முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேய்க்கு பிடித்த சனியன்




பார்க்க சகிக்க முடியாத படம். கண்ணுக்குப் புலப்படாத பேயைத் தவிர எல்லாருமே கேவலமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கவினின் நடிப்பு மிக மிக மட்டமாக மிகையாக உள்ளது. ஒரு சின்ன உணர்ச்சி அதை உங்கள் கண்ணசைவில், நெற்றிச் சுருக்கத்தில் காட்டிவிட முடியும், ஆனால் கவின் அதற்கு பண்ணுகிற அஷ்டகோணல் சேட்டைகளைப் பார்ப்பவர்களுக்கு இவர் பேயைப் பார்த்து பயப்படுகிறாரா அல்லது அவசரமாக கக்கூஸுக்கு போக வேண்டுமா எனக் குழப்பம் ஏற்படும். 

ஒருவேளை டெலிசீரியல் நடிகர்களின் பொதுவான பிரச்சனையா என்றால் சில டிவி நடிகர், நடிகையர் திரைப்படங்களில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்கள். சிலருக்கு சுத்தமாக நடிக்க வராது, ஆனால் ஓவர் ஆக்டிங் பண்ணி கொல்ல மாட்டார்கள். கவினின் நடிப்பைப் பார்த்தால் சிவாஜியே சமாதியில் இருந்து எழுந்து வந்து செவிளில் ஒன்று போட்டு "படவா என் பேரைக் கெடுத்துடாதேடா" என சொல்லுவார் போல!

கவின் மட்டுமல்ல அடுத்த கட்ட நடிகர்களும் மகாமட்டமாகவே செய்திருக்கிறார்கள். ஆக இது இயக்குநரின் பிரச்சனையும் தான். அவர் எஸ்.வி சேகரின் மேடை நாடகங்கள் பார்த்து வளர்ந்தவர் போல.

கதை என்று எடுத்துக் கொண்டால் தேசலான தேய்வழக்கான ஒற்றை வரி. அதில் எங்குமே பயமோ பயம் போல ஏதோ ஒரு அரிப்போ கூட வரவில்லை. ரொம்ப வறட்சியாக இருந்தால் ஒழிய இப்படத்தைப் பார்த்து பயப்பட முடியாது. 

“லிப்ட்” படத்தின் இறுதியில் வரும் ஐ.டி ஊழியர்களின் தற்கொலை விவகாரம் முக்கியமானதில்லையா என நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன், “அது தான் படத்திலேயே ரொம்ப அமெச்சூரான பகுதி. எந்த நிறுவனத்திலும் ஒரு ஐ.டி மேலாளரும் இரு காவலாளரிகளுமாக சேர்ந்து ஒரு தற்கொலையை கொலையாக சித்தரிக்க முடியாது. அடுத்து அவர் அப்படி ஒரு கொடூரமான வில்லனாக இருப்பதற்கான காரணமும் சொல்லப்படவில்லை. மூன்றாவதாக, ஐ.டி ஊழியர்களின் மன அழுத்தத்துக்கு அவர்கள் பெறும் கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பது, வேலை உத்தரவாதமின்மை, வேலைத்திறன் போதாமை என பல காரணங்கள் உள்ளன. ஆனால் இதில் ஏதோ ஒரு மேலாளரின் சைக்கோத்தனத்தால் இருவர் உயிர்விட நேர்வதற்காக அபத்தமாக காட்டி இருக்கிறார்கள். கடைசியில் ஒரு பாட்டில் மிச்ச பிரச்சனைகளைக் பேசி இருக்கிறார்கள். ஆனால் படத்தில் விரிவாக பேசியிருக்க வேண்டியவை அல்லவா அவை.”

அவ்வளவு பெரிய நிறுவனம் என்றால் அதன் பின்னால் பெரிய புள்ளிகள் எத்தனை பேர் இருப்பார்கள்? போலீசையும் ஊடகங்களையும் கட்டுப்படுத்த எத்தனை கோடிகளை இறக்குவார்கள்? இதிலோ ஒரு மாமாவையும் ஒரு குண்டு மாமாவையும் அனுப்பி மிரட்ட செய்கிறார்கள். அவ்வளவு தான். கவின் ஒரு ஜெராக்ஸ் பிரதியை போலிசிடம் கொடுத்து வாக்குமூலம் அளிக்கிறார். ஒரு விசாரணைக்கு அது போதுமா? பேய் அந்த மேலாளரைக் கொல்லுகிறது. ஆனால் அவர் மட்டும் தான் காரணமா?

ஒட்டுமொத்தமாக 12 வயது பிள்ளைகள் பார்க்க வேண்டிய படம் போல இருக்கிறது. குழந்தைகளுக்கான படத்துக்கு ஏன் UA சான்றிதழ் கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.


இதையெல்லாம் மன்னித்து விடுகிறேன் - ஒரு படத்தில் பல விசயங்கள் சொதப்பி விடும், அது இயல்பே. ஆனால் இப்படத்தை பேஸ்புக்கில் விழுந்து விழுந்து பாராட்டுகிறவர்களைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது - ஒருவேளை பேய் அவர்களுக்குள் புகுந்து விட்டதா? இந்த படத்தை நம்மை அப்படி பார்க்க வைத்து வெறுப்பில் கதற வைப்பதே பேயின் திட்டமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...