முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர். அபிலாஷுடன் நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்





உங்களில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது. அந்த நாவலை உங்களால் மட்டுமே எழுத முடியும். அதை நீங்கள் எழுதாத பட்சத்தில் அது இந்த உலகத்துக்கும், உங்கள் பண்பாட்டுக்கும் ஒரு நட்டமாக மாறும். அதை எழுத நீங்கள் ஒரு எழுத்தாளனாக இருக்க அவசியம் இல்லை என்றாலும் கூட அதை எழுதுவதற்கான ஒரு அடிப்படையான பயிற்சி, எழுத்து வடிவத்தின் நுட்பங்கள் பற்றின அறிவு, வாசிப்பு, நேர நிர்வாகத் திறன், ஒழுக்கம் வேண்டும். இவை அனைவரிடமும் இருப்பதில்லை. அதே நேரம், உங்களிடம் எழுத ஆர்வம் மட்டும் உண்டெனில், மேற்சொன்ன தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளவும் உங்கள் பெயரை நீங்கள் வாழும் காலத்திலேயே மக்கள் நினைவில் ஆழமாக பதிக்கத் தக்க நாவலொன்றை உங்களால் எழுத நிச்சயமாக முடியும். அதற்கான பயிற்சி அளிப்பதும், அந்த இடத்தை நோக்கி உங்களை அழைத்து செல்வதுமே இந்த வகுப்பின் குறிக்கோள்.


நாவலே நம் காலத்தில் அதிகம் படிக்கப்படும் கதைவடிவம். சிறுகதைகளைக் கொண்டு உங்களால் உடனடி கவனத்தைப் பெற முடியும் என்றாலும் சிறுகதைத் தொகுப்புகளை விட நாவல்களே புத்தக சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்றன. பெரும் கவனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அரிதாகவே ஒரு சிறுகதைத் தொகுதி பரவலான வாசகர்களைப் போய் அடைகிறது. அடுத்து, நீங்கள் எதிர்காலத்தில் திரைக்கதையாளராக விரும்புபவர் என்றாலும் ஒரு பெரிய கதைக்கட்டமைப்பு, பாத்திரங்களின் பிரஞ்சத்தை உருவாக்கவும், தொடர்ச்சியாக எழுதவும், நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், புனைவின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும் முக்கியமான பயிற்சியாக நாவலை எழுதிப் பார்ப்பது இருக்கும் (இரண்டின் விதிமுறைகளும் அடிப்படையில் ஒன்றுதான்.) நீங்கள் சிறுகதைகள் எழுதி பழக்கம் கொண்டவர் என்றாலோ பேஸ்புக்கில் சுவைபட எழுதும் பதிவர் என்றாலோ, அடுத்த கட்டமாக நாவலாசிரியராக விரும்பும் பட்சத்தில் உங்களுக்கு அடிப்படையான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. இந்த வகுப்பு உங்களுக்கானதே

இத்தகைய வகுப்புகள் ஆங்கிலத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மேலைநாடுகளில் அதிகமாகவும் (MFA in Creative Writing), தற்போது இந்தியாவில் கல்லூரிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்படுகின்றன. தமிழில் கடந்த சில ஆண்டுகளாக் பயிற்சிப் பட்டறை வடிவிலும், காணொளி வழியாகவும் நடந்து வருகின்றன. ஆனால் கல்விப்புல முறைமையுடன் செறிவான பாடத்திட்டத்துடன் கிட்டத்தட்ட MFA போன்றே நடத்தப்படும் நாவல் எழுத்து வகுப்பாகநாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்இருக்கும்.   




நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்வகுப்பு பங்கேற்பாளர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் மாலை வேளையில் ஒரு மணி நேரம் எனும்படி மொத்தமாக இரண்டு மாதங்கள் (மொத்தமாக 16 மணிநேரங்கள்) இணையவழியில் (gmeet) நடத்தப்படும். இவ்வகுப்பு தொடர்ச்சியாக வருடம் தோறும் ஆறு முறைகள் நடத்தப்படும். முதல் வகுப்பு ஜூன் 10, 2023 முதல் ஆரம்பமாகும். சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மாலை 6-7 ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்.  

இதில் எந்த வயதினர் வேண்டுமெனிலும் கலந்துகொள்ளலாம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...