#கதைமுடிவுக்குவந்துவிட்டீர்கள்.- ஆர்.அபிலாஷ்
2016 ல் வெளிவந்த இந்த 100 பக்க நாவல் குறித்து நான்கு வருடங்கள் கழித்துப் பேசுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. சொல்லப்போனால் புக்ஃபேரில் அபிலாஷின் Abilash Chandran கையெழுத்திட்டுத்தான் இந்தப் புத்தகத்தையே வாங்கியிருக்கிறேன். வாசிப்பதற்கான மனநிலை மிகத் தாமதமாகத்தான் வாய்க்கிறது போலும்.
ரத்தம் தெறிக்கும் ஐந்தாறு மிஷ்கின் படங்களை ஒன்றாய் பார்த்ததுபோல் காட்சி அமைப்புகளில் மிரட்டியிருக்கும் இந்நாவலை மழை தொடங்கும் முன்னிரவில் வாசிக்க நினைத்திருக்கக் கூடாது. இளையராஜாவோ பி சுசிலாவோ துணைக்கு வைத்துக்கொண்டு தூங்கியிருக்க வேண்டும். நாவல் வாசிக்கும்போது மனதில் தோன்றும் பிம்பங்கள் நிஜமாகவே பயமுறுத்தும்படிதான் இருந்தது.
குறிப்பாக மொட்டை மாடியில் கண்டெடுக்கப்படும் இரண்டு பிணங்களைப் பற்றிய வர்ணனையில் ஆசிரியர் விளையாடியிருக்கிறார். அதேபோல் ஒரு ஆசிரிய கதாபாத்திரம் தன் மாணவியை சூறையாடும் காட்சியும் பக்கா... நாவல் அந்த ஆசிரியருக்கு சாதகமாகத் திரும்பும் காட்சியும் அடேங்கப்பா சொல்ல வைத்தது. ஒரே மூச்சில் வாசித்து முடிக்கக் கூடிய விறுவிறுப்பு திரில்லர்.
பணக்காரர்களின் காம இச்சையைத் தீர்க்கும் கிளப் குறித்து மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் ஒரு காட்சி வரும். இதிலும் வருகிறது. எது முந்தி வந்தது? தலைப்பு முடிவைச் சொன்னாலும் நெகடிவ் நாயகன் ஜார்ஜுக்கும் கொலையாகும் கோகிலாவுக்குமான இன்னொரு சாதகத்தை யோசிக்க வைத்த விதத்தில் வெற்றிதான் ரைட்டருக்கு.
-கணேசகுமாரன்
கருத்துகள்