முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்மையை சொன்னேன்



வேறு ஒருவரின் பொங்கல் வாழ்த்துகள் பதிவில் நண்பர் பால்ராஜ் துளசிரா இப்படி எழுதியிருக்கிறார். இதைப் போல வேறு பலர் என்னிடம் போன் செய்து சொல்லுகிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த போதும், என்னுடைய நூல் வெளியீட்டின் போதும் சொன்னார்கள். புத்தகக் கண்காட்சி வெளியில் ஒரு இலக்கிய அமைப்பை சேர்ந்த நண்பர் என் கையைப் பற்றிக் கொண்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் - "உங்கள் எழுத்தில் உண்மை இருக்கிறது. படிக்கும் போது அது வெளிப்படையாகவே தெரிகிறது." 

மனித உறவுகள், நடத்தை, குடும்ப உறவுகள் பற்றி பாசாங்கின்றி எழுதுகிறேன் என்றார். "அப்படி எழுதுவதால் சிலர் என்னை வெறுக்கக் கூடும் என்றறிவேன். ஆனால் அது என் மீதானது, ஒரு கருத்தின் மீதானது என்றும் அறிவேன். அதனால் பிரச்சினையில்லை." என்றேன்.

வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாதோர் நேரடியாக என்னைக் காணும் போது வந்து பாராட்டும் போது வெளிப்படையாகப் பேசுவோருக்கு இங்கு எந்தளவுக்கு பஞ்சம் நிலவுகிறது, சமூகவலைதள யுகத்தில் status quoஐ ஒட்டி எழுதுவோராக நாம் எந்தளவுக்கு மாறிவிட்டோம் என வியப்பேற்படுகிறது. போனிலோ நேரிலோ பேசும் கருத்துக்களை வெளிப்படையாக எழுத அஞ்சுகிறார்கள் - தம்மை பிற்போக்கு என சொல்லிவிடுவார்களோ எனும் அச்சம். இந்த உலகில் எத்தனையோ பித்தலாட்டங்கள் உள்ளன. அவற்றை நாம் வெளிப்படையாகப் பேசுவதே அவற்றை எதிர்க்கும் வழி. பார்ப்பனிய, சனாதன, இந்துத்துவ எதிர்ப்பு மட்டுமே எதிர்ப்பு அல்ல. உங்கள் பக்கத்தில் உள்ள அவலங்களைப் பற்றி பேசுவதும் தான்.

இனிமேலும் இப்படித்தான் இருப்பேன்.

ஆனால் யாருடைய கண்ணையும் நான் திறப்பதாக நம்பவில்லை. ஆனால் மக்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றை, அவர்களுக்கு இதுதானே நிஜம் எனத் தோன்றும் ஒன்றை, ஆம் அது தான் வேறொன்றுமில்லை என நான் சொல்கிறேன். எனக்குத் தெரிந்த அளவில் இப்போதைக்கு இதுதான் சரி என்கிறேன். அதைத் தாண்டி எல்லாராலும் ஏற்கத்தக்க, எல்லாருடைய நெஞ்சையும் நக்குகிற கருத்துக்களில் எனக்கு ஆர்வமில்லை, அவை நமக்குத் தேவையுமில்லை என்கிறேன். அரசியல் சரித்தன்மை தேவையில்லை என்கிறேன்.

 அவ்வளவு தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...