுக்கு, அனைவருக்கும். ஆகையால் அனைவரும் நுகரும் ஒரு வணிகப் பண்டத்தில் கொஞ்சம் சூதாட்ட நுகர்வும் இருந்து விட்டுப் போகட்டுமே என்பது வாரிய நிர்வாகிகளின் வெளியே சொல்ல முடியாத தீர்மானம்.

இந்த சூதாட்டம் ஸ்பாட் பிக்ஸிங் என சொல்லப்படுகிற குறிப்பிட்ட ஓவர்களில் எத்தனை ரன்கள், விக்கெட்டுகள் என ஊகித்து பணம் கட்டும் பாணியிலும் ஆட்டத்தின் முடிவை கணிக்கும் முறையிலும் நடக்கிறது. ஸ்பாட் பிக்ஸிங்கை சுலபத்தில் கணிக்க முடியாது. ஏனென்றால் டி 20யில் எந்த ஓவரிலும் யாரும் அடிபடலாம், விக்கெட் இழக்கலாம். உதாரணமாய், ஏழாவது ஓவரில் ஒரு நல்ல ஸ்பின்னர் இரண்டு வெளிநாட்டு மட்டையாளர்களுக்கு வீசுகிறார், ஆடுதளமும் சற்றே சுமார், 6வது ஓவர் வரை 10 ரன்களுக்கு மேல் சராசரியாய் ஓவருக்கு அடிக்கிறார்கள் என்றால், ஏழாவது ஓவரில் 8 ரன்களுக்குள் எடுப்பார்கள் என கணிக்கலாம். இதில் ஒரு பவுலர் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுத்தால் அதை யாரும் சந்தேகிக்க முடியாது. ஆனால் ஆட்ட முடிவை நம்மால் சுலபத்தில் பெரும்பாலும் ஊகிக்க முடியும். 3 ஓவர்களில் ஐம்பத்து சொச்சம் என்றால் மட்டையாட்ட அணிக்கு வெற்றி வாய்ப்பு 3-10 தான். இது போன்ற சந்தர்பங்களில் பவுலர்கள் சொதப்பி வெற்றியை தாரை வார்க்கும் போது நாம் இது சூதாட்டமோ என கணித்திட முடியும். மும்பைக்கும் பஞ்சாபுக்கும் இடையே இன்று (11-04-19) நடந்த ஐ.பி.எல் ஆட்டம் அப்படியான ஒன்று.

19வது ஓவரில் சேம் கரன் வீசும் போது மும்பையின் வெற்றி வாய்ப்பு அவ்வளவு பிரகாசமாய் இல்லை. இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் தேவை. சேம் கரன் இதற்கு முந்தைய ஓவர்களில் நன்றாய் யார்க்கர்கள் வீசினார். இதற்கு முன்பான ஆட்டங்களில் அவர் மிக நெருக்கடியான சந்தர்பங்களில் கூட அலுங்காமல் யார்க்கர் வீசுவார். ஆனால் இன்று அவரது பந்து வீச்சு சந்தேகத்துக்குரிய விதத்தில் இருந்தது. முதல் பந்தை off sideக்கு வெளியே முழுநீளத்தில் போட்டார். இதை நான்குக்கு போக, அடுத்த பந்தையும் அப்படியே வீசினார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளை இன்னும் கொஞ்சம் பின்னால் லெங்தில் போட்டார். சிக்ஸர்களாய் விளாசினார் பொலார்ட். அடுத்தடுத்த பந்துகளை கரன் கச்சிதமான யார்க்கர்களாய் போட்டார். இதில் எனக்கு ஆச்சரியம் அவர் ஏன் முந்தைய பந்துகளில் யார்க்கர்களை முயலவில்லை என்பது. அவர் முய்னறு அப்பந்துகள் தவறாய் விழுந்ததாய் தெரியவில்லை. அப்படியான பந்துகள் ஒன்று யார்க்கர் நீளத்துக்கு அருகிலோ அல்லது புல் டாஸ்களாகவோ இருக்கும். இதற்கு முந்தின ஓவர் முடியும் வேளையில், பஞ்சாப் அணி வெற்றியை நெருங்கும் போது, அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஸிந்தா போனில் யாரிடமோ பேசுவதைக் காட்டினார்கள். எனக்கு அப்போதே ஐயம் ஏற்பட்டது. சேம் கரன் ஓவரில் பஞ்சாப் அணி வீரர்களிடமோ ப்ரீத்தியின் முகத்திலோ ஆச்சரியமோ கவலையோ இல்லை. ஒரு மொக்கை ஜோக்குக்கு சிரிக்க முடியாதவர்களைப் போல முகத்தை வைத்திருந்தார்கள். நான் ஒருவேளை சூதாட்டத்தில் ஈடுபடுகிறேன் என்றால் சேம் கரனின் ஓவர் தான் எல்லார் தலைவிதியையும் மாற்றக் கூடிய ஒன்றாய் இருக்கும். பஞ்சாபின் பேரில் பணத்தைக் கட்டியவன் என்றால் நாம் உண்மையில் தலையில் கை வைத்து உட்கார்ந்து விடுவேன்.
சேம்கரனின் ஓவருக்குப் பிறகு இறுதி ஓவரிலும் ஆட்டத்தின் போக்கு அலைபாய்ந்தது. தோற்கும் எனும் கட்டத்தில் வெற்றியை நோக்கி சாய்ந்து கடைசியில் off sideஇல் வீச களத்தை தயாரித்து விச்சு பவுலர் நேராக அதைப் போன்று இரு ரன்கள் கொடுத்து சொதப்பினார். பஞ்சாப் வென்றது. இந்த அலைபாயும் குழப்ப நிலையில் எத்தனை முறை சூதாட்ட வாடிக்கையாளர்கள் எத்தனை முறை மாறி மாறி பணம் கட்டி இருப்பார்கள்; இதில் சூதாட்ட வியாபாரிகள் பெரிய அளவில் பணம் அள்ளி இருக்கலாம்.

எல்லாம் ஊகம் தான், ஆனால் இது சற்றே ஊகிக்கத்தக்க ஊகம். அதனாலே நம்பத் தக்க ஊகம் என நினைக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...