வணக்கம்
நான் கனலி விஜயலட்சுமி கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியர்.
உங்களுடைய உயிர்மை கட்டுரை வாசித்தேன்.கேரளப் பெண்களின் நிலையை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தீர்கள்.உண்மையில் கேரளப் பெண்களின் நிலை இதைவிடக் கேவலமானது.இதைக்குறித்து நான் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்,பேசி வருகிறேன்.
சபரி மலை பிரச்சனை இதற்கு ஒரு உதாரணம்.இன்னும்100ஆண்டுகள் ஆனால் தான் கேரளப் பெண்கள் தமிழகப் பெண்களுக்கு ஈடாக முடியும்.கேரளத்தில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு அது நன்றாகத் தெரியும்.பல நேரங்களில் என் நிலைபாடுகளையும் என் எதிர்வினைகளையும் என் பல்கலைக்கழக மனிதர்களால் ஜீரணித்துக்கொள்ள முடிவதே இல்லை.
சரியான புரிதலில் எழுதப்பட்ட உங்களது கட்டுரைக்கும் உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.
நன்றி
கனலி
அன்புள்ள விஜயலட்சுமி
உங்கள் எதிர்வினைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன்
ஆர். அபிலாஷ்
கருத்துகள்