முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் குடிப்பதை இயல்பாக்கம் செய்வது





இன்றைய நகரமயமாக்கப்பட்ட சூழலில் பெண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள், சிறுமிகள் குடிப்பது, புகைப்பது, போதை மருந்தை பயன்படுத்துவது பரவலாகி வருகிறது. அங்கங்கே குடித்துவிட்டு சாலையை மறித்து தகராறு பண்ணும், சாலை விபத்தை ஏற்படுத்தும், போதை மருந்தை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தற்கொலை முயற்சி பண்ணும் பெண்களைப் பற்றின செய்திகளைப் பார்க்கிறோம். அனேகமாக எல்லா கார்ப்பரேட் ஆசிரமங்களுக்குள்ளும் போதை மருந்து பழக்கத்தில் சிக்கிய ஏகப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். இச்செய்தியும் நமக்குத் தெரியும். சாலை முனையில் நின்று கப்பு கப்பென்று சிகரெட்டை ஊதித்தள்ளும் சிறுமிகளை நான் பெங்களூரில் பரவலாகப் பார்க்கிறேன். பெங்களூரில் உள்ள மதுக்கடைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். நான் சந்திக்கும் இளம்பெண்களுக்கு பாதி பேர் பக்கத்தில் வந்தாலே சிகரெட் நெடி அடிக்கிறது. சென்னையிலும் பப்களில் இளம்பெண்கள் குடித்துவிட்டு ஆடுவதில்லையா? வீட்டில் வைத்து குடிக்கும் பெண்கள் இல்லையா? போதை மீட்பு மையம் ஒன்றிற்கு ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக சென்றிருந்த போது பாதிக்குப் பாதி இளம்பெண்களைக் கண்டேன். (போதை மருந்து பழக்கமானது குடியுடன் அல்லது குடிக்கு அடுத்தபடியாகவே ஆரம்பிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.) ஆனால் இதைப் பற்றின விவாதங்களை நீங்கள் டிவி, அச்சு ஊடகங்கள் எங்குமே காண முடியாது. இதைப் பேசினாலே நாம் பிற்போக்காளர் என முத்திரை குத்தப்பட வாய்ப்பதிகம். ஒதுங்கி நின்று இப்பெண்களைப் பார்த்துபொம்பளைப் பிள்ளையா இருந்தும் எப்படி பப் அடிக்குது?” என பொருமி விட்டு அதில் தலையிடாமல் போவதே நம்மூர் வழக்கம். இந்த பொதுமக்களின் ஒரு பகுதியாகவே நமது எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களும் வருகிறார்கள். ஆக ஊடகங்களில் இருந்து பொதுமக்கள் வரை பெண் போதையாளர்களை கண்டுகொள்ளாமல் விட வேண்டும், ஆண் குடித்துவிட்டு சலம்பிக் கொண்டு போனால் அவனை குடிகாரன் என கேவலமாகப் பேச வேண்டும் என்பதே நடைமுறையாக உள்ளது. ஏன் இந்த தயக்கம்?  

யோசித்துப் பாருங்கள் - குடிப்பது, போதை மருந்தை பயன்படுத்துவதற்கும் முற்போக்கு சிந்தனைக்கும் என்ன சம்மந்தம்? இதைப் பேசினால் நவீன பெண்கள் சமூக அவமதிப்பை சந்திப்பார்கள் என்றால் குடிக்காமல் இருப்பது, போதை மருந்துகளைத் தவிர்ப்பது அப்பெண்களுக்குத் நலம் பயக்கும் தானே? ஆணுக்கு பாதகமாக இருக்கும் ஒரு பழக்கம் பெண்ணுக்கு மட்டும் ஏன் சுதந்திரமாக, சமத்துவமாக, முன்னேற்றமாக, முற்போக்காக பார்க்கப்படுகிறது? நாம் இந்த பாசாங்கைப் பற்றி விவாதிக்க வேண்டும்.


ஊடகங்களுக்கு முதலில் வருகிறேன். அண்மையில் ஒரு பத்திரிகையாளர் என்னை குடும்பநல நீதிமன்ற விவகாரங்களைப் பற்றி பேட்டி எடுத்தார். அவர் அப்போது தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் அருள் துமிலனிடம் பேட்டி எடுத்து அதை ஒரு வெகுஜன பத்திரிகையில் பிரசுரிக்க கொண்டு சென்ற போது அதைப் போட முடியாது என மறுத்துவிட்டார்கள் என்பதை சொன்னார். “ஏதாவது பெண்கள் பிரச்சினைன்னா எழுதி எடுத்து வாங்க, போடலாம். ஆம்பளைங்க கவலைகளை எல்லாம் போட முடியாதுங்க.” என்று எடிட்டர் சொல்லியிருக்கிறார். நான் அவரிடம் சொன்னேன், “நீங்கள் அதை இலக்கிய, இடைநிலை இதழ்களில் கூட போட முடியாதுங்க. வணிக இதழ்களுக்காவது வணிக நோக்கம் இருக்கும், ஆனால் இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களை நடத்துவதும் நவமுதலாளித்துவ சிந்தனை தானேஅதனாலே அவர்களும் இது பெண்களுக்கு எதிரான சிந்தனை என்று கூறி புறக்கணித்துவிடுவார்கள். ஆண்களைப் பற்றி பேசினாலே அது பெண்களுக்கு எதிரானதாக எப்படி ஆகும் என யோசிக்க மாட்டார்கள்.” அண்மையில் ஒரு டிவி விவாத நிகழ்ச்சி இயக்குநரிடமும் இதைப் பற்றி விசாரித்த போது தமது நிறுவனத்தின் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே நிகழ்ச்சியை எடுக்க வேண்டி இருக்கிறது, அதில் ஒரு முக்கிய விதி பெண்களை விமர்சிக்கும் நோக்கில் எதையும் நிகழ்ச்சியில் பேசக் கூடாது என்பது என்றார். பேஸ்புக்கில் கூட நான் இதை பிரசுரித்தால் நான்கு பெண்கள் போய் ரிப்போர்ட் அடித்தால் அதைத் தூக்கிவிட்டு என்னையும் தடை செய்துவிடுவார்கள். அட ஏன் இப்படி? நவமுதலாளிகள் ஏன் இவ்வளவு தீவிரபெண்ணியவாதிகளாகஇருக்கிறார்கள்? சந்தை பொருளாதாரம் தான் காரணம்.


