முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரள தங்கக்கடத்தல் கதையின் பின்னணி


கேரள தங்கக் கடத்தல் குற்றவிசாரணையின் போக்கை பின் தொடர்பவர்கள் அதற்கும்பாதாள் லோக்வெப்சீரிஸில் ஊடகவியலாளர் மீதான கொலை முயற்சியை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து முடிவைத் தெரிவிக்கும் காட்சிக்குமான தொடர்பை கவனிக்கலாம் - “பாதாள் லோக்கில்அரசியலுக்காக நிகழ்த்தப்படும் கொலை முயற்சியை நேபாள தீவிரவாதியின் (ஆனால் அப்பெண்ணோ நேபாளத்தில் பிறந்து இங்கு வளர்ந்த அப்பாவியாக இருப்பாள்.) துணையுடன் பாகிஸ்தான் செய்யும் தீவிரவாதத் தாக்குதல் என விசாரணை அதிகாரிகள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து சொல்வார்கள். இப்போது வெளிவந்துள்ளது நீண்ட காலமாய் கேரளாவுக்கு அரபு நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் தங்கத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஒரே வித்தியாசம் தேசிய புலனாய்வு அமைப்பு நடுவே புகுந்து இந்த கடத்தல் குற்றத்துக்கு தீவிரவாத சாயல் அளிக்கிறார்கள் என்பது. இதில் பங்கேற்றவர்கள் இந்துக்கள் என்பது ஒரு பொருட்டில்லை, உடனடியாய் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதும் பொருட்டில்லை. மலப்புறத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அரபு நாட்டுப் பணத்தைக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள், தேசப்பாதுகாப்புக்கு உலை வைக்கிறார்கள், கேரள இந்துக்களை கொல்லத் திட்டமிடுகிறார்கள் எனும் அதே பாஜக கதையாடலையே இப்போது தேசிய புலனாய்வு அமைப்பும் கிளிப்பிள்ளையைப் போல திரும்பச் சொல்கிறது.


இந்தக் குற்றத்தில் சம்மந்தப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் .டி பிரிவின் நிர்வாகச் செயலாளர். இந்த துறையின் செயலரான சிவசங்கரனைக் கையில் போட்டு, சில பல பாலியல் உடன்படிக்கைகளின் வழி இந்த ஸ்வப்னா இப்பொறுப்பைப் பெற்றுள்ளார். மற்றபடி அந்த அம்மாவுக்கு .டி பற்றியோ, நிர்வாக மேலாண்மை பற்றியோ ஒன்றும் தெரியாது - அவர் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர். ஏற்கனவே சில இடங்களில் இவர் போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி, மேலதிகாரிகளுடன்சமரசங்கள்செய்து முக்கிய பொறுப்புகளைப் பெற்று பின்னர் அங்கிருந்து எல்லாம் வெளியேற்றப்பட்டவர். உடனடிப் பணத்துக்காக, அதிகாரத்துக்காக உடலைப் பயன்படுத்தும், அவ்வாறு பெரிய குற்ற வலைகளில் முக்கிய கண்ணியாக மாறும் சில பெண்களில் ஒருவர் தான் இந்த ஸ்வப்னா. கடந்த வருடம் இவை .டி துறை பொறுப்பில் இருந்தும் வெளியேற்றப்பட்ட பின் முழுமையாக கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார், அதற்கு தன் தொடர்புகளை பயன்படுத்தி இருக்கிறார். மற்றபடி ஸ்வப்னாவுக்கும் பின் லேடனுக்கும் எல்லாம் தொடர்பு இருக்காது.

 கடத்தப்பட்டு பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு மொத்தமாய் பதினைந்தே கோடி என்கிறார்கள் - இதை வைத்து சென்னையில் ஒரு பங்களா வாங்க முடியுமா? பீலா ராஜேஷ் கட்டி வரும் பங்காளவின் மதிப்பே முன்னூறு கோடி என்கிறார்கள். அதை விட மிகப்பெரிய பல லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரக் குற்றங்களும் நாளும் நடந்து வரும் போது ஏன் இந்த பதினைந்து கோடி தங்கக் கைப்பற்றலை ஊடகங்கள் இவ்வளவு ஊதிப் பெருக்குகின்றன?


இரண்டு நோக்கங்கள்:

 1) வரும் சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் தீவிரவாதத்தை வளர விடும் பலவீனமானத் தலைவர், அவருக்கு நிதியுதவி செய்பவர்கள் அரபு நாடுகளில் உள்ள தீவிரவாத ஆதரவாளர்கள் எனும் பொய்ச்சித்திரத்தைக் கட்டியெழுப்புவது (இந்த சிவசங்கரன் முதல்வரின் தனிச்செயலாளராக இருந்தவரும் கூட).

2) கேரளாவில் தீவிரவாதம் எனும் பீதியைப் பரப்பி பிரிவினைவாதத்தை வளர்த்துவது.  


