Martyrs of Marriage ஆவணப் படத்தில் விவாகரத்துக்குப் பின்னர் கணவனின் சொத்துக்களின் பாதியை மனைவிக்குக் கொடுக்கக் கோரும் சட்டத் திருத்தம் ஒன்று வரப் போவதாக ஒரு குறிப்பு வருகிறது. இது என்னடா புதுச்சட்டம் என பீதியில் தேடினால் இது 2010இல் காங்கிரஸ் அரசால் அறிமுகம் பண்ணப்பட்ட திருமணத் திருத்தச் சட்டம் எனத் தெரிய வந்தது. நாங்கள் பெண்களுக்கு நீதியளிக்கிறோம் எனும் தோரணையில் காங்கிரஸில் உள்ள போலி பெண்ணிய ஆண்கள் பெண் அமைப்புகளின் அழுத்தத்துக்கு இணங்கி இத்திருத்தச் சட்டத்தை 2013இல் ராஜ்ய சபாவில் நிறைவேற்றியது.
நல்லவேளை அதன் பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கும் சட்ட அமைச்சகத்துக்கும் இந்த சொத்தைப் பிரித்துக் கொடுக்கும் விவகாரத்தில் முரண்பாடு தோன்றியது. அதனால் இதை ஒரு அமைச்சரவைக் குழுவிடம் பரிசீலனைக்கு அனுப்பி அங்கும் ஒரு முடிவை எட்ட முடியாததால் இத்திருத்தச் சட்டம் நிலுவைக்கு வரவில்லை. வந்திருந்தால் நாடு முழுக்க குழப்பம் விளைந்திருக்கும். எத்தனையோ பேர் கடன் வாங்கி ஈ.எம்.ஐயில் வீடு வாங்குகிறார்கள். அவர்களுக்கு விவாகரத்தானால் 20 ஆண்டுகள் தவணையும் கட்ட வேண்டும், வீடும் போய் விடும். மனைவியும் நீங்களும் விவாகரத்துக்குப் பின் இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறீர்கள். உங்கள் பெற்றோர் காலமாக அவர்களுடைய சொத்தில் பாதி உங்களிடம் அல்லாமல் உங்கள் முன்னால் மனைவிக்குப் போய் விடும். திருமணம் ஆகி ஒரு மணிநேரம் வாழ்ந்தால் கூடபோதும், பாதி சொத்தை மனைவி கேட்கலாம். பிடிக்காத ஒருவரை பெற்றோர் வற்புத்தி கட்டி வைத்தால் இச்சட்டத் திருத்தம் பெண்களுக்கு வெகுவாக உதவும் - விவாகரத்துப் பண்ணி பாதி சொத்தை வாங்கிக் கொண்டு காதலனை இரண்டாவதாக கல்யாநம் கட்டிக்கொண்டு ஜாலியாக வாழலாம். பெண்ணைப் பெற்றோர்களும் இப்போது விவாகரத்தை வரவேற்பார்கள். ஒரு பெண் நான்கைந்து முறைகள் விவாகரத்து பண்ணினால் சராசரியாக 3-5 கோடிகள் வரை சொத்தை சம்பாதிக்க முடியும். இச்சொத்துக்கள் பெண்ணைப் பெற்றோரை வளமாக்கும்! ஆகையால் அவர்கள் விவாகரத்தை ஊக்குவித்தால் தானே லாபம். ஒரு பெண்ணை வைத்து இரண்டு பெண்களுக்கு திருமணம் பண்ணிக் கொடுத்து அவர்களும் விவாகரத்து பண்ணினால் மொத்த குடும்பமும் கோடீஸ்டவர்கள் ஆகலாம்.