இன்று பெண்கள் நவதாராளவாத சந்தையின் பிரதான வாடிக்கையாளர்களாக மாறி வருகிறார்கள். ஆண்கள் நீண்ட காலமாகவே இருக்கிறார்கள், ஆனால் பெண்கள் புது வரவு. அதனால் அவர்களை விமர்சித்து நுகர்வில் இருந்தோ, சந்தையில் பங்கேற்பாளர்களாகவோ செயல்படும் அவர்களை ஊக்கமழிக்க கூடாது என நவமுதலாளிகள் நினைக்கிறார்கள். அவர்களுடைய இந்த வணிக நோக்கமே இன்று பால் சமத்துவமின்மையாக, ஆண்கள் மீதான தொடர் அவமதிப்பாக மாறியிருக்கிறது


போதைப் பழக்கத்தை எடுத்துக் கொண்டால் பெண்கள் எந்தளவுக்கு அதிக அளவில் குடிகாரர்கள் ஆகிறார்களோ அந்தளவுக்கு மது உற்பத்தியாளர்கள், கடைகாரர்கள், பப்கள், இந்த அமைப்புகளை சார்ந்திருக்கும் உணவகங்கள், பொழுதுபோக்கு கேளிக்கை இடங்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், கார் நிறுவனங்கள் என பலரும் இரட்டிப்பு லாபமடைவார்கள் (பெண்கள் வெளியே வந்து சமூகமாக்கல் செய்தாலே இந்த பண்டங்கள் அதிகமாக விற்பனையாகும், சமூகமாக்கலுக்கு மது போதை ஒரு முக்கிய ஊக்கி.). ஆக நவமுதலாளிகளின் இன்றைய அடிப்படையான தேவை பெண்கள் குடிப்பதை, புகைப்பதை இயல்பாக்குவதே. நவமுதலீட்டிய லாப நோக்கு சிந்தனையே நமது தமிழ் சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்களின் நுண்ணுணர்வாகவும் உருமாறுவதால் அவர்களும் இந்த இயல்பாக்கம் அவசியம் என நினைக்கிறார்கள். ஊடகவியலாளர்கள், ஊடக முதலாளிகள் என பலரும் இந்த இயல்பாக்கத்துக்காக வேலை செய்தாக வேண்டும் என மறைமுக அழுத்தம் உண்டு. ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் முடியாது. அதனால் அதற்கு பெண்ணுரிமை, பெண் சமத்துவம், பெண்கள் எல்லாரும் பாவம், குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அவர்களை வைத்து இதை பொருட்டாக்கிப் பேசலாகாது, இது ஒரு பிரச்சினையே இல்லை எனப் பேசுவார்கள். ஆனால் இவர்களுடைய சொந்த மகளோ தங்கையோ போதை அடிமையானால் என்ன செய்வதென தத்தளித்துவிட்டு அதை அப்படியே மறைத்துவிடுவார்கள். போதைப் பழக்கம் ஆணைப் போன்றே பெண்ணையும் சிறுகசிறுக அழித்து செயல்படத் தகுதியற்றவர்களாக ஆக்கும். ஆண்களை விட சற்று கூடுதலாகவே இது பெண்களை பாதிக்கும் என்கிறது அறிவியல். ஆனால் இது நவமுதலீட்டிய சந்தையின் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் நாம் இதைப் பேசுவதே பாவம் என நினைக்கத் தலைப்படுகிறோம்.


என்னுடைய கோரிக்கை எல்லாமே பெண் குடிக்கிறாள், பெண் புகைக்கிறாள் என்பதாலே அதை இயல்பாக்காமல் இருக்க வேண்டும். அதைப் போலவே அதை மிகைப்படுத்தி வானுக்கும் பூமிக்குமாக குதிக்காமலும் இருக்க வேண்டும். இதை ஒரு சமூகப்பிரச்சினையாக, உடல்நல சீர்கேடாக மட்டுமே பேச வேண்டும். முக்கியமாக பால் சமத்துவத்துடன் இப்பிரச்சினையை அணுக வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...