முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லெஸ்பியன்களின் விவாகரத்துகள்

சுயபாலினத்தோர் திருமணம் செய்வது நெதர்லாந்தில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சுயபாலின ஆண் ஜோடிகளை விட லெஸ்பியன்களே அதிக அளவில் விவாகரத்து பண்ணுகிறார்கள் என ஒரு சேதி. (https://www.cbs.nl/en-gb/news/2016/13/lesbian-couples-likelier-to-break-up-than-male-couples)

 எனக்கு நான்கு காரணங்கள் தோன்றுகின்றன.

1) ஹார்மோன் மாற்றங்கள் - இந்த ஜோடிகள் கணிசமாய் நாற்பது வயதுக்கு மேலானவர்கள். இந்த பருவத்தில் பெண்ணுடலில் நேரும் ஹார்மோன் மாற்றங்கள் அவர்களை நிலையாக இருக்க விடாமல் பண்ணலாம் எனத் தோன்றுகிறது.
2) லெஸ்பியன்கள் இடையில் பத்து வருடத்துக்கு அதிகமாக வயது வித்தியாசம் இருப்பது - பெண் வயதுக்கும் அவர்களின் வாழ்க்கைப் பார்வைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. மனம் ஒன்று தான், ஆனால் வயது ஏற ஏற உடல் சிந்திப்பது மாறுகிறது. 
3) ஆண்களை விட பெண்களுக்கு சமூகரீதியான புறத்தொடர்புகள், அங்கீகாரம் முக்கியம். வழமையான திருமண ஜோடிகளுக்கு இருப்பது போன்ற சமூக அங்கீகாரம், கலாச்சார தளம் ஓரினச் சேர்க்கை தம்பதியினருக்கு இல்லாதது ஆண் ஜோடிகளை விட பெண் ஜோடிகளையே அதிகம் பாதிக்கும் என நம்புகிறேன். அப்போது அவர்கள் மனம் உடையும் தருணத்தில் விவாகரத்தை கோருவதில் ஆச்சரியமில்லை. நம் ஊரில் கூட கூட்டுக்குடும்ப வாழ்க்கை, நகரமயமாக்கல் பரவலான பிறகு ஹெட்டெரோசெக்‌ஷுவல் தம்பதியினர் மத்தியில் விவாகரத்து அதிகமாகி வருவதைக் காண்கிறோமே. விவாகரத்துக் கொல்லி என ஒன்றைக் கூற முடியுமானால் அது கூட்டுக்குடும்ப, உறவுகள், சாதி சனத்தின் நெருக்கமான வலைப்பின்னல் தான். லெஸ்பியன்களுக்கு அது சுத்தமாக இருக்க முடியாது என்பதால் சதா நூல் மீது நடப்பது போன்றே இருக்கும்.

4) இறுதியாக, பாலியல் விசயத்தில் தொடர்ந்து புது இணைகளை ஆணும் பெண்ணும் நாடுவது இயல்பே. ஆனால் ஆண்கள் தம் சின்னச்சின்ன சபலங்களையும் கடந்து ஒரு ஜோடியுடன் நீண்ட காலம் வசிக்க விரும்புகிறார்கள் - நம்மூரில் கூட ஆண்களை விட பெண்களே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முந்துகிறார்கள். பெண்களின் மனவுலகம் மொழியாலும் உணர்வுகளாலும் கட்டமைக்கப்பட்டது. ஆண்களுடம் ஒப்பிடுகையில் தமக்குப் பிடிக்காதவரை அவர்களால் சுலபத்தில் சகித்துக் கொள்ள முடியாது; அதற்கு அவரைப் பிடிப்பதாக தம்மையே ஏமாற்றிக் கொள்வதே ஒரே வழி. வாய்ப்பிருந்தால் இந்த சுய-ஏமாற்றையும் அவர்கள் விட்டுவிட்டு முகமூடியின்றி இருக்க தலைப்படுவார்கள்.

மேலும் தன் உடல் உணர்வதும் மனம் உணர்வதும் வேறுவேறு என ஆனால் நினைக்க முடியும். பெண்ணால் முடியாது. பெண் மனத்துக்கு பிடிக்காத ஒன்று அவள் உடலுக்கும் பிடிக்காமல் போய் விடும். 

ஆக, லெஸ்பியன் தம்பதியினர் அதிகமாய் பிரிவதில் எனக்கு ஆச்சரியமில்லை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.