முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உளவியல் நூல்கள்: ஒரு பார்வை (2)


(2) இலக்கிய வாசிப்பாளர்களுக்கு மனத்தின் புதிர்கள் குறித்த நேரடியான தீர்வுகளை விட ஆழமான விசாரணைகளே முக்கியம். அவ்வகையில் இரண்டாம் வகையினரின் எழுத்துக்கள் இலக்கிய வாசகர்களை ஈர்க்கும். இந்த psychiatryஇன் பிதாமகர் என அறியப்படும் சிக்மண்ட் பிராயிடைப் (Sigmund Freud) [1856-1939] பற்றி அநேகமாய் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆஸ்திரியாக்காரர். அவர் ஒரு தனித்துவமான சிந்தனையாளர். மனத்தின் சிக்கல்களை, நோய்மைகளை மொழியில் அடையாளம் கண்டு, ஒரு மனிதன் தன்னை சரியாக வெளிப்படுத்தக் கற்றுக் கொண்டால் அவனது சிக்கல்கள் சரியாகி விடும் என நம்பினார்


பிராயிட் இலக்கிய விமர்சனத்திலும் கால் பதித்தார், அதன் பிறகு விமர்சனத்தில் உளவியல் ஒரு தவிர்க்க முடியாத அம்சமானது. பிராயிட் சர்ச்சைக்குரிய ஒரு சிந்தனையாளர் என்பதால் அவரை எல்லாரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு மனிதனின் நடத்தையை, மனப்போக்கை பற்றி யார் பேசினாலும் அங்கே பிராயிட் எட்டிப் பார்த்து விடுவார். அவரது உளப்பகுப்பாய்வு இவ்வளவு பிரபலமானதற்கு ஒரு காரணம் அவர் அளித்த சித்திரம் 1) நவீன எந்திரமய சூழலுக்குப் பொருத்தமாக இருந்தது - ஒரு பந்தை நீருக்குள் அழுத்தினால் அது வெளியே வரும் என நமக்குத் தெரியும். இயல்பியலில் ஒரு ஆற்றலுக்கு அழிவே இல்லை என்றார்கள். ஒரு எந்திரத்துக்குள் விசை எப்படி சென்று பல்வேறு விதங்களில் மாற்றமடைகிறது என நாம் பார்க்கிறோம். பிராயிட் இந்த விதமான ஒரு உவமையை மனத்திற்கும் அளித்தார். அங்கு நீங்கள் ஒரு உணர்ச்சியை ஊட்டினால் அது ஒன்று பத்தாகி பத்து நூறாக வளரும். எப்படி? அதன் மீது நாம் கண்காணிப்பு, அதனாலான கட்டுப்பாடு, சமூக விலக்க அச்சம், தடைகள் போன்ற விசயங்களை ஊட்டும் போது, திணிக்கும் போது அதற்கு விசை கிடைக்க அது ஆழ்மட்டத்துக்கு சென்று, நீரை அளையும் போது மீன் குஞ்சு கீழே போய் ஒளிவதைப் போல, மறையும், ஆனால் அது இயல்பியல் விதிப்படியே வேறு வடிவில், ஏற்கத்தக்க, ஏற்க முடியாத தோற்றங்களில், வெளியே வரும் என்றார். ரொம்ப அருவமான ஒரு அகச்செயல்பாட்டை அவர் இப்படி எளிமைப்படுத்தி புரிய வைத்தார். எல்லாரும் அருவருக்கத்தக்கது என ஒதுக்கிய பாலியலுக்கு அவர் முன்னுரிமை அளித்தார், மதம், கடவுள், தாய்மை, கலைச்செயல்பாடுகள் போன்ற புனிதங்களை உடைத்தார்


ஆனால் பிராயிடுக்கு அறிவுத்துறைகளில் இருந்தே பலத்த எதிர்ப்பு வந்தது, அவர் மானுடச் செயல்பாடுகளை, மிகைப்படுத்துகிறார், கொச்சைபடுத்துகிறார் என. பெண்ணியவாதிகள் மற்றொரு பக்கம் அவரதுஆண்-மையசிந்தனையை கண்டித்தனர். ஒழுக்கவாதிகள் அவரை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளவில்லை - தாய்-மகன் உறவு பாலியல் ரீதியானது என்றால் யாருக்குத் தான் ஏற்க மனம் வரும். இப்படி சர்ச்சை, எதிர்ப்பு என துவங்கி அப்படியே முடிந்தது பிராயிடின் காலம்.


