முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசுரன் - “வெக்கையில்” இருந்து “காட்பாதர்”, “பாட்ஷா” மற்றும் ஸ்பேகெட்டி வெஸ்டெர்னுக்கு (1)


அசுரன்நல்ல படமா இல்லையா எனும் கேள்விக்குள் நான் போகப் போவதில்லை. அந்த படத்தை பார்க்கத் தூண்டிய முதல் காரணம் அதுவெக்கைநாவலில் இருந்து தோன்றியது என்பது. நாவலில் இருந்து எதை எடுத்து, எதை விடுத்து திரைகதையை எழுதியிருக்கிறார்கள் என அறிய ஆவல். அடுத்து ஆர்வம் இதை வெற்றிமாறன் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதைக் காண. ஆக நான் எழுதப் போவது முதலில் நாவலைப் பற்றி, அடுத்து ஒரு திரைக்கதையாக வெற்றிமாறன் எப்படியெல்லாம் அசுரனில் விளையாடி இருக்கிறார் என்பதைப் பற்றி


பூமணியின் படைப்புகளில் இளம் வாசகர்கள் முதலில் படிக்க வேண்டியதுவெக்கைதான் என நான் பரிந்துரைப்பேன். ஏனென்றால் நானும் அதை என் பதின் வயதிலே படித்தேன். அப்படியே அசந்து போய் உட்கார்ந்த ஒரே இருப்பில் படித்தேன். நான் படித்த வேறெந்த தமிழ் நாவலையும் போல அது இருக்கவில்லை. அதன் தொனி, வாசனை, அது கிளர்த்தும் மனநிலை, அதன் கட்டுக்கோப்பான எழுத்துமுறை எல்லாம் ரொம்ப தனித்து தெரிந்தது; சுருக்கமாக கட்டுக்கோப்பாக எழுதுவதில் அசோகமித்திரன் ஒரு ஜித்தன் என்றாலும் இந்நாவல் நான் வாசித்துள்ள நவீனத்துவ பாணியிலும் இல்லை. ஆம் ஹெமிங்வேயின் மினிமலிச சாயல் பூமணி பயன்படுத்தும் சின்ன சின்ன வாக்கியங்களில், கூர்மையான வசனங்கள் வழி
அவர் கதையை நகர்த்தும் அதிர்ச்சிகரமான பாணியில் உண்டு. ஆனால் இந்நாவல் கிளர்த்தும் வாசனை முழுக்க வேறானது
இது குறிப்புணர்த்தும்வெக்கைஎன்பது பருவநிலையின் வெக்கை அல்ல. வெளிப்புற சூழலை துல்லியமாக தொடர்ந்து சித்தரித்து அதை ஒரு உருவகமாக மாற்றுவது நவீன நாவல்களில் நாம் தொடர்ந்து காண்பது - அசோகமித்திரனின்தண்ணீர்ஒரு உதாரணம். ஜெயமோகன் தனதுரப்பர்”, “காடுஆகிய படைப்புகளிலும் அதையே செய்வார். ஆனால் பூமணி நாவலினூடாக எங்குமே (நான் படித்தவரை) பருவநிலையின் சூட்டை பேசுவதில்லை. ஆம், வடக்கூரான் எனும் பண்ணையாரைக் கொன்று விட்டு சிதம்பரமும் சிவசாமியும் காடுமேடு மலையென்று தப்பித்து ஓடுகையில், பதுங்கி ஒரு வாரம் வாழ்கையில் சிதம்பரம் குற்ப்பாக தண்ணீருக்காக அலைகிறான். ஓடை தென்பட்டால் அதில் குளித்து குதியாட்டம் போட ஏங்குகிறான். நாவலின் முடிவில் ஆழ்கிணறுகளை சம்சாரிகள் தோண்டி பாசனத்துக்கு பயன்படுத்துவது, பெண்கள் நீருக்காக அலைவது பற்றி குறிப்பு வருகிறது. அப்போதும் சிவசாமி சொல்வது விவசாயத்தை நம்பியிருப்போர் இதை செய்தே ஆக வேண்டும் என்பது. அவ்வளவு தான் - அதற்கு மேல் வெக்கை வருவதில்லை. ஏனென்று யோசித்தால் பூமணியின் தொழில்நுட்ப மேதைமை புரியும்.


