"இந்தப் பிரச்சினையில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இதுவே அந்த எழுத்தாளர் பெண்கள் மேல் “கை” வைத்திருந்தால் தமிழ்ச் சமூகமே கொழுந்து விட்டு எரிந்திருக்கும். ஆண் உடம்பு என்றால் அத்தனை இழிவாக, கேவலமாகப் போய் விட்டது போலும்!" - சாரு நிவேதிதா
# என்னவெல்லாம் நடந்திருக்கும்?
மகளிர் அமைப்புகள் பேரணி நடத்தி இருக்கும்.
டிவிட்டர், பேஸ்புக் போராளிகள் கொந்தளித்து உடனே அவர் எல்லா விருதுகளையும் திரும்பக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டிருப்பார்கள்.
பெண்ணை சீரழித்தவனுக்கு வீடு கொடுத்திருக்கிறதே திமுக அரசு? ஸ்டாலினும் இதற்கு கூட்டாளியா? என்றெல்லாம் அண்ணாமலையும் சீமானும் கேட்டிருப்பார்கள்.
பெண்ணியவாதிகள் இதைக் கண்டித்து மலைமலையாக எழுதி இருப்பார்கள்.
அடுத்த நாளே ஆங்கில ஊடகங்களில் முதல், இரண்டாம் பக்கங்களில் செய்தி வந்திருக்கும்.
மூன்றாவது நாள் சர்வதேச செய்தி ஆகியிருக்கும். டிவிட்டர் பற்றி எரிந்திருக்கும்.
சின்மயி துவங்கி எல்லா சினிமாக்காரர்களும் கத்தி கபடாவுடன் களமிறங்கி போராட்டக் குரல் எழுப்பி இருப்பார்கள்.
சன் டிவி, ஜெயா டிவி என எல்லா சேனல்களிலும் செய்தி வருவதுடன் விவாத நிக்ழ்ச்சிகளும் நடந்திருக்கும். யுடியூப் சேனல்கள் லைவ் பண்ணியிருப்பார்கள். "ஒரு பிஞ்சு பெண்ணுடலை அந்த ராட்சசன்..." என நக்கீரன் கோபால் கையைப் பிசைந்தபடி ஆரம்பித்து "இவனுங்கள் எல்லாம் நடுரோட்டில் விட்டு சுட்டுக் கொல்லணும் சார்" என முடித்திருப்பார்.
ஒரு வாரம் முடியும் போது எழுத்தாளர் கைதாகி, கிரைம் செல்வராஜும் "இந்த பையன் வந்து சம்பவம் நடந்த அன்னிக்கு காலையில" என கதை சொல்லி இருப்பார்.
இரண்டாவது வாரம் "அப்பாடா, எம் சமூகப்பெண்டிரின் மானத்துக்கு நீதி கேட்டுவிட்டோம்" என தமிழ் சமூகம் பெருமூச்சுடன் புரண்டு படுத்திருக்கும்! மறுபக்கம் அவன் குஞ்சை வெட்டியிருக்க வேண்டாமா என குரல்கள் ஒலித்தபடி இருக்கும்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் என்பதால் பேஸ்புக் வராந்தாவில் பரஸ்பரம் கொந்தளித்துவிட்டு அடங்கி விடுவோம்!
- ஆர். அபிலாஷ்
கருத்துகள்