கிஷோர் கெ ஸ்வாமி எவ்வளவு பெரிய ஊடக புரோக்கர், மிரட்டிப் பணம் பறிக்க ஆட்களை செட் செய்யும் ஆசாமி என இப்போது வெளிவந்திருக்கும் நிலையில் சில விசயங்கள் விளங்குகின்றன:
கிஷோர் பாஜக ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டாலும் அவருக்கு எந்த குறிப்பிட்ட கொள்கையும் இல்லை. குடி / போதைப்பொருள், அதிகாரம், பணம் மட்டுமே அவரது மூச்சிருக்கும் மூன்றெழுத்து. அவருக்கு அனேகமாக எல்லா கட்சிகளுக்குள்ளும் ஆட்கள் இருக்கிறார்கள்.
இந்த 'ஆட்களும்' இவர் சேற்றை வாரியடித்தும், தன் அரசியல் தொடர்புகளையும் ஊடக அடிமைகளையும் காட்டியும் அவர் மிரட்டி சம்பாதித்தவர்களே.
இந்த நபர் இத்தனைக் காலமும் தனிமனித அவதூறுகளில் ஈடுபட்டது அவரது அரசியலுக்காகவோ, ஆபாசமான, கேவலமான மனநிலையாலோ அல்லது மனப்பிரச்சினையினாலோ அல்ல - ஒவ்வொன்றும் ஒரு டீலிங். "உங்க பொண்ணை நாங்க தூக்கிட்டோம். அதனால நீங்க என்ன பண்ணுங்க..." என போன் போடுவார்களோ அந்த பணியை இவர் அவதூறு செய்து ஆற்றி வருகிறார்.
பலருக்கும் இவர் பயன்பட்டு வந்ததாலே இத்தனை ஆண்டுகளாக நிலைத்திருக்கிறார் (அதாவது உயிருடன் இருக்கிறார்).
இவரை திமுக அரசு கைது செய்தது கலைஞரை அவதூறு செய்ததற்காக மட்டும் இருக்காது - வேறு எங்கோ பெரியாக கை வைக்கப் பார்த்து அதற்காக மேலிடத்துக்கு புகார் செல்ல இந்த அவதூறை ஒரு காரணமாக வைத்து தூக்கி இருக்கிறார்கள்.
வெளியே வந்த பின்னரும் கிஷோருக்கு 'மவுசு' குறையவில்லை.
பணம் வரும் வழியை நோக்கி விளக்குப் பிடித்து அழைத்துப் போகிற 'தேவதூதன்' என்பதாலே கொள்கை முரண் கொண்டோரும் அவரிடம் இணக்கமாக இருக்கிறார்கள். இன்று தமிழ் தேசிய, திராவிட, தி.க என எத்தனையோ கொள்கை கொண்டுள்ளவர்களின் சேனல்களின் விவாதங்களே கிஷோர் கட்டுப்படுத்தவே வாய்ப்பதிகம்.
ஒவ்வொரு சேனலிடமும் பேரம் பேசி இன்னின்னாருக்கு அதனால் ஆபத்து வராமலோ / லாபம் ஏற்படவோ ஏற்பாடு பண்ணிக் கொடுப்பதே அவரது பணி எனும் போது இன்று தினமும் நடத்தப்படும் பல சேனல் விவாதங்கள் ஒரே பேட்டர்னில் இருப்பதைப் பார்த்து அது ஏன் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. நாம் இன்று மிகுந்த மரியாதையுடன் நோக்கும் சில நெறியாளர்கள், கருத்தாளர்களும் கஷோரிடம் இருந்து வாங்கிக் குடிப்பவர்களாகவே இருக்க வேண்டும்.
கிஷோரைப் போன்றவர்கள் கூலிப்படை தரகர்களைப் போன்றவர்கள் ("பட்டியல்" கொச்சின் ஹனீபா). பரத்தும் ஆர்யாவும் செத்தாலும் புதிதாக டீ கிளாஸ் கழுவும் பையனை இறக்கிவிட்டு தொழிலைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அம்பலமாவது கிஷோரைப் போன்றவர்களுக்கு கூடுதலான பலமாகுமே ஒழிய சீரழிக்காது (எதாவது இருந்தால் தானே அழிக்க?). ரவீந்திரன் துரைசாமியைப் போல கெத்தாக "ஆமா வாங்குவேண்டா, என்னாடா அதுக்கு இப்ப?" என பேசிக் கொண்டிருப்பார்கள்.
மாதேஷ், சவுக்கைப் போல இவர்களுக்கு நன்மதிப்பு அவசியமில்லை. பாதரச மனிதர்கள் இவர்கள். நசுக்கவே முடியாது. தப்பித்து ஓடிவிடுவார்கள். பார்க்க லூஸைப் போல இருப்பதும் ஒரு முகமூடியே. கிறுக்கனைப் போல நடந்து கொள்வதும் தம் வியாபாரத்துக்கான வேடமே.
தமிழின் வணிக எழுத்தாளர்கள் கூட இந்தளவுக்கு தம் ஒவ்வொரு சொல்லையும் விற்று காசாக்கியிருக்க முடியாது. இத்தனைக்கும் கிஷோர் வகையறாவுக்கு எதையும் யோசிக்கவும் எழுதவும் தெரியாது. ஆனால் வேறேதோ தெரிந்திருக்கிறது.
கிஷோர் நிஜத்தில் ஏன் கைதானார் என யாராவது இனி வீடியோ போட்டால் தான் உண்டு.
கருத்துகள்