முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உளவியல் நூல்கள்: ஒரு பார்வை (1)



Hi அண்ணா

தத்துவ வாசிப்பு பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன், ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.

மனோதத்துவம் பற்றியும் ஒரு அறிமுகம் வழங்க முடியுமா?

நன்றி.


- Sivarakesh Jayachandran


அன்புள்ள சிவராகேஷ்

என்னுடைய உளவியல் வாசிப்பு எல்லை குறுகியது. ஒரு கட்டத்திற்குப் பிறகு உளவியலில் ஆர்வம் இழந்து விட்டேன். அதன் பிறகு தத்துவ நோக்கிலேயே உளவியலைப் படித்தேன். பௌதீகமாக உளவியலை அணுவது குறைபட்ட பார்வை என நினைக்கத் தொடங்கினேன். அதனால் என் வாசிப்பில் இருந்து இதை சுருக்கமாக சொல்கிறேன்.


உளவியல் வாசிப்பை 1) மருத்துவ சிகிச்சை சார்ந்தது, 2) இலக்கிய சார்ந்தது, 3) தத்துவம், சமூகவியல் சார்ந்தது, 4) நரம்பியல் சார்ந்தது என நான்காக பிரிக்கலாம்.


1) மருத்துவ உளவியல் (clinical pysychology)

 முதலாவது வகைமையில் தமிழில் ருத்ரன் மிகவும் ரசனையாக, எளிமையாக எழுதியிருக்கிறார். நான் பதினான்கு வயதில் அவரை வாசிக்கத் தொடங்கித் தான் உளவியலில் ஆர்வம் கொண்டேன். அவர் எடுத்துக் கொண்ட கேஸ்கள் பற்றின குறிப்புகள் இன்னும் நினைவில் உள்ளன. குறிப்பாக ஒரு மனச்சிதைவு (schizophrenia) ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பல வருடங்கள் மனநல விடுதியில் கழித்த, பணக்கார குடும்பத்தை சேர்ந்த, ஒரு இளம் பெண். அவரை சரி செய்யவே முடியாது எனும் நிலை. சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் ருத்ரன் ஒரு திருமண நிகழ்வுக்கு செல்லும் போது அப்பெண் அழகாக அலங்கரித்துக் கொண்டு கையில் விளக்குடன் விருந்தினர்களை வரவேற்றபடி நிற்கிறார். விசாரித்த போது அப்பெண்ணின் உறவினப் பெண்ணுக்குத் திருமணம் எனத் தெரியவருகிறது. அப்பெண்ணின் பெற்றோரிடம் பேசுகிறார். குணமாகாத நிலையில் அவரை மனநல விடுதியில் இருந்து அழைத்து வந்து விட்ட பின் ஒருநாள் திடீரென அவரது மனச்சிதைவு மறைந்து விட்டது. அதன் பிறகு பல வருடங்கள் அவர் முழுமையான நலத்துடன் இருக்கிறார் என்கிறார். இதைப் பற்றி சொல்லும் ருத்ரன் இது போன்ற புதிர்கள் உளவியலில் உண்டு, மனித மனத்தின் ஊடுபாதைகளை யாராலும் கணிக்க முடியாது, வரையறுக்க முடியாது என்கிறார். சிறுவயதில் உறவுகளை, சமூகத்தை, சின்னச்சின்ன வருத்தங்களை, அவநம்பிக்கைகள், தாழ்வுமனப்பான்மையை புரிந்து கொள்ள நான் அவரது எழுத்துக்களையே திரும்பத் திரும்ப படித்தேன். குறிப்பாக டெஸி டெரட்டா எனும் நீதிக்கவிதையை அவர் விளக்கி உள்ள ஒரு நூல். நான் அந்த காலத்தில் வாங்கின நூல்களில் இன்றும் தொலைக்காமல் வைத்திருப்பவை ருத்ரனின் நூல்களே

இவரது நூல்களில் எனக்குப் பிடித்தமானவை:

 “தேவைகள் ஆசைகள்” (என் பதின்வயதில் இதை ஒரு ஐம்பது தடவையாவது படித்திருப்பேன்.)

உன்னை அறிந்தால்

மனநோய்கள் - சிகிச்சை முறைகள்

டெஸிடெரட்டா

 

ஒரு உளவியலாளர் (psychologist) என்பவர் தெரப்பி அளித்து மனச்சிக்கலை விடுவிப்பவர். உளவியலில் முதுகலை படித்தவர். ஆனால் மனநோய் மருத்துவர் (psychiatrist) என்பவர் மருந்து கொடுத்து குணப்படுத்துபவர். மருத்துவம் படித்தவர். ருத்ரன் ரெண்டாம் வகை.  இப்போது பிரசித்தமாக ஊடகங்களில் பேசி வரும் ஷாலினி, உயிர்மையில் கட்டுரைகள் எழுதும் ஆனந்தன் ஆகியோர் இப்படியானவர்களே

கருத்துகள்

saru.manivillan இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பு...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...