எழுத்தாளர் ஆர். அபிலாஷ் அவர்கள் இலக்கியம், தத்துவம், அரசியல், சமூகம், விளையாட்டு என வெவ்வேறு தளங்களில் தொடர்ச்சியாக எழுதி வருபவர். தற்போது பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் புதினம் சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு என 35 கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை ஒவ்வொன்றுமே அவருக்கான தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இவரது ‘கால்கள்’ நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாடமி 'யுவ புரஸ்கார்' விருதும், இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றுள்ளார்.
தவம் போன்ற இந்த வாழ்க்கையைத்
தன்னம்பிக்கையோடு போராடித்
தான் எனும் அகந்தையின்றி
தனித்துவமாய் வாழ்ந்திடவழிகாட்ட வருகிறார் தோழர் அபிலாஷ் அவர்கள்.
அவருடன் கலந்துரையாட அன்புடன் அழைக்கிறோம்.
#வினிதாமோகன் வினிதாமோகன்,
ஒருங்கிணைப்பாளர். — with வெந்து தணிந்தது காடு and 5 others.

கருத்துகள்