முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் பள்ளிகள் எனும் மால்கள் (3)

ஒரு நல்ல லட்சிய வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி இந்த விவாதத்தை முடிக்கிறேன்:

1) முதலில் அது வியாபாராமாக மட்டுமே இருக்க கூடாது.
2) நிர்வாகத்துக்கு இன்றைய குழந்தைகளின் அறிவு வளர்ச்சி குறித்து புரிதல் வேண்டும். இன்றைய தலைமுறைகளின் குறைகளை அறிந்து அதை எதிர்கொள்ளும் விதத்தில் கல்வி முறைகள் இருக்க வேண்டும். கவனச்சித்றலும் மேலோட்டமான கேளிக்கையுமே இன்றைய அறிதல் மார்க்கங்கள் என்றால் அதற்கு நேரெதிராக கல்விமுறையை அமைக்க வேண்டும். தொழில்நுட்பமே நம் பிள்ளைகளின் நோய்களுக்கு காரணமென்றால் தொழில்நுட்பத்தின் எதிர்திசையில் பிள்ளைகளை கொண்டு செல்ல வேண்டும். உலகமே இவர்களை வெறும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களாக நடத்துகிறது என்றால் பள்ளியிலும் கல்லூரியிலும் நாம் இவர்களை வெறும்எளியமனிதர்களாக நடத்த வேண்டும். இப்பிள்ளைகளின் பழுதான ஆளுமைகளை மேலும் பழுதாகி அதை சுரண்டி வியாபாரம் பண்ணுவது அநியாயமான மனித வள ஊழல். இதை செய்து கொண்டே கல்வி ஒரு சேவை என்று பீற்றிக் கொள்ளக் கூடாது.