அமித் ஷாவும் இன்ன பிற கேரள பாஜக தலைவர்களும் கேரள இஸ்லாமியர் குறித்து எப்படியான சித்திரத்தை உருவாக்க விரும்புகிறார்களோ, அங்குள்ள இடதுசாரி அரசை எப்படி களங்கப்படுத்த நினைக்கிறார்களோ அதற்கே புலனாய்வு அதிகாரிகளும் சிறந்த திரைக்கதை, இயக்கம் தந்து மக்களிடம் திரையிடுகிறார்கள். இதுவரை இத்தகைய தங்கக் கடத்தல் செயல்கள் மூலம் கேரளாவில் தீவிரவாதம் வளர்ந்ததற்கு இந்த அதிகாரிகளிடம் ஏதாவது சான்று உண்டா? வடக்கிந்தியாவில் வெடிக்கிற குண்டுகள் ஏன் தென்னகத்தில் வெடிப்பதில்லை என்றால் இங்கே இந்துத்துவா இல்லை என்பதே அதன் முதல் பதில். இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரித்து எப்படியாவது அங்கே நிலைப்பெற்று விட வேண்டும் என்பதே பாஜகவின் கனவு.

எஸ்.வி சேகர், எச்.ராஜா மற்றும் சாத்தான்குளம் படுகொலையில் சம்மந்தப்பட்ட காவிக்கும்பலை தப்ப விட்ட போலீசார் இம்முறை பெரியாரியவாதிகளுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கும். ஐயமே இல்லை.

ஆனால் தமிழக பாஜகவின் அடிமனத்தில் இருப்பதும் கேரள கடத்தல் போல ஒன்று இங்கு நிகழ்ந்து விடாதா, சில பல குண்டுகளை அங்கங்கே வெடிக்க வைத்து, மதக்கலவரங்களை நடத்தி எப்படியாவது அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களைப் பெற்று விட முடியாதா எனும் ஏக்கமே. ஏனென்றால் உளவுத்துறை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கை படி வரும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக மீண்டும் படுதோல்வியைத் தழுவல் போகிறது. இதை சரி கட்டத்தான் நிர்வாகிகளை மாற்றி, சில அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறது பாஜக - தமிழகத்தில் பாஜக ஒரு பிராமணக் கட்சி எனும் பிம்பத்தை மாற்ற முருகனைத் தலைவராக்கி, முருகக்கடவுளை ராமரிடத்தில் வைத்து ஜல்லியடிக்கிறது. தமிழக பாஜக தலைமை அண்மையில் ஒரு முற்போக்கு பெரியாரிய யுடியூப் சேனலைக் குறிவைத்து கண்டிக்கிறார்கள், அதில் முருகக்கடவுள் ஆபாசமாய் சித்தரிக்கப்படுவதாய் காவல்துறையில் வழக்குத் தொடுக்கிறார்கள். இவை எதுவும் பெரிதாய் எடுபடவில்லை.

 தீவிரவாதக் கதையாடலை கிளப்பி விடலாம், குண்டு வைக்கலாம், கலவரங்களை நிகழ்த்தலாம் என்றால் துரதிஷ்டவசமாய் கொரோனா ஊரடங்கு நீடிக்கிறது. பொதுவிடத்தில் மக்கள் கூடுவதில்லை. பாவம், அவர்களின் நிலை உண்மையிலேயே பரிதாபம் தான். ஊடகங்கள் முன்புதீவிரவாதம், தீவிரவாதம்என பஜனை பண்ணுவதை விட இப்போதைக்கு வேறு வழியில்லை


பாஜக தமிழகத்தில் நிலைப்பெற வேண்டும் என்றால் வடக்கே உள்ள மாக்கான்களிடம் செல்லுபடியாகும் மதவாதத்தைக் கொண்டு வந்தால் முடியாது. தேசப்பற்று, ஜெய் ஹிந்த், ராமர் போன்ற கோஷங்களும் செல்லுபடியாகாது. முதலில் அவர்கள் மக்களுக்காக, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக, சமத்துவத்துக்காகப் பேச வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசின் சார்பில் கூடுதலாக தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வரும் ஒவ்வொன்றிலும் மதச்சாயம் பூசாமல் இருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் சங்கிகளுக்குப் புரியாது. மாக்கான்களிடம் பேசிப் பழகியவர்களுக்கு மனிதர்களிடம் பேசத் தெரியாது.


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான அலசல் அபிலாஷ், ஒவ்வொன்றும் தெள்ளத் தெளிவாக விவரித்து இருக்கின்றீர்கள், அத்துனையும் மறுக்க இயலா உண்மைகள், வடக்கே உள்ள மாக்கான்கள் போல் தெற்கில் கர்நாடக மாக்கான்களைத் தவிர வேறங்கும் செல்லுபடியாகவில்லை என்பதன் கோபத்தை இங்கு பல வழிகளில் குரூரமாக காட்டிக் கொண்டும் உள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...