முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூத்திர அரசியல்







அண்மையில் மூத்திர சர்ச்சைக்கு ஆளான மருத்துவரும், பாஜகவின் எபிவிபி தேசியத் தலைவருமான சண்முக சுப்பையா எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடம்பெற வைத்தார்கள். அது மேலும் பல கண்டனங்கள் பல தரப்புகளில் இருந்தும் பெற்றுத் தந்தது. இதில் கவனிக்க வேண்டியது இது வெறுமனே ஒரு தனிமனித ஒழுக்கப் பிறழ்வு மட்டும்ல்ல என்பது.

 ஒடுக்கப்பட்டோர் மீது மூத்திரம் பெய்யும் இந்த சுபாவமானது சாதி, மதத் திமிரானது ஆணாதிக்கத்துடன் நுணுக்கமாய் பின்னிப்பிணைந்ததுதாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என தாம் துச்சமாக மதிக்கிறவர்களை சிறுநீரைக் கொண்டு அடையாளப்படுத்துவது, அவர்களை மலம் சுமக்க வைப்பது இந்துப்பெரும்பான்மை வாதம் பேரும் பலரது கீழ்மையான பண்பாடாக உள்ளது. மனுநீதியில் உள்ள கருத்துக்களை சொன்னதற்காக விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பெண்களை அவமதித்ததாக குற்றம் சாட்டி, போராட்டம் என்கிற பெயரில் சினிமாத்தனமான பரபரப்பை ஏற்படுத்தி ஊடக கவனத்தைப் பெற்ற தமிழக பாஜக மகளிர் அணித்தலைவர் குஷ்பு அவர்களும் பிறரும் இவ்விசயத்தில் அமைதியாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்களது கட்சியினரைப் பொறுத்தவரையில் எளியோரை அவமதிப்பதும், மனிதக்கழிவுகளைக் கொண்டு தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினரை கேவலப்படுத்திமனுநீதியைநிறுவுவதும் ஒன்றும் புதிதல்ல


சில செய்திகளைப் பாருங்கள்:



2018 அக்டோபரில் ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரன் ஒரு பொதுக்கிணறருக்கே ஒன்றுக்கடித்து சர்ச்சைக்குள்ளானார். அடுத்து ஷம்பு சிங் கட்டேஸர் எனும் பாஜக அமைச்சர் முதல்வர் வசுந்தர ராஜேவின் சுவரொட்டி மீது மூத்திரம் பெய்து மாட்டிக்கொண்ட பின் அதை தமது மரபு என நியாயப்படுத்தி சர்ச்சைக்குள்ளானார். 2017இல் மகாராஷ்டிர பாஜக அமைச்சர் ராம் ஷிண்டே பொதுவெளியில் ஒன்றுக்குப் போன காணொலி வைரலானது. 2019 செப்டம்பரில் உத்தர பிரதேச பாஜக அமைச்சர் நிஷாத் மனைவி தன் கணவன் தன் அடித்து அவர் மீது மூத்திரம் பெய்து வதை செய்ததாய் புகார் தெரிவித்தார்.

2019இல் உத்தரபிரதேசத்தில் கிஷன் லால் ராஜ்புத் எனும் பாஜக எம்.எல். குர்ஜார் எனும் ஒரு கான்ஸ்டபிளை செருப்பால் அடித்து உதைத்து விட்டு பிற போலிசார் முன்னிலையில் மூத்திரத்தை குடிக்கும்படி செய்தார். 2018 ஆகஸ்ட் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ளூர் பாஜக தலைவர் கீரம் சிங் தனது மகளையும் அவருடன் ஓடிச்சென்று மணம் புரிந்த ரமேஷ் என்பவரையும் கடத்தி வந்து அடித்து உதைத்து மூத்திரம் குடிக்க வைத்தார். இப்படி பல சம்பவங்கள்.


பொதுவாக மிருகங்கள் தாம் இப்படி தமது எல்லையை வகுக்க, பாலியல் ஆதிக்கத்தை நிறுவ, வளங்களை தமதாக்கிக் கொள்ள மூத்திரம் பெய்யும் என்கிறது அறிவியல். இத்தகைய மிருகங்களிடம் நமது நாட்டை, நமது மாநிலத்தை தொடர்ந்து ஒப்படைக்கப் போகிறோமா என மக்கள் சிந்திக்க வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...