முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுநீதி விவாதங்கள் (1)



மனுநீதியில் வரும் அபாசமான, பெண்களுக்கு எதிரான பகுதிகள் இடைச்செருகல்கள் என இந்துத்துவர் வாதிடுவதில் ஒரு முரண் உள்ளது - ஒருவர் ஒரிஜினல் எழுத்தாளராக இருக்கும்பட்சத்தில் பின்னால் எழுதிச் சேர்க்கப்படுவதை இடைச்செருகல் எனலாம். ஆனால் அதையே கற்பனையான ஒரு எழுத்தாளருக்கு சொல்ல இயலாது. மனு வாழ்ந்தார் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. அது ஒரு புனைப்பெயராக இருக்க வேண்டும், அவருக்குப் பின்னர் பலரும் அப்பெயரில் சமூக ‘நெறிகள்’, விதிமுறைகளை பொறித்து வைத்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் பார்வை. இது சரி எனில் இடைச்செருகல் எனும் தப்பிக்கும் உத்தி எடுபடாது.


ஒன்று மனு ஒரு வரலாற்றுப் பாத்திரம் என நிரூபிக்க வேண்டும், அவரது சிந்தனைகள் இவையிவை என தெளிவுபடுத்தி ஒரு திருத்தப்பட்ட பதிப்பை அவர்களே கொண்டு வர வேண்டும்; தமிழில் இலக்கிய பிரதிகளுக்கு இதை நாம் செய்திருக்கிறோம். ஏன் இந்துத்துவர்களால் அதை மனுநீதிக்கு செய்ய முடிவதில்லை?


நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கு ஒரு மறைமுக பதிலை குஷ்பு அளித்தார்: “மனுநீதியில் அனைத்தையும் நாங்கள் ஏற்கவில்லை”. எதையெதை என அவர் சொல்ல மறுத்து விட்டார். ஏனென்றால் கணிசமான மனுநீதியை இப்போது இவர்களால் பொதுவெளியில் ஆதரிக்க முடியாது. அதே நேரம் அதன் சனாதன தர்மம், சாதி குறித்த, பிராமணியம் குறித்த வலியுறுத்தல்கள், நம்பிக்கைகள் அவர்களுக்கு இந்து சமூகத்தை ஒரு பிரமிடைப் போல பிராமணர்கள், அதற்கு அடுத்து வைசியர்கள், அதற்கு அடுத்து சூத்திர சத்திரியர்கள் என கட்டமைப்பது அவர்களுக்கு அவசியமாக உள்ளது. இப்போதும் ஆர்.எஸ்.எஸ் (பிராமணியம்) + பாஜக (வைசியர்கள் + சத்திரிய சூத்திரர்கள்) + உதிரி இந்துத்துவ அமைப்புகள் (சூத்திரர்கள்) என ஒரு படிநிலையை அவர்கள் வெற்றிகரமாய் பயன்படுத்தி அதிகாரக் குவிப்பை செய்து வருகிறார்கள். இது அவர்களுக்கு மிக வசதியாக இருக்கிறது. ஒரு சிறந்த உதாரணம், எல்.முருகன். அவர் அம்பேத்கரை படித்தவர் என்றாலும் அம்பேத்கரிய கருத்துக்களை பொதுவெளியில் பேச மாட்டார், அப்படி ஊமையாவதன் வழி அவர் தன்னை இப்படிநிலையில் பொருத்தி கொள்வார். சனாதன தர்மத்தை பின்பற்றுவதன் வழி தலித்துகளும் சூத்திரர்களாக நடத்தப்படுவார்கள் என ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்கிட முடியும். இப்படி மனுநீதி ஒரு அரசியல் கொள்கை விளக்கமாக அவர்களுக்கு அவசியம். அதே நேரம் அதை யாரும் பொதுவெளியில் அப்பட்டமாக விவாதிக்காதபடியும் பார்த்துக் கொள்வார்கள். 


பாஜகவின் கனவு முழுமையாக நிறைவேறும் நாள் நமது பிள்ளைகள் பள்ளியிலேயே மனுதர்மத்தை உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அதுவரை இந்துத்துவர்கள் நம் முன்பு செத்து செத்து விளையாடுவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...