முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவலர்களின் சேடோமெசோக்கிசம்


சாத்தான்குளம் சிறைப்படுகொலை பற்றி நினைக்கையில் மனம் உடைந்து போகிறது. மனிதனை மனிதன் இப்படியெல்லாமா வதைப்பான், சிறுக சிறுக துடிக்க வைத்துக் கொல்வான், அதுவும் சுற்றிலும் உள்ள மக்கள் அந்த இருவரும் அலறுவதை இரவு முழுக்க கேட்டு வெறுமனே இருக்க இந்த கொடூரம், அதனாலான படுகொலை நடந்திருக்கிறது என்பதை நினைக்க நினைக்க நம்பிக்கை வரவில்லை, மனம் ஆறவில்லை.

 ஏழெட்டு லுங்கிகள் நாள் முழுக்க தொடர்ந்து மாற்றினாலும் நிற்காதபடி பென்னிக்ஸுக்கு பின்புறமிருந்து ரத்தம் தொடர்ந்து வந்திருக்கிறது. காரணம் போலீசார் தாக்குதலின் போது ஆசன வாயில் ஏதேதோ பொருட்களை நுழைத்து வன்கொடுமை பண்ணியிருப்பது. இது அதிகார வெறியில் நடந்ததா அல்லது இதன்பின்னர் சாடிஸ, சேடோமஸோக்கிச மனநிலை - ஒருவர் தன்னெதிரே வலியில் கதறுவதைக் கண்டு பாலின்பம் அடைவது - செயல்பட்டுள்ளதா? என்னுடைய ஒரு சந்தேகம் பென்னிக்ஸ் தன் தந்தையை அடிக்கும் போலீஸாரை காவல் நிலையத்தில் வைத்துக் கண்டித்த போது அங்கிருந்த ஆய்வாளர் ஶ்ரீதர் மற்றும் துணை ஆய்வாளர் பால்துரை இருவரில் ஒருவருக்கு அவரிடத்து ஒருபாலின ஈர்ப்பு தோன்றியிருக்க வேண்டும், இது தான் விரும்பும் ஆண் தன்னை அவமரியாதையாய் பேசுகிறாரே எனும் இச்சை கலந்த கோபமாக மாறியிருக்க வேண்டும். இதுவே அவரை ஆசன வாயைக் கிழித்து வதைக்குமளவுக்கு இவர்களைத் தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். (அல்லாவிடில் அவருக்கு மட்டும் ஏன் அந்த கொடுமை நடக்க வேண்டும்?) ஆகையால் இதை வெறுமனே கொலை அல்லது போலீஸ் வன்முறை என அல்ல, பாலியல் வன்கொடுமை எனப் பார்ப்பதே சரியாக இருக்கும்.



 இதில் சம்மந்தப்பட்டவர்களை வெறுமனே இடம்மாற்றுவது, தற்காலிக வேலை நிறுத்தம் செய்வது எப்படித் தீர்வாகும்? இவர்களுக்கும் ரேப்பிஸ்டுகள், சைக்கோபாத்துகளுக்கும் வித்தியாசம் இல்லை எனும் போது இவர்களின் உளவியல் சிக்கலை ஆய்வு செய்து தகுந்த சிகிச்சை அளித்த எதிர்காலத்தில் மனித சமூகத்திடம் இருந்து இவர்களை விலக்கி வைக்க வேண்டாமா?


இறுதியாக, இதை வெறுமனே தனிமனித உளவியல் பிரச்சனையாக, வன்முறை விழைவாக, அதிகார துஷ்பிரயோகமாகக் கண்டு கடப்பது ஆபத்தானது - மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி அதிகாரத்தை நிலைநிறுத்துவதே காவல்துறை வேலை எனும் எண்ணம் இன்று வலுவாக வேரூன்றி விட்டது. அதை வேரறுக்க வேண்டும், மக்களின் பணியாளர்களே காவலர்கள் எனும் நிலையை உருவாக்க வேண்டும். எப்படி?

ஒரு சிறிய நடைமுறை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்:

பணியில் இருக்கும் காவலருக்கு ஒவ்வொரு ஆறுமாதமும் performance review நடத்தப்பட வேண்டும். உச்சபட்ச மேலதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை இது நடக்க வேண்டும். ஒரே வித்தியாசம் இதை செய்பவர் காவல்துறைக்குள் இருக்கும் அதிகாரியாக இருக்கக் கூடாது. காவல் நிலையம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களாக இருக்க வேண்டும். கருத்துக்கணிப்பு மூலம் இதை சுலபத்தில் செய்யலாம். ஒரு காவலர் மீது மக்கள் அதிருப்தியாக இருந்தால் அவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும் அவரது பதவி தற்காலிகமாய் பறிக்கப்பட வேண்டும். ஒரு மாதத்திற்குள் அவரால் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற முடியாவிடில் நிரந்தரமாய் பதவி பறிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியிலும் என்னென்ன விசயங்களில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்து முடிவு செய்ய வேண்டும். இவற்றை இலக்காக அறிவித்து காவல்துறை செயல்பட வேண்டும்

குறைந்தது ஒரு வருடமேனும் ஒரு காவலர் இடமாற்றம் செய்யப்படக் கூடாது.

மேலும், காவல்நிலைய எல்லைக்கு உடபட்ட மக்களுக்கு அடுத்தபடியாய் காவலர்கள் மீது அதிகாரம் நீதிமன்றத்துக்கே இருக்க வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளுக்கோ மேலதிகாரிகளுக்கோ அல்ல.

கடந்த சில ஆண்டுகளாகவே காவல்துறையினர் கூலிப்படையை விட மோசமாக மக்கள் விரோதிகளாக செயல்பட்டு வருகிறார்கள். போராடுகிற மக்களை ஏதோ மிருகங்களைப் போல சாவகாசமாகக் குறிபார்த்து சுடுகிறார்கள். மக்களை மொத்தமாய் குற்றவாளிகளாக, மற்றமையாகக் காணும் போக்கு ஒரு உளவியலாக, அமைப்பு ரீதியாக காவல்துறைக்குள் செயல்படுகிறது. காவலர்களுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி அதிகமாக ஆக அவர்கள் காலனிய காலத்து பிரிட்டிஷ் காவலர்களாக மாறி வருகிறார்கள். இதை மாற்றி மக்களைத் தம் முதலாளிகளாக, தம்சேவைக்கான’ ‘நுகர்வோராகக் காணும் புதிய நோக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

 மாறாக இந்த மக்கள் விரோத மனநிலையை வளரவிட்டால் மிக மோசமான சமூக வியாதியாக இது பரவும். 1922இல் சுதந்திர போராட்ட காலத்தில் சவுரி சவுராவில் நடந்ததைப் போல நடந்ததைப் போல மக்களே ஒன்று கூடி காவல்நிலையங்களைக் கொளுத்தும் சம்பவங்கள் நடைபெறும் காலம் தொலைவில் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...