நம் ஊரில் எந்தச் சட்டம் வந்தாலும் இப்படித் தவறாக பயங்கரமாக பயன்படுத்தப்படும். இங்கு சட்டமே பயங்கரத் தவறாக இருந்தது. நல்லவேளை அமைச்சர்களுக்குள் ஒத்திசைவு ஏற்படாமல் போயிற்று. குறிப்பாக பா சிதம்பரம் எதிர்த்திருக்கிறார். அவரிடம் எவ்வளவு சொத்து உள்ளது பாருங்கள். ஒரே ஒரு கேஸ், டோட்டல் சொத்தும் போயிருக்கும். அதனால் அவர் குறுக்கிட்டு மறுத்து வாதிட்டிருப்பார். ஆனால் பண்ணையார்களை மட்டுமல்ல எளிய மத்திய வர்க்க குடும்பங்கள் பலவும் இச்சட்டத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். உ.தா, பெற்றோரின் சொத்தில் மகனுக்கும் மகளுக்கும் சம பங்குண்டு. இப்போது இச்சட்டத் திருத்தம் வந்திருந்தால் சொத்து மூன்றாக உடையும். ஒரு குடும்பத்தில் 3 ஆண்கள் ஒரு மகள் என்றால், மூன்று பேருக்கும் விவாகரத்தானால் எத்தனைத் துண்டுகளாக உடையும்? அப்பெண்ணின் திருமணமும் இதனால் பாதிக்கப்பட்டுருக்கும்.
இது போன்ற ஆண் விரோத சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவதில் காங்கிரஸுக்கு நீண்ட கால வரலாற்றுச் சிறப்புண்டு - 1955இல் இவர்கள் கொண்டு வந்த இந்து திருமணத் திருத்தச் சட்டமே என்னைப் போன்ற எத்தனையோ பேர்கள் இன்று துன்புற்று நீதிமன்றத்துக்கும் தெருவுக்குமாக பேய்களைப் போல ஆன்ம சாந்தியின்றி அலையக் காரணம். 1983இல் சட்டப்பிரிவு 498A ஐ இதே காங்கிரஸ் கொண்டு வந்தது - விளைவாக இதுவரை இந்த பிரிவின் கீழ் விவாகரத்தின் போது 33 லட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 மாத குழந்தை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கைது பண்ணப்பட்டதும் இதே பிரிவின் கீழ் தான். இந்த 33 லட்சம் கைதுகளில் 10% மட்டுமே உண்மையான வழக்குகள், மீதம் போலி வழக்குகள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனாலே உச்சநீதிமன்றம் இந்த சட்டப்பிரிவை சட்ட பயங்கரவாதம் என அழைத்து சாடியது. ஆனால் இன்றும் இச்சட்டம் நிலுவையில் உள்ளது. காங்கிரஸ் செய்த பயங்கரவாதத்தின் விளைவாக எத்தனையோ பெண்கள், குழந்தைகள், முதியோர் பிணையின்றி 2 வருடங்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இந்நிலையில் 2013இல் நிறைவேற்றப்படாத திருமணச் சட்டத்திருத்தத்தை 2015இல் பாஜக அரசிடம் மீண்டும் கொண்டு பந்து பரிசீலிக்கும்படி பெண்கள் அமைப்புகள் கேட்டார்கள். ஆனால் பாஜக காங்கிரசைப் போல போலி பெண்ணியவாதிகளின் கட்சி அல்ல. அதனால் இந்த சட்டத்திருத்தத்தைத் தூக்கி குப்பையில் போட்டார்கள். இதைப் படித்த போது 2014இல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது நல்லதே எனத் தோன்றுகிறது. சும்மாவா, 33 லட்சம் ஜனங்களின் சாபம் இது, ஆண் பாவம், முதியோரின் சாபம், குழந்தைகளின் சாபம் அது!
காங்கிரஸ் திரும்ப ஆட்சிக்கு வந்திருந்தால் வீரப்ப மவுலி, கபில் சிபல் வகையறா இச்சட்டத்தை நிச்சயமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இருப்பார்கள். அத்துடன் நம் எல்லாருடைய சோலியும் முடிந்திருக்கும். பாஜக கொண்டு வரும் சட்டத்திருத்தங்கள் முஸ்லீம்கள், விவசாயிகளை, அடித்தட்டு வியாபாரிகளை தெருவுக்கு கொண்டு வரும் எனில் காங்கிரஸின் ஆண் விரோதக் கொள்கை சட்டத்திருத்தங்களோ திருமணமான ஆண்களை மட்டும் காயடித்து சிறையில் தள்ளி சொத்தையும் பறிக்கும். காங்கிரஸுக்கு ஏனோ ஆண்கள் என்றாலே ஆகாது என நினைக்கிறேன்.
பி.கு: பாஜக இந்த கொடூர 498A சட்டப்பிரிவையும் தூக்கி எரியும் அடுப்பில் போட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்
கருத்துகள்