முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றைய கிளப்ஹவுஸ் உரையாடல் - ஜெ.கெ



இன்றைய கிளப்ஹவுஸ் உரையாடல் நிறைவாக அமைந்தது - அதை உரையாடல் என்று சொல்லக் கூடாது. ஒரு கூட்டு வாசிப்பு. ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ஒரு நூலை எடுத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு சில பக்கங்கள் படித்து, அதில் சிக்கலான பகுதிகளை மட்டும் விவாதித்தோம். ஒன்றரை மணிநேரம் எடுத்துக் கொண்டோம். 


சிந்திக்கும் தன்னிலையில் இருந்து விடுதலை என்பதே ஜெ.ஜெயின் இலக்கு. இன்று Questioning Krishnamurti நூலில் நாங்கள் தேர்ந்து கொண்ட அத்தியாத்தில் மேற்குக்கும் கிழக்குக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம் எனும் கேள்வியில் ஆரம்பித்து தொழில்நுட்பமும் அதை ஒட்டிய பொருளாதார வளர்ச்சியும் இந்த உலகங்களுக்குமான வித்தியாசத்தை ஒழித்து விட்டது என ஜெ.கெ சொல்கிறார். அடுத்து, தன்னிலையானது (subjecthood) எப்படி உருவாகிறது என விவாதிக்கிறார். தன்னிலையானது காலம் குறித்த நமது கருதுகோளில் இருந்து தோன்றுகிறது என்கிறார் ஜெ.கெ - இதை அவர் தனது பல உரைகளில் திரும்பத் திரும்ப பேசுகிறார். சிந்திக்கும் ஒரு நபருக்குள் சிந்திக்கிறவரும், சிந்திக்கிறவரைப் பற்றி சிந்திக்கிற இன்னொருவரும் இருக்கிறார் (observer and the observed) என ஜெ.கெ சொல்கிறார். (இதை மிஷ்கின் தனது “யுத்தம் செய்” படத்தில் காட்பூர்வமாக பரிசீலிக்கிறார்.) உ.தா., ஒருவருடைய மகன் இறந்து போகிறார். இல்லாமல் போன மகனை ஒரு தகப்பன் திரும்பத் திரும்ப நினைத்து இரங்குகிறார். இந்த இரங்கும் தகப்பன் யோசிக்கும் ஒரு நபருக்குள் தனி இருப்பாக இருக்கிறார். ஒருவர் இரங்கும் போது இரட்டையாக மாறுகிறார் - இரங்கும் நபர் (தகப்பன்), அதை உணர்கிற ஆள் (தகப்பனல்லாத ஆள்). இந்த இரட்டை இருப்பும், அது குறித்த பிரக்ஞையே துக்கத்தை உருவாக்குவதாக ஜெ.கெ சொல்கிறார். இந்த இரட்டை தன்னிலையை எப்படி உடைப்பது என்பதே ஜெ.கெ எழுப்பும் பிரதானமான கேள்வி. இன்றைய வாசிப்பில் என்னை மிகவும் பாதித்த கேள்வி இதுவே. எனக்கு இது நகுலனின் கவிதைகளை நினைவுபடுத்தியது. 

தத்துவத்தில் ஜெ.கெ ரொம்ப ரொம்ப எளிமையான சிந்தனையாளர். அதனாலே அவருடன் ஆரம்பித்தோம். ஆனால் ஜெ.கெவுடன் தொடர்வதில் அர்த்தமில்லை. கொஞ்சம் சிரமமான ஒரிஜினலான (continental) தத்துவஞானிகளுக்கு அடுத்து நகரலாம் என நினைக்கிறோம். நாளை ஹைடெக்கரின் ஒரு அறிமுக நூலை எடுத்துக் கொள்கிறோம். அதை சில நாட்கள் தொடர்ந்து வாசித்து தெளிவடைந்து விட்டு அவருடைய Being and Timeக்கு செல்லலாம் எனத் திட்டம். 


நாங்கள் இந்த கூட்டு வாசிப்பை கடந்த ஓராண்டாக கூகிள் மீட்டில் நடத்தி வருகிறோம். அதே முறைமையுடன் அப்படியே ‘தட்டுமுட்டு சாமானுடன்’ கிளப்ஹவுசுக்கு பெயர்ந்து விட்டோம். வழக்கமாக அதில் கலந்து கொள்கிற ஐந்து பேருடன் இன்று கூடுதலாக ரியாசும், பல்லவியும் இணைந்து கொண்டார்கள். கிளப்ஹவுசில் நூலை display செய்கிற சாத்தியம் இல்லாததால் கலந்து கொள்கிறவர்களுக்கு மின்னூலை முன்கூட்டியே அனுப்பி விடுகிறோம். அவர்கள் தமது போனிலோ லேப்டாப்பிலோ கூட்டு வாசிப்பின் போது படித்துக் கொள்ளலாம்.


சும்மா ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதில் ஆளாளுக்கு கருத்து சொல்வதில் எனக்கு ஆர்வமில்லை. கிளப்ஹவுஸில் பொதுவாக அப்படித்தான் அரட்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. என்ன தான் அனுபவப் பகிர்வுகள் என்றாலும் ஒரு அளவுக்கு மேல் எதுவும் புதிதாக சொல்லப்படாததால் எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த அரட்டைகள் ரொம்ப அலுப்பாக உள்ளன. இன்னொரு விசயம் சுயசிந்தனைகளை பகிர்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை - சுயசிந்தனை என ஒன்று உள்ளதா எனும் கேள்வியும் உள்ளது. ஏற்கனவே கேள்விப்பட்டதை, படித்ததை தான் பேசுகிறோம். அதை ஒழுங்காக தயாரித்து உரையாற்றலாம். அல்லது அனுபவம் என்கிற வகையில் எண்ணங்களை பேசலாம். நான் முன்பு நாகார்ஜுனரை அறிமுகப்படுத்தி பேஸ்புக் லைவில் பேசிக்கொண்டிருந்தது அப்படியானதே. ஆனால் இரண்டிலும் dynamic ஆன ஒரு கற்றல் சாத்தியமில்லாமல் போகிறது. அதனாலே கூட்டுவாசிப்பே மேலானது என நினைக்கிறேன். இன்று ஏழெட்டு பேர் எங்கள் வாசிப்பதை கேட்டனர். அதுவே சரியான எண்ணிக்கை எனத் தோன்றுகிறது. கூடுதலாக சிலர் வரும் நாட்களில் பங்கேற்பாளர்கள் இணைந்தாலும் நல்லது தான். ஆனால் பேசுவது, சமூகமாக்கலை செய்வதை விட சவாலான விசயங்களை சிந்திப்பது முக்கியம், ஒவ்வொரு நாளும் கூடுதலாக சிந்தனையாளனாக நாம் கூர்மை பெறுவது, விவாதத் திறனை, சிந்தனைத் திறனை மேம்படுத்துவது முக்கியம் என நினைக்கிறேன். ஒரு வலுவான சிறுகுழுவை உருவாக்குவதே என் நோக்கம். இது எப்படிப் போகிறது எனப் போகப் போக பார்க்கலாம். 


நாளை ஜெர்மானிய தத்துவஞானி மார்ட்டின் ஹைடெக்கர். A Short Introduction to Heidegger நூலை எடுத்து விவாதிக்கப் போகிறோம். அறையை ஆரம்பித்ததும் லிங்கை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். வருகிறவர்கள் ஈமெயில் ஐடியை பகிர்ந்து கொள்ளுங்கள். மின்னூலை அவர்களுக்கு அனுப்புகிறேன். விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளுங்கள். நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...