3) குழந்தைகள் சுயமாய், தம் போக்கில் சிந்திக்கவும் கேள்விகளை எல்லாவற்றைப் பற்றியும் எழுப்புவதற்கு பயிற்றுவிக்க வேண்டும். மாறாக அடிப்படையான தகவல்களை வைத்துக் கொண்டு சேல்ஸ்மேன் போல பேச பயிற்றுவிக்க கூடாது.
4) சமத்துவம், சமூக மாற்றம், நல்லிணக்கம், சமூக நீதி, தனிமனித அறம் குறித்து பிள்ளைகளை சிந்திக்கவும் சிந்திப்பதை செயல்படுத்தவும் அப்படி செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறியவும் பழக்க வேண்டும். .தா., ஒவ்வொரு தனியார் பள்ளியும், அது லட்சியபூர்வமாக செயல்பட்டும், கல்வியை சேவையாக காணும் அமைப்பு எனில், பத்து சதவீதம் தாழ்த்தப்பட்ட, எளிய பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளை மிகக்குறைந்த கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் ஒரு பத்து சதவீதத்தை ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கும். அதே போல பள்ளியின் ஆசிரியர்கள், நிர்வாகிகளில் சிறுபான்மையினர், மாற்றுபாலினத்தவர் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும்.
மேலும் ஒரு பள்ளி நிர்வாகம் தனது அரசியல் என்ன என்பது குறித்த தெளிவுடன் இருக்க வேண்டும். அதை ஆபாசமாக மறைமுகமாய் திணிக்காமல் வெளிப்படையாக பரிசீலிக்க வேண்டும். உங்களுக்கு பெரியாரியத்தில் ஈடுபாடு என்றால் அதை வெளிப்படையாக அறிமுகப்படுத்துங்கள். அதை நிராகரிக்கவும் கேள்வி கேட்கவும் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்துங்கள். அம்பேத்கர் என்றால் அம்பேத்கர், காந்தி என்றால் காந்தி. இந்த சிந்தனையாளர்களின் பாதையில் பாடதிட்டத்திலும் சில மாற்றங்களை கொண்டு வாருங்கள். வெறுமனே இந்த ஆளுமைகளை சிலைகளை அமைத்து அலங்காரம் பண்ணி, அன்றாடம் மாணவர்களை இந்த சிலைகளுக்கு  மாலை சாத்தி, தொட்டு வணங்கி, திருநாட்களின் போது பாட்டுப் பாடி மிட்டாய் கொடுத்து வெறும் சடங்காக மாற்றி கடந்து விடாதீர்கள்.
 கல்வி என்பது சார்பற்றது, அது பொதுவயமானது என்பது ஒரு மிகப்பெரிய பொய். நீங்கள் வாங்கும் ஸ்பிரைட்டோ கோக்கோ அனைவருக்கும் ஒன்றைப் போல இருக்கலாம். அந்த standardization வியாபாரத்தை ஊக்குவிக்க உதவும். ஆனால் கல்வியில் உண்மையில் அத்தகைய தரப்படுத்தலில் இடமில்லை. உங்கள் பள்ளியின் நோக்கம் / லட்சியம் சமூகப்பொறுப்பும் சமத்துவமும் கொண்ட எதிர்கால சமுதாயத்தை ஏற்படுத்துவது என்றால் அம்பேத்கரே அதற்கான மார்க்கம் என்றால் முழுக்க அவரது நோக்கின்படியே (இந்துமத எதிர்ப்பு, சாதி துறப்பு, பௌத்தம் தழுவுதல்) என கல்விமுறையை அமையுங்கள். அதாவது சித்தாந்தத்தை திணிப்பதை அல்ல நான் பேசுவது, அதை ஒரு வாழ்க்கை முறையாக முன்வைப்பது. அதாவது ஒரு அம்பேத்கரிய / காந்திய பெற்றோரின் கீழ் வளரும் பிள்ளைகள் அந்த தாக்கத்துடனே வளர்வார்கள். அதை ஏற்றோ எதிர்த்தோ அவர்கள் உருவாவார்கள். ஆனால் இந்த ஒரு தாக்கத்தை இன்றைய கல்வி அமைப்பு யாரிடமும் ஏற்படுத்துவதில்லை; மாறாக இன்றைய கல்வி பத்து ரூபாய்க்கு நீங்கள் வாங்கும் பிஸ்லெரி தண்ணீரைப் போல இருக்கிறது. அதற்கு தனித்துவம் இல்லை; அதை நீங்கள் உரிமை கோர முடியாது (எங்கள் ஊர்த் தண்ணீர் தேனாக இனிக்கும்!). இப்படி நாம் பயிற்றுவிக்கும் மாணவர்கள் எந்த உடைமை உணர்வும் அற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனாதை இல்லங்களில் வளரும் மாணவர்கள்; இவர்கள் சொந்தமாய் நம்பிக்கைகளோ வேர்களோ அற்றவர்கள். இவர்கள் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்ட கோக் பாட்டில்களைப் போன்றவர்கள்; ஒரே நிறம்; ஒரே வாசனை; ஒரே சுவை; ஒரேவிலையும்கூட.
இங்கு ஒரு கேள்வி வருகிறது: ஒரு வெறுப்பரசியலை / வர்ணாசிரமத்தை ஒரு பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு லட்சியமாக அளித்தால் என்னவாகும்? சாவார்க்கரையும் ஹிட்லரையும் கற்க வைத்தால் என்னவாகும்? இந்த ஆளுமைகளின் சிந்தனைகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளட்டுமே என நான் சொல்வேன் - அது நேரடியாக ஒளிவுமறைவின்றி செய்யப்பட்டால் அதனால் தீங்கு குறைவாகவே இருக்கும். அதாவது நீங்கள் ஒரு கொள்கையை சொல்லித் தந்து, அதன் அடிப்படையில் கல்விமுறையை அறிமுகப்படுத்தி விட்டு மாணவர்களை தொடர்ந்து அதை எதிர்த்து பேசவும் விவாதிக்கவும் முழுக்க அதன் எதிர்திசையில் பயணித்து தம் கல்வியை தம் விருப்பப்படி வடிக்கவும் சுதந்திரம் அளிக்க வேண்டும் (நான் ஏற்கனவே சொன்னது போல பெற்றோரின் கொள்கைக்கு எதிராக வளர்ந்து வரும் பிள்ள்ளைகளாக). இதே நோக்கத்தின் படி தான் அம்பேத்கர் இந்தியர் அனைவரும் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்றார் - அப்போது தான் சனாதனவாதிகளின் இந்துமதம் குறித்த பொய்கள் அம்பலமாகும் எனவும், மயக்கம் தெளியும் என்றும் அவர் கூறினார். வலதுசாரிகளின் பள்ளி ஒன்று வெளிப்படையாகவே அப்படி அமைந்தால் அது அவர்களின் கொள்கைக்கு எதிராகவே திரும்பும். அது நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

(ஆனால் ஒரு லட்சிய சமூகத்தில் வலதுசாரி சிந்தனைகள் முழுக்க தடை செய்யப்பட வேண்டும் என நான் நம்பினாலும் இப்போதைக்கு அனைத்து தரப்புகளுக்கும், அவற்றை எதிர்த்து விவாதித்து செயல்படும் உரிமைகளுடன், இடமளிக்கலாம்.) 


லட்சியம்-சார் கல்வி மாணவர்களுக்குள் பல கேள்விகளை எழுப்பும். இக்கேள்விகளை விவாதிக்கவும் அவற்றுக்கு விடை காணவும் மாணவர்களை வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாய் மதக்கருத்துக்களை பேசுவதல்ல, அனுபவ ரீதியாக சில விசயங்களை பரிசீலிப்பதே மனிதர்களுக்கு சமூக நீதியையும் தனிமனித அறத்தையும் லட்சியங்களையும் கற்பிக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...