எப்போது படிப்பேனோ. இப்போது கேட்டறிய ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஏன் விடவேண்டும்? நாகார்ஜுனரின் சூனியவாதம் குறித்த புத்தகத்தை முன்வைத்து அபிலாஷ் நிகழ்த்திய தொடர் உரையின் முதல் பகுதியைக் கேட்டதன் விளைவாக எனக்குத் தோன்றியது இது. அன்றன்று தோன்றுவதை இங்கு தொகுக்கிறேன். முழுக்க முடிந்த பிறகு விவாதித்துக்கொள்ளலாம்.
* சாரமற்ற அனைத்தும் சூனியம் என்று நாகார்ஜுனர் சொல்வதாக அபிலாஷ் சொன்னார். எதெல்லாம் அப்படி சாரமற்றிருக்கின்றது? அபிலாஷ் இன்று அதைச் சொல்லவில்லை.
* எதுவும் முற்றிலும் எதையும் சார்ந்திருப்பதில்லை என்பதே சரி என்று தோன்றுகிறது. மிகவும் யோசித்தால் கடவுள்கூட நம்புகிறவர்களைச் சார்ந்துதான் இருப்பார் என்று தோன்றும்.
* பிறகு அந்தக் குழந்தை உதாரணம். நூறு சதம் ஒரு குழந்தை தனது பெற்றோரைப் போல இருக்காது. அவர்கள் கற்பித்தது, அதுவாக யோசித்து உணர்ந்தது, அதற்கு நேர்ந்த அனுபவங்கள். இவை மூன்றின் கலவையாகத்தான் எல்லாக் குழந்தைகளுமே இருக்கும், வளரும், வாழ்ந்து போகும்.
* எதுவும் ஒன்றிலிருந்து இல்லை - சரி
எதுவும் தன்னிலிருந்தும் இல்லை - சரி
கலந்ததும் இல்லை - இடிக்கிறது
காரணமின்றியே ஒன்று தோன்றும் - இருக்கலாம்
நாளைய உரைக்குப் பிறகு மீண்டும்.
#notetoself

கருத்துகள்