முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊடக முதலாளிகள், நெறியாளர்கள் இடையே மக்கள் விரோதிகள்



தமிழ்நாட்டு ஆட்சி மாற்றம் வந்த பிறகாவது நமது நாளிதழ்கள், டிவி சேனல்களில் சிலவற்றின் வலதுசாரித்தனம் குறையும் என எதிர்பார்த்து முட்டாளாகி விட்டேன். இன்னும் மோசமாக மக்கள் விரோத அரசியலையே இவர்கள் பேசுகிறார்கள். பாஜகவின் வாட்ஸாப் செய்திகளில் இருந்தே அன்றன்றைக்கான விவாதக் கள தலைப்பை இச்சேனல்கள் தீர்மானிக்கிறார்கள். சங்கிகளைப் போன்றே அப்பட்டமாகப் பேசுகிறார்கள். அதுவும் நியூஸ் 18 சேனல் விவாதங்கள் மிக ஆபாசமாக இருக்கின்றன. ஒருவித கேலியுடன் தொடர்ந்து ஆளும் அரசை அணுகுவது, பாஜக ஆதரவாளர்கள் மீது பறக்கும் முத்தங்கள் விடுவது என்றே நெறியாளர்கள் செயல்படுகிறார்கள். நீட் குறித்த விவாதத்தை எடுத்துக் கொள்வோம். நீட்டை ரத்து செய்வோம் என தவறான வாக்குறுதி கொடுத்து திமுக மக்களை ஏமாற்றி விட்டதா என்பதே கேள்வி. இல்லை சட்டப்போராட்டத்தை முன்னெடுப்போம் என்றே தேர்தல் அறிக்கையில் சொன்னோம் என்கிறார் மனுஷ். உடனே நெறியாளர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக நீட்டை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளிக்கவில்லையா என்கிறார். ஆமாம், சட்டப்போராட்டம் மூலம் செய்வோம் என்பதை சுருக்கமாக சொன்னார், அதில் என்ன பிரச்சனை என்கிறார் மனுஷ். “நீங்கள் 8 மாதங்கள் என சொல்லவில்லையா?” என்கிறார் அதே நக்கல் புன்னகையுடன். இது என்ன கேள்வி? நியாயமாக ஏன் நீட்டை வலியுறுத்துகிறீர்கள் என ஒன்றிய அரசை நோக்கி கேள்வியை எழுப்ப வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் ஒன்றிய அரசை கேள்வியே கேட்டு விடக் கூடாது, அவர்கள் பலசாலிகள், அவர்களுடன் திமுக பலப்பரீட்சை நடத்தலாமா, பாஜகவின் முடிவை பின்வாங்க செய்வோம் எனக் கூறலாமா என்றே நெறியாளர் திரும்பத் திரும்பக் கேட்கிறார். அவருடைய பிரச்சனை தமிழ்நாட்டு அரசு எப்படி பாஜகவை எதிர்க்கலாம் என்பதாக இருக்கிறதே அன்றி நீட் தேர்வு நியாயமா என்பதல்ல. இதை விட மோசமாக ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் மாட்டு மூத்திரம் குடிக்க முடியுமா?


 ஆனால் இது போன்ற நெறியாளர்களை பழிப்பதிலும் அர்த்தமில்லை. அவர்களை இப்படிப் பேச வைக்கும் எடிட்டர், சேனல் உரிமையாளர்களே சூத்திரதாரிகள். தினமலர் விசயத்திலும் நாம் கட்டுரையாளரை கண்டிப்பதில் அர்த்தமில்லை. மாறாக இந்த ஊடக நிறுவனங்களுக்கும் பாஜக தலைமைக்குமான உரையாடல்கள் என்ன, எந்தளவுக்கு பணம் இவர்களுக்கு பாஜகவால் வழங்கப்படுகிறது, என்ன மாதிரி உதவிகளை உத்தரவாதம் செய்கிறார்கள் என்பதை உளவுத்துறை மூலம் அம்பலப்படுத்த வேண்டும்.


 இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒன்றியத்தில் தலைமை பாஜகவில் இருந்து நாளை ஒருவேளை காங்கிரஸாக மாறி விட்டால் இந்த நெறியாளர்கள் அப்படியே ஒரே இரவில் தாம் வலதுசாரிகள் என்பதை மறந்து விடுவார்கள். எனில் இவர்கள் வலதுசாரிகள் அல்ல, இவர்கள் சந்தர்ப்பவாதிகள். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இங்கே கோலோச்சிக் கொண்டிருந்த போது வெள்ளையர்களுக்கு சொம்படித்து விட்டு, சுதந்திரம் பெற்றதும் அப்படியே யுடர்ன் எடுத்து சுதேசிகளான கும்பல் தான் இவர்கள். அதிகாரம் எங்கேயோ அங்கே போய் ஜால்ரா அடிப்பதும், அவர்களுடைய ஊதுகுழலாக விளங்குவதுமே இவர்களின் ஒரே அரசியல்.


கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழக மக்கள் வலதுசாரி அரசியலை, இந்துத்துவத்தை சிறிதும் மதிக்கவில்லை, ஏற்கவில்லை என செருப்பை எடுத்து இரண்டு முறை காட்டி விட்டார்கள். எனில் இங்கே எப்படி நாளிதழ்களிலும், சேனல்களிலும் வலதுசாரி குரல்கள் வலுத்து ஒலிக்க முடியும்? ஊடகத்தின் கடமை பெரும்பான்மையான மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதும், பிரச்சனைகளைப் பேணுவதும் தானே? அதெப்படி சில ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து மக்களுக்கு எதிராக பேசுகின்றன? பணம், அதிகாரம் என்பதைத் தவிர வேறென்ன இதற்கு காரணம் இருக்க முடியும்? அதனால் தான் இவர்களை ‘சந்தர்ப்பவாத மாட்டுமூத்திர பிரியர்கள்’ என்றேன். இவர்களை அம்பலப்படுத்துவதுடன் தமிழ்ச்சமூகத்தில் தனிமைப்படுத்துவதும் அவசியம். மக்களுடன் நிற்காதவன், மக்களுக்கு எதிராகப் பேசுபவன் மக்கள் விரோதி. அவன் ஊடகத்தில் இருக்கவே கூடாது. 


நான் மீண்டும் கூறுகிறேன் - ஊடகங்கள் திமுகவை மென்மையாக அணுக வேண்டும் என்பது என் கோரிக்கை அல்ல. மக்களிடம் இல்லாத அரசியலை பிரதிநுத்துவக் கூடாது. அது மக்களின் செண்டிமெண்டை ஒட்டி அரசியல் பேச வேண்டும். அது அந்நியர்களின் (குஜராத்திகள், உத்தரபிரதேசிகளின்) குரலைப் பேசக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...