முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீதையின் மைந்தனும் அவரைத் தூண்டி விட்டு ரசிக்கும் கூட்டமும்



சீதையின் மைந்தன் பெரியார் குறித்த பேசிய அந்த படு அபாசமான பேச்சை கேட்டேன். எனக்கு உடனடியாக நினைவு வந்தது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் சில நண்பர்களைத் தான். அவர்களுக்கு அப்துல் கலாமை விட்டால் வேறு சிந்தனையாளரைத் தெரிந்திருக்காது. மொக்கையான ஹாலிவுட் படங்களைப் பார்த்து விட்டு தன்னை உலக சினிமா ரசிகன் என கற்பனை பண்ணி வைத்திருப்பார்கள். கான்வெண்ட் ஆங்கிலம் மட்டும் சரளமாக வரும். அதை வைத்து நவீன சாக்ரடீஸ் என ஒரு சீனைப் போடுவார். எல்லா விசயத்தை பற்றியும் சரளமாக ஸ்டைலாக ஆங்கிலத்தில் பேசுவார்கள், ஆனால் சொல்லுகிற கருத்துக்கள் சுத்த அபத்தமாக, தர்க்கத்துக்கு புறம்பாக, குழந்தைத்தனமாக இருக்கும். முட்டாள்களை சமாளிப்பது சுலபம். ஆனால் பெரிய அறிவாளியாக தன் மொழியை கொண்டு பாவனை செய்யும் போலி அறிவாளிகள் இருக்கிறார்களே அவர்களை வைத்து என்ன செய்வதென்றே உங்களுக்குப் புரியாது. சீதையின் மைந்தன் அப்படியானவர்; சரளமாக சீராக தமிழில் பேசுகிறார்; உள்ளே தான் ஒன்றுமில்லை.

 அவர் தன் பேச்சு முழுக்க முப்பது நாற்பது தடவைகள் பெரியாரை ஒரு பாலியல் தரகர் என்று குறிப்பிடுகிறார். அதற்கு தன்னிடம் ஆதாரம் உண்டு என்று “தமிழர் தலைவர்” புத்தகத்தை காட்டுகிறார். அந்நூலில் உள்ள மேற்கோள்களில் இவர் சொல்வதை உண்மையெனக் காட்டும் ஒன்றுமில்லை. ஆம், பெரியார் தன் இளமையில் ஒரு கட்டற்ற பாலியல் வாழ்க்கையை வாழ்ந்தவர் தான். அவர் ஐரோப்பாவில் சென்று நிர்வாண கடற்கரைகளை போய் பார்த்திருக்கிறார். அங்குள்ள திறந்தநிலை அனார்க்கிஸ வாழ்க்கையை அறிந்திருக்கிறார். இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. அவரே இதை ஒளித்து வைக்க முயன்றதில்லை. ஆனால் சீதையின் மைந்தன் இந்த தகவல்களை குறிப்பிட்டு “இதனாலே பெரியார் ஒரு புரோக்கர்” என்று திரும்பத் திரும்ப கூறுகிறார். 


பெரியாரின் பெற்றோர் ஏழைகளாக இருந்து உழைத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டும் வசதி பெற்றார்கள் என்று கூறும் அவர் அடுத்து பெரியார் பொறுப்பேற்ற பின் அவருடைய அப்பாவின் விபாபாரம் தழைத்தது பெரியார் விபச்சார புரோக்கராக இருந்ததனால் மட்டுமே என்று எந்த சான்றும் இல்லாமல் கற்பனையாக ஒரு விளக்கம் அளிக்கிறார். ஏதோ ஒரு உன்னதமான ஆய்வாளரை, புறவயமாக சிந்திக்கும் சிந்தனையாளரைப் போல தன்னை காட்டிக்கொள்ள வேறு செய்கிறார். அடுத்து, இளைஞரான பெரியார் தன்னுடைய நண்பர்களும் தாசிகளுமாக நதிக்கரைக்கு சென்று கூத்தடித்தார் என்று கூறும் அவர் அதுவும் விபச்சாரத்துக்கு பெண்களை தன் நண்பர்களுக்கு கூட்டிக் கொடுக்கத்தான் என்கிறார். அதற்கு அவர் தரும் தர்க்க விளக்கம் பெரியாரின் மனைவி மணியம்மை இரவு தன் கணவரும் நண்பர்களும் சாப்பிடுவதற்கான உணவை தயாரித்து கொடுத்து விட்டார், தன் கணவர் தாசிகளுடன் நேரம் செலவிடுவதற்கு என்றால் அப்படி செய்வாரா என்பதே. இதை விட குரூரமான அருவருக்கத்தக்க விளக்கத்தைப் பார்க்க முடியுமா? அந்த காலத்தில் எத்தனையோ பெண்கள் தமது கணவர் இரண்டாவது தாரம் வைத்திருந்ததை, பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை எதிர்க்க முடியாமல் அதை இயல்பெனக் கருதி பொறுத்திருந்தனர். அதற்காக அவர்கள் தம் கணவரின் பாலியல் தரகுத் தொழிலுக்கு துணை போகிறவர்கள் ஆவார்களா?


அவருடைய பேச்சு முழுக்க இப்படியான ‘தர்க்க விளக்கங்கள்’, ‘ஆதாரங்கள்’ தாம் கிடைக்கின்றன. 


இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். இந்த நபர் ஏதோ ஒரு விதத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். அவருக்கு பெரியார் மீது ஏதோ ஒரு காரணத்துக்காக கடும் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் யாரைப் பிடிக்காவிட்டால் “நீ பெரியாரின் புதிய வார்ப்பு” என்றே சாபம் விடுகிறார். சீமானைக் கூட சமகால பெரியார் என்று சொல்லுகிறார். இதைக் கேட்க உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? ஆமாம், இந்த சீதையின் மைந்தனுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது. 


இவரையெல்லாம் ஶ்ரீதர் சுப்பிரமணியம் போன்றோர் ஆதரிக்கிறார்கள்? எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு தலைவரை மூச்சுக்கு முப்பது தடவை பாலியல் தரகன் என அழைப்பதன் பெயர் தான் கருத்து சுதந்திரமா? என்ன உங்களுக்கு பெரியாரை ஒருவர் pimp என அழைப்பதைக் கேட்டு கிளுகிளுப்பாக இருக்கிறதா? நம்மால் செய்ய முடியாததை ஒருவர் செய்கிறாரே எனும் மனக்கிளர்ச்சியா? அதனால் அவரை விட்டு வையுங்கள், பாவம் வசை தானே பாடுகிறார், பாடி விட்டு போகட்டும் என்று நினைக்கிறீர்களா? சீதையின் மைந்தனை விட நீங்களே அதிக வக்கிரமானவர். உங்களையும் அவருடைய சேனலில் அவருடைய வசைகளை ரசித்து பின்னூட்டம் இடும் தமிழ்தேசிய தம்பிகளையும் பார்க்கையில் “அஞ்சலி” படத்தில் பொழுதுபோகாத குழந்தைகள் கனகராஜின் கால்களில் டின் கட்டி விட்டு அவர் கத்திக் கொண்டு அவரை ஓடுவதை ரசித்து ஆர்ப்பரிப்பதே நினைவு வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.