(3) ஆனால் பிராயிடை அவரது அடுத்த தலைமுறையினரால் சுலபத்தில் மறுக்க, மறக்க முடியவில்லை. பிராயிட் மானுட இருப்பை முழுக்க முழுக்க உடல் சார்ந்த சிக்கல்களுடன் முடிச்சுப் போட்டது நியாயமானதா? நமது பிரக்ஞையை வெறுமனே இச்சையினால் நடத்தப்படும் பௌதீக ஆற்றலாக அவர் பார்த்தது சரியானதா? ஆண்மை மட்டுமே சமூகத்தின் மையவிசையா? இதற்கு பதில் அளிப்பதற்கு ஒருவர் தோன்றினார்: ஷாக் லக்கான் (Jacques Lacan) [1901-1981]. பிரான்ஸில் தோன்றிய மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர். லக்கானின் முக்கியமான பங்களிப்பு அவர் பிராயிடை தத்துவார்த்தமாக அணுக சொல்லித் தந்தார் என்பது. அவர் பிராயிடின் பல கருத்தாக்கங்கள் - பாலியல் ஆற்றல், தாய்மை, தந்தைமை, உபமனம் - ஆழ்மனம் - பிரக்ஞை மனம் - சமூக உறவு, ஈடிபல் காம்பிளக்ஸ் போன்றவற்றை நேரடியான பொருளில் பார்க்கக் கூடாது, அவை உருவகங்கள் என சொல்லித் தந்தார். உதாரணமாக அவர் மனம் என்பதை மொழி அமைப்பாகக் கண்டார். மனம் உடலுக்குள் இருக்கிறதல்லவா, லக்கான் இந்த உடலே ஒரு உருவகம் என்றார். அவர் உளவியலை உள ஆய்வில் இருந்து சுயம் கட்டமைக்கப்படுவது குறித்த ஆய்வாக மாற்றினார். சுயம் என்பது மொழிக்குள் பல்வேறு வகையான பிரதிபலிப்புகளால் தோன்றுவது. தான் யாராக இருக்கிறான் என ஒருவன் புரிந்து கொள்வதற்கு இச்சையே பிரதான தூண்டுதல், திசை காட்டும் கருவி என்றார். அதாவது இச்சையை பெண்ணைக் கூடுவதற்கான பௌதீக இச்சை என்றல்லாமல் அடைய முடியாத ஒன்றை அடையும் முனைப்பில் நம்மை ஈடுபடுத்தும் உணர்வு என விளக்கினார். இச்சையின் திருப்தி என்பது இச்சிக்கும் பொருளை அடைய முடியாத படி அது நம்மை விட்டு விலகி சென்று கொண்டே இருப்பது என்றார்

சரி இதில் ஆண்-பெண் உறவு எங்கு வருகிறது?

ஆணை சமூகத்தின் சட்டதிட்டங்கள், அதிகார அமைப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், மதிப்பீடுகள் போன்றவற்றின் உருவகமாக அவர் கண்டார். கூடுதலாக இந்த ஆணை அவர் தந்தை என பெரிய Fஉடன் Father என்றார். இந்த தந்தை என்பவைக் கண்டு நாம் அஞ்சுகிறோம், அவரை முறியடித்து அவரிடத்தை அடைய ஏங்குகிறோம் என பிராயிட் சொன்னார். லக்கான் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று இந்த தந்தையை நாம் இச்சிக்கிறோம் என்றார். தாய்க்காக அல்ல, அதிகாரத்துக்காக. .தா., ஒரு போராட்டக் களத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு போராளிகளின் நோக்கம் போராட்டம் மூலம் நீதியை நிலை நாட்டுவது. லக்கானிய உளவியலில் நீதி இச்சிக்கப்படும் ஒரு பொருள். அது கற்பனையான ஒரு உருவம் - இதை லக்கான Imaginary என்றார். இந்த போராட்டம் என்பது அதிகாரத்துடனான ஒரு உறவாடமும் தானே. காவல்துறை, அரசியல் தலைமை, அதிகார அமைப்புகள் போன்றவற்றுடன் போராடி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உறவாடல் இது. இந்த அதிகார அமைப்புகள் நமக்கு நமதுதந்தையைநினைவுபடுத்தும் உருவகங்கள். இந்த அமைப்புகளின் முறைமைகளை அவர் Symbolic என்றார். இந்த Symbolic வழியாக நாம் தந்தையை (Father) இச்சிப்பதாகவும் லக்கானிய உளவியலில் நாம் பகுப்பாய முடியும். அதாவது நாம் இங்கு உளவியலைப் பற்றி பேசுவதே Symbolicஇன், தந்தை உருவகத்துடன் உறவாடி நம்மை அந்த அதிகாரத்தின் மொழியில் கட்டமைக்கிற முயற்சியே.