வெக்கையை மறைமுகமாக (பருவநிலையாக சித்தரித்து) ஒரு உருவகமாக்கினால் அது மனித மனத்தின் போக்கு, குணநலன், அறம், அகப்போராட்டம், அகவறட்சி ஆகியவற்றுடன் பாத்திரங்கள் மோதுகிற, ஒட்டுமொத்தமான மனித குலத்தின் அகப்போராட்ட கதையாக அது மாறி விடும். ஆனால் பூமணி அகவெக்கையைநேரடியாக”, சரி தவறு என மதிப்பிடாமல், பேச விரும்புகிறார். அதை ஒரு கதாபாத்திரமாக்குகிறார் (எஸ்.ரா தன் கதைகளில் பண்ணுவதைப் போல). இப்போது வெக்கை என்பது மனித வாழ்க்கைக்கு வெளியே இருக்கும் வன்முறை எனும் ஒரு அம்சம் அல்ல (.மி தண்ணீரை மனித விழுமியங்களின் வறட்சியாக மாற்றுவதைப் போல). வன்மம் ஒரு பேயாக இந்த இரு பாத்திரங்களின் உடம்பிலும் புகுந்து ஆட்டுகிறது. அதனோடு உரையாட, முரண்பட, மோதி முறியடிக்க எல்லாம் சாத்தியம் இல்லை. பேயுடன் யாராவது பேரம் பேச முடியுமா
இப்படி பூமணி இன்றைய பின்நவீன படைப்பாளின் சாயலுடன் வன்முறையை இந்த நாவலில் எதிர்கொள்கிறார் - எந்த அற, ஒழுக்க விழுமிய விவாதத்துக்குள்ளும் அதை இழுத்து கொண்டு வராமல். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வரை தமிழ் இலக்கியம் வாழ்க்கையை அகத்துக்கும் சமூகத்துமான போராட்டமாக காட்டி வர, பூமணி அதற்கு நேர் எதிரான திரையில் இந்த நாவல் எழுதியிருப்பார். இதை நான் சட்டென கண்டு கொண்டது இரண்டாம் முறையாக படிக்கும் போதே - அட இது ஒரு ஸ்பேகெட்டி வெஸ்டெர்ன் போல இருக்கிறதே என நினைத்தேன். ஆம், அதுவே தான் என உணர்ந்தேன். ஸ்பேகெட்டி வெஸ்டர்ன் படங்களில் நாம் கிட்டத்தட்ட பாலை போன்ற செம்மண் புழுதி நிலங்களில், சமூகவிதிகளுக்கு புறம்பாக உள்ள புலங்களில் தன் வீரம், வன்முறை விருப்பம், துணிச்சல் ஆகியவற்றை நம்பி களமிறங்கும் ஆண்களின் கதையை காண்கிறோம். ஆண் பாத்திரங்களில் நண்பர்களிடையே ஒருபாலின ஈர்ப்பு மெல்லியதாய் தோன்றும், ஆனால் பெண் பாத்திரங்கள் ஒரு கவனக்கலைப்பாக அடிக்கடி தோன்றி வண்ணமேற்றி கதையை வேறு சரடுக்கு நகர்த்துவார்கள். கொடூரமான வில்லனுக்கும் நாயகனுக்கும் கூட பரஸ்பரம் மரியாதையும் அதனாலான ஒரு பந்தமும் இருக்கும். ஆயுதம் கிட்டத்தட்ட ஆண்குறி போல. அதைச்சுற்றியே அந்த ஆண்களின் உலகம் அமைந்திருக்கும். சதா ஆண்கள் ஆண்களைக் குறித்தே சிலாகித்தும் வெறுத்தும் ஆண்மை மிடுக்கால், ஆண்மையின் தடுமாற்றங்களால், ஆண்மையை மீட்க வேண்டிய ஆவேசத்தால் ஆட்பட்டு இருப்பதே இப்படங்களின் உளவியல். “வெக்கையிலும்நாம் இதைக் காண்கிறோம் - சிதம்பரம் ஒவ்வொரு நிமிடமும் தனது அருவாள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகளைப் பற்றி சிந்திக்கிறான். அது அவனுக்கு ஆறுதலும் துணிச்சலும் ஒருவித கிளர்ச்சியும் கொடுக்கிறது. அவனது அப்பாவுடனான உரையாடல்களிலும் அடிக்கடி ஆயுதங்களே வந்து போகின்றன

