முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடும், ராமர் கோயிலைக் கட்டினால் தேசம் வளமாகும்


காலங்காலமாக இந்துத்துவர்கள் எந்த ஆதாரமோ லாஜிக்கோ இல்லாமல் வழவழகொழகொழவெனப் பேசுவதில் வல்லவர்கள். ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை ஒட்டி அத்வானியின் கூற்றைப் பாருங்கள்:


In a statement, Advani said it is his belief that the Shri Ram Mandir will represent India as a strong, prosperous, peaceful and harmonious nation with justice for all and exclusion of none to truly usher in "Ram Rajya, the epitome of good governance".

அதாவது ராமர் கோயிலை எழுப்புவது இந்தியாவை 1) வலுவான, 2) வளமான, 3) அமைதியான, 4) ஒற்றுமையான தேசமாக காட்டுமாம். அங்கு அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதைக் காட்டுமாம்.

எனக்கு சத்தியமாகப் புரியவில்லை - ஒரு கோயிலால் எப்படி இது சாத்தியமாகும்?

தேசம் வலுவாக, வளமாக வேண்டுமென்றால் அங்கு பொருளாதாரம் வளர வேண்டும், சமூக நீதி, சமத்துவம் பேணப்பட வேண்டும். கோயில் என்பது வழிபாட்டு தலம் - இந்த இரண்டுக்கும் என்ன சம்மந்தம்? இது “கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடும்” என்கிற கணக்கில் அல்லவா உள்ளது!

அடுத்து அவர் சொல்வதைப் பாருங்கள்:

"I feel humbled that during the Ram Janmabhoomi movement, destiny made me perform a pivotal duty in the form of the Ram Rath Yatra from Somnath to Ayodhya in 1990, which helped galvanise the aspirations, energies and passions of its countless participants," he said.

இதுக்கு நீங்க அவமானப்படவல்லவா வேண்டும் தலைவரே? நீங்கள் நடத்திய ரத யாத்திரையின் விளைவாக இங்கு இந்து-முஸ்லீம் பிரிவினை தோன்றியது, ரத யாத்திரையை தொடர்ந்து உங்கள் கரசேவகர்கள் ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஹமதாபாத், பரோடா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இஸ்லாமியரைத் தாக்கும் பொருட்டு கலவரங்களை ஒருங்கிணைத்தனர். ஒரே மாதத்தில் 166 கலவரங்கள், அதில் 564 பேர்கள் கொல்லப்பட்டனர். ஜெய்ப்பூரில் மட்டுமே ஒரே வாரத்தில் 130 பேர். உத்தர பிரதேசத்தில் 224 பொதுமக்கள் பலியானார்கள். இது போக, மும்பை குண்டு வெடிப்புகள், உங்கள் ஆட்களால் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட கலவரங்கள், குஜராத்தால் வெறித்தனமாக இஸ்லாமியர் வேட்டையாடப்பட்டது, பேக்கரியில் வைத்து உயிருடன் எரித்து கொல்லபட்டது என இந்த தேசமே தலைவிரிக்கோலமானது. அதன் பின்னர் இஸ்லாமியர் கடந்த முப்பதாண்டுகளாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு, ஒடுக்கப்படுகிறார்கள், ஒரு தொற்று நோய் பரவினால் கூட அதன் பழி அவர்கள் மீது. இறுதியாக விரைவில் அவர்கள் தம் குடியுரிமையை இழந்து முகாம்களில் அடைக்கப்படப் போகிறார்கள். இதற்கெல்லாம் துவக்கப் புள்ளி நீங்கள் ஆரம்பித்து வைத்த ரத யாத்திரை அல்லவா? 
இத்தனையும் செய்து விட்டு மனசாட்சியை ஊமையாக்க முடிகிறதா உங்களால்? எனக்கு பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லை, உங்களுக்கு இருக்கலாம் - ஊழ் உங்களை சும்மா விடும் என நம்புகிறீர்களா? மரணப் படுக்கையில் நிம்மதியாக உங்களால் கண்ணை மூட முடியுமா சொல்லுங்க,மதிப்பிற்குரிய அத்வானி ஜி? 

ஒருவிதத்தில் உங்கள் சீடர் மோடிஜி உங்களுக்கு அடித்த ஆப்பை நான் உள்ளூர ரசித்தேன்.

ஆனால் இந்த கூற்றுகளையே மற்றொரு விதமாகவும் பார்க்கலாம் என்பதையும் அறிவேன்:

பொருளாதார வளம், அமைதி, ஒற்றுமை, அனைவருக்குமான நீதி என்றெல்லாம் அத்வானி மோடியை பார்த்து பொடி வைத்துப் பேசுகிறார் எனப் பார்த்தால் “ஜி நீங்க இன்னிக்கும் பயங்கரமான அரசியல்வாதி” எனக் கூறலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...