இந்த சுயத்தைக் கட்டமைக்கிற சங்கதியை விளக்க லக்கான் ஒரு குழந்தை நிலைக்கண்ணாடியின் முன் நின்று தன்னையே பார்த்துயார் இது?” என வியக்கிற காட்சியை உதாரணம் காட்டுகிறார். அது என் பிரதிபிம்பம் என்றல்லாமல் அதுவே நான் என அது நினைக்கிறது. ஆனால் ஒரு பிரச்சனை. கண்ணாடியை விட்டு விலகினால், அசைந்தால் அந்தசுயமும்அழிந்து விடுகிறது. நான் எங்கே என அது தேடினால் காணவில்லை. ஏன் அதன் உடல் அதன் சுயம் இல்லையா? இல்லை - 1) உடலை நம்மால் முழுசாகப் பார்க்க முடியாது, அதை பிரதிபலித்தே பார்க்க முடியும்; 2) உடல் மட்டுமே அல்ல அதனுடன் ஒரு பகுதியாக யோசிக்கிற, இச்சிக்கிற, புலன்களால் உணர்கிற ஒரு மனமும் இருக்கிறதல்லவா? அதை எப்படிப் பார்ப்பது? நமது இருப்பு என்பது உடலால் ஆனதா அல்லது மனத்தால் ஆனதா? இந்த கேள்விகளுக்கு விடை நம்மை இந்த உலகில் உள்ள பொருட்கள், அமைப்புகள், உயிர்கள், மனிதர்கள் மீது பிரதிபலித்து உணர்ந்து கொள்வது. ஆம், வளர வளர குழந்தையால் வெறுமனே கண்ணாடியில் தன்னைப் பார்த்து திருப்தி அடைய முடியாது. ஏன்?

அந்த பிரதிபிம்பம் நிலையாக இல்லையே? எனில் சுயமும் நிலையற்றது எனும் நிச்சயமின்மை ஏற்படுகிறது. ஆகையால் தான், மனிதன் தன்னை முடிவற்று பிரதிபலித்து அந்த பிரதிபலிப்புகளுடன் சரசமாடியபடியே இருக்கிறான்.


இதில்தாய்” (Mother) என்பவரை ஒரு கட்டற்ற இயற்கையின் இருப்பாக, காலமற்ற, இருமையற்ற ஒரு வெளியாக லக்கான் பார்க்கிறார். தாயிடம் திரும்புவது அனுபூதி போல, இறைவனிடம் திரும்புவதைப் போல


லக்கான் இப்படி பிராயிட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்கினார். தத்துவார்த்தமாக அவரை செதுக்கி நம் முன் வைத்தார். லக்கான் வழியாக படிக்கப்படும் பிராயிடே எனக்கு பிடித்தமானவர். காமம்-பால் ஒடுக்குமுறை-சமூக அச்சம் எனும் குறுகின கூண்டில் இருந்து பிராயிடை விடுவித்து அகன்ற வானில் பறக்க விட்டார் லக்கான்


கருத்துகள்

Velu subramaniam இவ்வாறு கூறியுள்ளார்…
தெளிவும் தீர்க்கமும். சிறப்பு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...