வரும் 22-23 தேதிகளில் பாரதியார் பல்கலைக்கழகம் நெருஞ்சி இலக்கிய இயக்கத்துடன் இணைந்து ஒரு கருத்தரங்கம் நடத்துகிறது. இதில் சாகித்ய அகாதமி யுவ புரஷ்கார் விருது பெற்ற படைப்பாளிகளின் எழுத்து குறித்து விவாதங்கள் நடக்கின்றன. இரண்டாம் நாள் என் நாவலான “கால்கள்” குறித்து ஒரு கட்டுரை வாசிக்கப்படுகிறது. நானும் என் எழுத்துப் பயணம் பற்றி பேசுகிறேன்.
சென்னையை விட்டு வந்த பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு இத்தகைய தமிழ் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன்.
நண்பர்களை சந்திப்பது, விவாதங்களில் பங்கேற்பது, மாணவர்களுடன் உரையாடுவது என உற்சாகமாக அமையும் என நம்புகிறேன்.

கருத்துகள்