என் படைப்பு வட்ட நண்பர்களிலேயே அகரமுதல்வன் வித்தியாசமானவர். என்ன நடந்தாலும் சற்றும் சோர்வில்லாமல் பேசக் கூடியவர். சக எழுத்தாளர்களைப் பற்றி அவர் கசப்பாக, புறக்கணித்துப் பேசி கண்டதில்லை. இது எந்தளவுக்கு என்றால் அலைபேசியில் உரையாடும் போதும் எதாவது சில நூல்களையாவது ஒவ்வொரு முறையும் மிக அதிகமாகக் கொண்டாடி பரிந்துரைக்காமல் விட மாட்டார். நானும் அப்புத்தகங்களை தவறாமல் படித்து விட்டு அப்படி என்ன பார்த்து விட்டார் என்று மூக்கில் விரல் வைப்பேன். அதே நேரம் மிகக்கூர்மையான பார்வைகள் கொண்டவர்.
அகர முதல்வனின் கவிதைகள் கரைபுரண்டோடும் மொழியைக் கொண்டவை, கிட்டத்தட்ட ஒருவரது நனவிலிக்குள் எட்டிப் பார்க்கும் உணர்விருக்கும். அவ்வளவு தங்குதடையற்ற மொழிப்புலத்தை நீங்கள் பொதுவாக பெண் கவிஞர்களிடத்து மட்டுமே காண முடியும். ஆண் கவிஞர்கள் பலரும் சற்று யோசித்து கால் வைப்பவர்கள், ஆனால் அகரமுதல்வன் கடலென்றாலும் குதித்து விடும் புரவி! அவரது கவிதைகளில் நிலமும் பெண்ணுடலுமே அவரது ஈழத்தன்னிலையின் உருவகம் என எனக்குத் தோன்றும்!
அவர் தன் புனைவிலும் கவியாகவே திளைப்பவர் என்பது என் பார்வை!
கருத்துகள்