ராசநாகம் நவரத்னமுத்த கக்கிவச்சிட்டு அந்த வெளிச்சத்துலயே எரபெறக்குமாம். ஆள்வாடையடிச்சதும் ஓடிப்போய் முத்த விழுங்கிருமாம். அவ்வளவு எச்சரிக்க. முத்த தவறவுட்டுட்டா செத்துப் போகுமா. அதப்போல நம்ம ஆயுதங்கள கவனிச்சுக்கிறனும்” (பக்கம் 190; சிதம்பரத்திடம் சிவசாமி)

ஆயுதம் இருந்தால் தன்னை பாதுகாக்கலாம் என்பதை விட ஆயுதமிருந்தால் தயங்காமல் வன்முறையில் இறங்கலாம், அதுவே நிஜமான மனித இருப்பு எனும் உணர்வு அப்பாவுக்கும் மகனுக்கும் உண்டு.
ஆனால் ஆண்களுக்கு இடையிலான உக்கிரமான உறவில் ஒருவித வெறுப்பு உள்ளாடிக் கொண்டே இருக்கும். “வெக்கையில்ஒரு நாட்டார் கோயில் தெய்வம் குறித்த கதையில் இது உணர்த்தப்படுகிறது - கேரளாவின் பெருந்தச்சனின் கதையை நினைவுபடுத்தும் இக்கதையில் ஒரு அபாரமான சிற்பியும் அவரது மகனும் வருகிறார்கள். அவரது உளி சத்தத்தை மட்டுமே வைத்து அவரது மகன் மற்றொரு சிலையை தொலைவில் இருந்து செய்கிறான். சிலை நிறைவுற்ற நிலையில் அதைக்காணும் அப்பா பொறாமையில் தன் மகனின் வயிற்றை உளியால் கிழித்துக் கொல்கிறார். அதன் பிறகு அவர் தனது இந்த செயலை ஒரு சிற்பமாக வடித்து வைத்துப் போகிறார் என சிதம்பரம் தன் அத்தை மகளிடம் ஒருநாள் சொல்கிறான். இங்கு கவனிக்க வேண்டியது அங்குள்ள ஒரு மூன்றாவது சிற்பம் - அது இப்படி குடல்சரிந்த மகனையும் அவனைக் கொல்லும் தந்தையையும் கண்டு வெறிச்சிரிப்பு சிரிக்கும் ஒரு பெண் தெய்வம். இந்த சித்திரம் இந்நாவலின் மையம் என்பேன். இதிலிருந்து மொத்த நாவலையும் விரித்துக் கொள்ளலாம். இந்த பெண் தெய்வம் யார், இந்நாவலின் பெண் பாத்திரங்களை இது குறிக்கிறதா? இக்கேள்விகளையும் பூமணி நேரடியாக எதிர்கொள்வதில்லை. சொல்லாமலே (குறிப்பாக) விட்டு விடுகிறார்.

நாவலில் எங்கும் செக்ஸ் முக்கியமாக வருவதில்லை - சொல்லப் போனால் பெண்ணுடம்பு மீதான மோகத்தை, சிலாகிப்பை அவர் கவனமாக தவிர்த்து விடுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...